Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#93
தாயகத்தின் முன்னணிப் பாடகர் சுகுமார்

நேர்கண்டவர் - கீர்த் காண்டீபன்

உதவி - இன்பன்

புலம்பெயர்ந்து வாழ்கின்ற தாயக உறவுகளுக்காக தமிழீழ முன்னணிப் புரட்சிப் பாடகர்
திரு. சுகுமார் அவர்களுடன் உணர்வுப் பகிர்வு ஒன்றை மேற்கொண்டோம்.
வணக்கம் திரு. சுகுமார் அவர்களே


கேள்வி: தமிழீழத் தாயகத்தில் சிறந்த பாடகர்களுள் ஒருவராக விளங்கும் உங்களின் இளமைக்கால அனுபவம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?


பதில்: என்னுடைய தந்தையார் ஒரு நடிகராகவும் பாடகராகவும் இருந்தார். இளமைக்காலத்தில், அதாவது எனக்கு 13 வயது இருக்கும் போது அவருடன் நான் ஒரு நிகழ்வுக்காகச் சென்றிருந்தேன். எனது தந்தையிடம் உங்களுடைய மகனையும் ஒரு பாடல் பாட அழைக்கும்படி நிகழ்வில் இருந்தவர்கள் வற்புறுத்தினார்கள். அந்த நேரம் நான் 'மருத மலை மாமணியே முருகையா' என்ற பாடலினைப் பாடினேன். அன்றிலிருந்து எனக்கு கடவுள் கொடுத்த கொடை மாதிரி அதிலிருந்து தொடங்கி இன்று மட்டும் ஒரு பாடகனாக வாழ்ந்து வருகிறேன்.


கேள்வி: தங்களுடைய இசைத்துறை பின்னணி பற்றிக் குறிப்பிட்டுள்ளீர்கள். தாங்கள் மிகவும் சிறப்பான முறையில் இசைஞானம் மூலமாக சுருதிச்சுத்தம் மற்றும் இசைத்துறை நுட்பங்கள் அனைத்தையும் அறிந்திருக்கின்றீர்கள் என்பதை தங்களுடைய பாடல்கள் விளக்குகின்றன. இவற்றை எவ வாறு கற்றுக்கொண்டீர்கள்?


பதில்: "பாவற்கொட்டை விதைத்தால் சுரைக்காயா முளைக்கும்?" என் தந்தையார் ஒரு பாடகர். அந்த ஞானம் தான் எனக்கும் இயற்கையாகவே வந்தமைந்துள்ளது. எனக்கு மட்டுமல்ல என்னுடைய அண்ணனும் கூட ஒரு பாடகர். அவர் "மாண்டுபோன மைந்தர்களே", "சாகத்துணிந்தவர் கூட்டம்" என்பன போன்ற பல பாடல்களை பாடியிருக்கின்றார். எனது அண்ணனின் மகன் வசிகரன் அவர்கள் "களத்திலிருந்து அம்மாவிற்குக் கடிதம்" என்ற பிரபலமான பாடலைப் பாடியிருக்கிறார். இப்படியாக எமது குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரும் பரம்பரை பரம்பரையாக பாடகராகவும் கலைஞர்களாகவும் வாழ்ந்து கொண்டு வருகிறோம். இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்பும் விடயம் என்னவென்றால் சங்கீதத்தைப் பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. அதாவது, சங்கீதம் என்று குறிப்பிட்டு எவற்றையுமே நாம் படித்து அறிந்துகொண்டதில்லை. கேள்வி ஞானம் மூலமாகவே நாம் இசையில் ஈடுபாடு கொண்டோம். சின்ன வயதிலிருந்து நாங்கள் பல சின்னச்சின்ன நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு பாடிவர ஆரம்பித்தோம். அதிலிருந்து எங்களுக்கு இறைவனுடைய கொடையோ என்னவோ எந்தப் பாடலைப் பாடச் சொன்னாலும் பாட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஒரு புதிய பாடலை எம்மிடம் தந்து இப்படித்தான் பாட வேண்டும் என்று பாடச் சொன்னாலும் அப்படியே பாடி முடித்திடுவோம். இவ வாறு இருந்த போதிலும் ஒரு ஆசிரியரிடமாவது முறைப்படி சங்கீதத்தைக் கற்க எமக்கு வசதியிருக்கவில்லை. எங்காவது ஏதாவது ஒரு பாடலைப் கேட்டாலும் அது என்ன இராகம் என்று சொல்லுமளவிற்கு கேள்விஞானம் எமக்கு கைகொடுத்து வளர்த்து விட்டது. ஆயினும், இன்றைய நிலை வரை நாம் வளர்ந்திருப்பதற்கு காரணம் எதுவென்று கேட்டால் எங்கள் தமிழீழப் போராட்டம் எங்களை வளர்த்திருக்கிறது என்றே கூறவேண்டும்.


கேள்வி: ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய இசைநுட்பங்கள் அனைத்தையும் கேள்வி ஞானம் மூலமே பெற்றுக்கொண்ட தாங்கள், ஆரம்பத்தில் மேடைப்பாடகராக இருந்து இப்பொழுது விடுதலைப் பாடகராக மாறியிருப்பதற்கான பின்னணி என்ன?


பதில்: ஒவ வொரு தமிழனுக்கும் இந்த மண்ணிலே ஒவ வொரு கடமையிருக்க வேண்டும். எங்களுடைய சகோதரர்களில் பலர் எமது மண்ணின் விடிவுக்காகப் போராடுகிறார்கள். நாங்கள் எங்கள் பாடல்கள் மூலமாகவாவது அந்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும். பழைய காலங்களை எடுத்துப் பார்த்தால், புலவர்கள், பாடகர்கள் என்போர் விடுதலைப் போராட்டத்துக்காகப் பல பங்களிப்புக்களைச் செய்து வந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த புரட்சிப் பணிகளுடன் ஒப்பிடும் போது நாங்கள் இப்போ மிகச்சிறிய தொண்டைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். பாடல்கள் மூலம் விடுதலைப் போராட்டத்திற்கு மக்களை எழுச்சி கொள்ளச் செய்யவேண்டிய இப்பணியானது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழனுக்கு முக்கியமாகச் செய்ய வேண்டிய ஒரு தொண்டு ஆக நினைத்தே இதனைச் செய்து வருகின்றோம்.


கேள்வி: இவ வளவு காலமும் விடுதலைப் பாடல்களைப் பாடி வரும்போது ஏற்பட்ட அனுபவங்களையும் குறிப்பிடத்தக்க நெகிழ்வுூட்டும் நிகழ்வுகளையும் குறிப்பிட முடியுமா?


பதில்: மிக அண்மையில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு. என்னவென்றால், இப்போ எங்களுடைய போராளிகளுக்காக அதாவது இரவும் பகலுமாக கண்விழித்து எங்கள் மக்களைக் காப்பாற்றும் அந்தப் போராளிகளுக்காக, நாங்கள் ஒரு நிகழ்வு நடாத்தினோம். தமிழர் திருநாளை தைத்திருநாளை முன்னிட்டு விசேடமாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வின் போது அவர்களைச் சிரிக்க வைக்க வேண்டுமென்பதற்காக நாங்கள் தவளைமாதிரியும் நாய் மாதிரியும் நாங்கள் ஆங்கிலத்தில் கதைத்து, நகைச்சுவையாக நடித்தோம். இப்படியாக நானும் எனது நண்பன் சாந்தன் அவர்களும் பலவிதமான நகைச்சுவை நடிப்புக்களால் அந்தப் போராளிகளைக் குது}கலிக்க வைத்தோம். போராளிகள் தங்களை மறந்து சிரித்து மகிழ்ந்த அந்தக் காட்சிதான் எங்களால் மறக்க முடியாத நிகழ்வு.


கேள்வி: போராளிகளுக்கு மட்டுமல்ல யுத்த அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையை தேற்றும் வகையில் தாங்கள் பல இசைநிகழ்ச்சிகளைச் செய்து வருகின்றீர்கள். இந்த வகையில் மிகப் பிரபலமாக மேற்கொண்ட நிகழ்வுகள் பற்றி எம்முடன் பகிர்ந்துகொள்வீர்களா?


பதில்: ஆம். இப்படியான பொதுமக்களுக்கான இசை நிகழ்வுகள் பலவற்றை நாம் நடாத்தி மக்கள் மனங்களில் எழுச்சியையும் விழிப்புணர்வையும் விதைக்கும் அதேவேளை அவர்களை மகிழவும் வைக்கிறோம். இவ வாறாக நிகழ்ச்சிகளின் போது குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று என்னவென்றால், ஒரு மேடையில் நான் பாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது "சாந்தனின் மகனும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டார்" என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்தச் செய்தியைக் கேட்டதும் நான் என்னுடைய மகனும் இந்த மண்ணுக்காகப் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று பெருமிதத்தோடு அந்த மேடையில் கூறிவிட்டு, "வீட்டுக்கொரு மைந்தனே விரைந்து வா" என்ற பாடலைப் பாடினேன். அது என்னால் மறக்க முடியாதது. அடுத்த நாள் என்னுடைய மகனும் இந்தப் போராட்டத்தில் இணைந்து விட்டார்.


கேள்வி: தமிழீழத் தாயகத்தில் பிரபல பாடகராக இருக்கும் தங்கள் தங்களுடைய எளிமையான வாழ்க்கை மூலம் தமிழீழ மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளீர்கள் தங்களுடைய எளிமையான வாழ்வியல் பற்றிச் சற்றுக் கூறுங்கள்.


பதில்: இப்போது மக்கள் எல்லாம் தமிழீழத் தாகத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நேரம். இந்த நேரத்தில் நாங்கள் ஆடம்பரமாகத் திரிவது எங்களுக்கு விருப்பமல்ல. இந்த மண்ணில் வாழ்கின்ற மக்கள் எல்லோரையும் போலவே நாமும் துயர்களைச் சுமந்து, இந்த விடுதலைப் போராட்டம் வெற்றியடையப் பாடுபட வேண்டும் என்பதே எமது இலட்சியம். எமது தேசம் விடிந்த பின்னர் ஈழத்தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று கூடி நன்றாக இருப்போம்.


கேள்வி: இசைத்துறை தவிர நாடகத்துறை போன்ற வேறு கலைத்துகைளிலும் தங்களுக்கு ஈடுபாடுள்ளதாக அறிகின்றோம். தங்களுடைய ஏனைய துறைகள் பற்றிய அனுபவங்களைக் கூற முடியுமா?


பதில்: நாடகத்துறை அனுபவம் என்று என்னால் குறிப்பிட கூடியது என்றால் சாந்தனுடன் 'அரிச்சந்திர மயான காண்டம்' என்ற நாடகத்தில் நான் சத்தியகீர்த்தியாக நடித்தேன். நான் ஒரு பாடகனாக மட்டும் தான் இருந்தேன். நான் பாடும் போது கவனித்த சில கலைஞர்கள் நளினமும் என்னுடன் அடங்கியிருப்பதை அவதானித்து, "நீ நன்றாக நடிப்பாய் மச்சான்" என்று கூறி எனக்கு ஆர்வமூட்டினார்கள். அதற்குப்பிறகு அந்தப் பாத்திரத்தை ஏற்று நன்றாக நடித்தேன். எல்லோரும் கரகோசம் செய்து என்னைப் பாராட்டியதுடன், "உன்னுடைய தந்தையை போலவே நீயும் நடித்தாய்" என்று சொன்னார்கள். அதைக்கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.


கேள்வி: தாங்கள் ஒரு போராளியைக் குழந்தையாகப் பெற்றெடுத்துள்ளீர்கள். இந்த வகையில் போராளியின் தந்தை என்ற hPதியில் தாங்கள் எழுச்சிப் பாடல்களைப் பாடும் போது தங்களுடைய இந்த உணர்வுகள் எவ வாறு பாதிக்கின்றன? இந்தப் பாதிப்புக்கள் எவ வாறு தங்களுடைய பாடல்களில் பிரதிபலிக்கின்றன?


பதில்: தாயக விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் ஒவ வொரு தமிழனுக்கும் இந்த உணர்வு இருக்க வேண்டும். நான் ஒரு திரைப்படம் பார்த்தேன். உண்மையான சம்பவத்தைச் சித்தரிக்கின்ற அந்தப் படத்தில் விடுதலைப் போராட்டம் ஒன்றிற்காக ஒரு தாய் தனது பிள்ளைகள் அத்தனைபேரையும் அனுப்பி வைக்கிறாள். உங்கள் மகன்மார் அத்தனை பேரையும் போராட்டத்திற்காக விட்டுவிட்டீர்களே என்று செய்தியாளர்கள் அவளை வினாவுகின்றனர். அதற்கு அவள் கூறிய பதில் எமது மனதில் என்றும் அகலாதவாறு பதிந்துவிட்டது. "இந்த மக்களின் விடிவுக்காகத்தான் எங்களுடைய பிள்ளைகள் சென்றார்கள். இந்த மக்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து நாங்கள் எல்லோரும் பெருமகிழ்ச்சியடைகிறோம்" என்று அந்தத் தாயும் தந்தையும் சொன்ன போதுதான், ஒவ வொரு மனிதனுக்கும் தன்னுடைய தேச விடுதலையில் எவ வளவு பங்கிருக்கிறது என்பது எமக்கு புரிந்தது. எல்லோரையும் போல, நான் கூட எனது பிள்ளையை போராட்டத்திற்கு அனுப்பவேண்டியது இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய கடமை என்று உறுதியாகச் சொல்லுகிறேன்.


கேள்வி: தமிழீழத் தாயகத்தில் விடுதலைப் பாடல்களைச் சிறப்பாகப் பாடிக்கொண்டிருக்கும் தாங்கள் தமிழீழ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளீர்கள். இதுமட்டுமன்றி, உலகெங்கும் பரந்து வாழ்கின்ற எமது தமிழ் உறவுகள் தங்கள் மீது சிறந்த அபிப்பிராயத்தையும் வைத்துள்ளார்கள். இவ வளவு து}ரம் தாங்கள் இசைத்துறையில் வெற்றி பெற்றிருப்பதன் அடிப்படைக் காரணம் என்ன?


பதில்: நான் முன்னர் குறிப்பிட்டது போல, சிறுவயதிலிருந்து நாம் சினிமாப்பாடல்களைப் பாடிக்கொண்டு வந்தோம். அதற்குப் பிறகு அவற்றிலிருந்து புரட்சிப் பாடல்களைப் பாட ஆரம்பித்தோம். நான் சினிமாப்பாடல்களைக் கொச்சைப்படுத்தவில்லை. அந்தப் பாடலைப் பாடும்போது, "நீ இன்னாருடைய குரலில் பாடுகிறாய்" என்று பிரபல பாடகர்களின் பெயர்களை எமது ரசிகர்கள் கூறுவார்கள். நாம் அதனைக் கேட்டு மகிழ்ந்தோம். அப்போது நாம் அடைந்த மகிழ்ச்சி ஒரு சின்ன மகிழ்ச்சியே. அதற்குப் பிறகு இந்தப் போராட்டத்துக்காக, இந்தத் தமிழரின் விடுதலைக்காக எங்கள் புலவர்கள் எழுதுகின்ற ஒவ வொரு வரியையும் இப்போது சாந்தன் அவர்களுடன் இணைந்து பாடும் போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
"ஆனையிறவில் மேனி தடவிப் போனது போனது புூங்காற்று" அந்தப் பாடலை சாந்தன் பாடும்போது நான் பக்கத்தில் இருந்தேன். இந்த வரிகளை புதுவையண்ணா அவர்கள் எழுதினார்கள். அந்தப் பாடலை பாடும் போது மிகவும் பெருமையடைந்தேன். அடுத்த நாள் அந்த ஆனையிறவும் விடுதலைப் புலிகளிடம் வீழ்ந்துவிட்டது. எங்கள் இசைத்துறை வெற்றிக்குக் காரணம் என்னவென்றால் நாங்கள் இந்தப் போராட்டத்துடன் சங்கமித்தவர்களாய், அதற்குள்ளேயே இருந்து இந்த மக்களும் போராளிகளும் அனுபவிக்கின்ற துன்பங்களையும் துயரங்களையும் தாங்கிக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் மட்டுமல்ல தமிழீழத்தில் வாழ்கின்ற பல கலைஞர்கள் இவ வாறாக உண்மையான அனுபவ உணர்வுகளோடு பாடுவதானால் தான் இந்தப் பாடல் வெற்றியளிக்கின்றன.


கேள்வி: அதாவது, தமிழீழ விடுதலைப் போராட்டத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட உங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே உங்களது பாடல்கள் வெற்றி பெறுகின்றன என்று குறிப்பிடுகிறீர்கள். அப்படித்தானே?


பதில்: ஆமாம்.


கேள்வி: எமது புலம்பெயர்ந்த உறவுகளுக்காக நீங்கள் பாடிய பாடல்களில் ஏதாவது ஒன்றைப்பற்றியும், அதனைப் பாடும் போது ஏற்பட்ட அனுபவ உணர்வலைகளையும் எம்முடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?


பதில்: எமது தாயகத்தை விட்டு இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து வாழும் எம் தமிழ் இரத்த உறவுகளுக்கு நிச்சயமாக நான் சில வரிகளைக் கூறத்தான் வேண்டும். இந்த மக்களுக்காக நான் பாடிய ஒரு சில வரிகள் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அதாது, ஆனையிறவு ஒலிப்பேழையில் பாடிய பாடல் புதுவையண்ணா அவர்கள் எழுதிய பாடல். கண்ணன் மாஸ்ரர் அவர்கள் இசையமைத்தார்கள். " நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா" இந்தப் பாடலை நான் பாடி முடித்து விட்டு வீட்டிற்கு வந்தபோது பக்கத்து வீட்டுக்காரர்கள் "விடியப்புறத்தில் நித்திரையா தமிழா என்று உங்கள் குரல்தானே எங்களை எழுப்புகின்றது" என்று கூறுவார்கள். அதைக்கேட்டு நான் மகிழ்ச்சியடைவேன். இதைக் கேட்ட போது, இந்த மக்கள் விழிப்புடன் இருக்கவேணும் என்பதற்காகவே புதுவையண்ணா அவர்கள் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஏனென்றால், தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எல்லோரும் விழித்தெழும் போதுதான் இந்தத் தமிழர்களின் போராட்டம் வெகுவிரைவில் வெற்றியடையமுடியும் என்பது தான் உண்மை. இதை உணர்த்துவதற்காகவே புதுவையண்ணா அந்தப் பாடலை எழுதினார் என்று நான் நம்புகின்றேன். இதோ அந்தப் பாடலில் சில வரிகள் "நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு எழுந்து சேரடா! தமிழனுக்கு இந்த மண்ணில் சொந்தமில்லையா? உந்தன் நிலத்தில் உனக்கும் ஒரு பந்தமில்லையா? அழுவதென்றி உனக்கு வேறு மொழியுமில்லையா? என்னும் அடங்கிப் போதல் அன்றி எந்த வழியுமில்லையா"


நன்றி திரு. சுகுமார் அவர்களே, தங்களது இசைநிகழ்ச்சிகளின் மத்தியில் எமக்காக நேரம் ஒதுக்கி தங்களது உணர்வுகளைப் புலம்பெயர்ந்த எமது உறவுகளுடன் பகிர்ந்து கொண்டமைக்காக நாங்கள் நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.


பதில்: நீங்கள் எனக்கு நன்றி சொல்லுவதைவிட, நாங்கள் தான் புலம்பெயர்ந்த எமதினிய உறவுகளுடன் எம்மை உறவுப்பாலமாய் இணைக்கின்ற வெளிநாடுகளில் எமது போராட்டத்தினை எடுத்துக் கூறுகின்ற nவிளியீடுகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், இந்தப் போராட்டத்தில் தாங்கள எப்படியெல்லாம் பங்களிக்கின்றோம் என்பதை எமது து}ரத்தேச உறவுகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களை மகிழ்வடையச் செய்வதில் உங்கள் சேவை பாராட்டப்பட வேண்டியது என்றே சொல்ல வேண்டும். புலம்பெயர்ந்த எமது தாயக மக்கள் எமக்கு உதவத்தயாராக இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கையிலேயே எமது போராட்டமும் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. எமது உறவுகள் அனைவரும் கொடுக்கின்ற உதவிக்கரத்திற்கு நாம் என்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள்
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)