Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
13 வயதில் திருமணம் விவாகரத்து பெற்று படிக்கும் மாணவி
#1
ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஆலூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

சிறு வயது என்பதால் அந்த மாணவிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால் உறவினர்கள் விடாப்பிடியாக சம்மதிக்க வைத்தனர். திரு மணம் முடிந்த பிறகு மாண விக்கு கணவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. மேலும் அந்த மாணவிக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது.

விவாகரத்து

இதைத் தொடர்ந்து அந்த மாணவி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றாள். பின்னர் 8-ம் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். விவாகரத்து பெற்றதால் அந்த மாணவியிடம் ஊரில் உள்ள உறவினர்கள் யாரும் பேசுவது கிடையாது.

ஆனால் அதைப்பற்றி எல்லாம் மாணவி கவலைப் படுவது இல்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றே இருக்கிறாள்.

வறுமை

மாணவியின் பெற்றோர் மிகவும் வறுமையில் வாடுவதால் படிப்பு செல வுக்கு மாணவி மிகவும் கஷ் டப்படுகிறாள். யாராவது தனக்கு உதவி செய்தால் டாக்டர் ஆக ஆசை என்று மாணவி கூறுகிறாள். இதற் காக அரசிடம் இருந்து உதவி கோரப் போவதாகவும் தெரி வித்துள்ளார்
Thanks:Malaimalar.....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
13 வயதில் திருமணம் விவாகரத்து பெற்று படிக்கும் மாணவி - by SUNDHAL - 11-20-2005, 05:41 PM
[No subject] - by tamilini - 11-20-2005, 07:30 PM
[No subject] - by poonai_kuddy - 11-20-2005, 11:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)