![]() |
|
13 வயதில் திருமணம் விவாகரத்து பெற்று படிக்கும் மாணவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: 13 வயதில் திருமணம் விவாகரத்து பெற்று படிக்கும் மாணவி (/showthread.php?tid=2365) |
13 வயதில் திருமணம் விவாகரத்து பெற்று படிக்கும் மாணவி - SUNDHAL - 11-20-2005 ஆந்திர மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் ஆலூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவியை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். சிறு வயது என்பதால் அந்த மாணவிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால் உறவினர்கள் விடாப்பிடியாக சம்மதிக்க வைத்தனர். திரு மணம் முடிந்த பிறகு மாண விக்கு கணவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. மேலும் அந்த மாணவிக்கு தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டது. விவாகரத்து இதைத் தொடர்ந்து அந்த மாணவி கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றாள். பின்னர் 8-ம் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். விவாகரத்து பெற்றதால் அந்த மாணவியிடம் ஊரில் உள்ள உறவினர்கள் யாரும் பேசுவது கிடையாது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் மாணவி கவலைப் படுவது இல்லை. தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றே இருக்கிறாள். வறுமை மாணவியின் பெற்றோர் மிகவும் வறுமையில் வாடுவதால் படிப்பு செல வுக்கு மாணவி மிகவும் கஷ் டப்படுகிறாள். யாராவது தனக்கு உதவி செய்தால் டாக்டர் ஆக ஆசை என்று மாணவி கூறுகிறாள். இதற் காக அரசிடம் இருந்து உதவி கோரப் போவதாகவும் தெரி வித்துள்ளார் Thanks:Malaimalar..... - tamilini - 11-20-2005 இன்னும் உந்தக்கொடுமை அழியவில்லை என்பது வேதனை தான். அந்த பெண்ணின் காரியம் பாராட்டப்படவேண்டியது. இப்படி பாதிக்கப்படுகிறவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள். எப்பதான் இந்தக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வருமோ. :evil: :evil: - poonai_kuddy - 11-20-2005 எங்கயோ ஒண்டிரண்டு உப்பிடி நடக்குது எண்டறதுக்காக எங்கட சமூகத்தில உதெல்லாம் இன்னும் இருக்கெண்டு சொல்லேலுமா.....எங்கட சமுகம் நிறைய முன்னேறிட்டு......பொம்பிளையள் பாதிக்கப்படவேயில்ல.....சும்மா வெற்றுக்கூச்சல் போடுவினம் சிலபேர்.......... அதெல்லாத்தையும் கணக்கெடுக்காதேங்கோ அக்கா.......<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ----------------------------------------------- இத மாதிரி ஆயிரமாயிரம் சிறுவர்கள் பாதிக்கப்படுகினம்......பெண்ணாகப் பிறந்ததால சிறுமிகள் எத்தன சமூகக் கொடுமைகளுக்குள்ளாக வேண்டியிருக்கு.......சிறுவயதில திருமணம்......பாலியல் வன்கொடுமை......சிறுவயதில் வேலை......எண்டு பலவித பாதிப்புகள்..... சிறுமியள் மட்டுமில்ல சிறுவன்களும் பாதிக்கப்படுகினம்.......பாலியல் வன்கொடுமைக்குள்ள ஆளாகிற சிறுவன்களும் (ஒப்பீட்டளவில சிறுமியள விட குறைய இருந்தாலும்) இருக்கினம்......சிறுவயதில் படிக்கவேண்டிய வயசில.....துள்ளி ஓடி ஆடி விளையாட வேண்டிய வயசில வேலை செய்யினம்....
|