06-22-2003, 09:31 AM
வெள்ளைப்பனி
-
தி. தவபாலன்
ஒளி உருகி பாலைமர இலைகளில் கசிந்து கட்பார்வைவழி ஊடுருவி விழிகளின் திரையில் உணர்ந்தது. அது பச்சையா, சிவப்பா, நீலமா என்று தெரியவில்லை. ஒன்றல்ல பல மரங்கள் ஒளி உருகிக்கடந்தன. ஒளி உருவங்கள் மங்கிக் கலங்கிப் புலப்படாது போயின. இதயம் குருதியை கூடுதலாக உள்ளிழுத்து வெளித்தள்ளிக்கொண்டது. மூளைக்கட்டி கூடுதலாகத் தூண்டக் கால்களின் இயக்கம் வலுத்தது. ஏதோ ஒன்று முதுகின் பின்னால். எதுவெனப் புரியவில்லை. ஒளி உருகிக்கசியும் பாலை மரங்கள் மட்டுமே புலப்பட்டன. கால்கள் விரைவாக இயங்கின. தரையில்லை. பாதங்கள் செயலாகின. ஆனால். நகர்ச்சியில்லை. இதயம் வலுவாக விரைவாக சுருக்கி விரிந்தது. சுவாசம் சிக்கலானது. எல்லாமே விழிப்புலனிருந்து விலகின. வெள்ளையாய் மங்கிய மாளிகையொன்று பிரகாசித்தது. சட்டென்று எல்லாமே போயிற்று. கறுப்பு மண்டிய இருள். மூச்சு வாங்கினேன். பல நிமிடங்களில் ஆசுவாசமானேன். உடல் குளிரெடுத்தது. நிலமிருந்து தன்னை நிரப்பிக் கொண்டிருந்தது. உடல் குளிர்ந்திருந்தது. கையால் தடவினேன். அருகே மனைவி, குழந்தை உடமைகள் யாவுமே உறக்கம் கொண்டிருந்தன. உள அமைதியில்லை. எனக்கு அவர்களுக்கும் அவைகளுக்கும் இனி உறக்கம் வராது. இருளில் நட்சத்திரங்கள் சிறிதும் பெரிதுமாக ஒளிகக்கிக் கொண்டிருந்தன. உறை இருளில் வழிக்குஞ்சுகள் எதையோ தேடின. எதைத் தேடியவை புரியவில்லை. மரங்கள் புூதங்களாக நிற்க நடுவே ஒடிய ஆற்றின் எச்சமாக வெண்மணல் கீற்று மங்கலாய்த் தெரிந்தது. மரங்கள் பிசாசுகளாய் அசைந்தன. இராட்சத் தலைகள் கைக்கிளைகள் விரிந்து அச்ச மூட்டின. அவை எதையோ நினைவுக்குக்கொண்டு வந்தன. பயமுடன் விழிகளை மூடினால் அந்த உருவமற்ற கனவுத்துரத்தல் கிலியுூட்டியது. கண்கள் மூடமறுத்தன. மூடினால் கனவுத் துரத்தல். திறந்தால் சூழலின் பயமுறுத்தல்.
தூரத்தே கந்தகப் பொதிகள் எரிந்ததால் ஏற்பட்ட பேரொலிகள் அதிரவைத்தன. காலப்பிரமாணம் மெதுவாகவே நகர்ந்தது. யோசிக்க எதையெல்லாமோ தெரிவு செய்தும் அவற்றை மீட்க மனம் மறுத்து விட்டது. அது பரபரப்புடன் நிகழ் நிலையிலேயே நின்றுவிட்டது. அடுத்த பிரமாணம் குறித்துக் கவலைப்பட்டது. மீண்டும் இதயத்தின் படபடப்பு அதிகமாக நெஞ்சு கனத்தது. பகல் வேளை இயக்கத்தால் மனைவியும் குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தனர்.அடிவேரின் உயரத்தில் உடைமூடைகளின் தலையணை. சூழ்நிலை மறந்த ஆனந்தத் தூக்கம் அது? அவர்களின் மனம்தான் அதைத்தீர்மானிக்க வேண்டும். எனக்கு மட்டும்தானா நரகமானது தூக்கம்?
என் மனநிலைக்கு உடன்பாடில்லாமல் இருள் உருக்கொண்டிருக்க ஒளி உறையத் தொடங்கியது. நிலநீர் நிறைந்ததால் குளிரான சூழலால் உடல் கிட்டியது. சூழல் பனியில் ஒளிநிலைத்தது. பக்கத்திலிருப்பதைக் காண்பது கூடக்கடினமாக இருந்தது. பனி முழுக்க விரிந்து கிடந்தது. இதனுள்ளும் அமைதியான உறக்கமா அவர்களுக்கு தட்டி எழுப்பினேன். குளிர் உபாதையால் பொய் உறக்கம் கொண்டிருந்தது. அவர்கள் விழித்தபோது கொண்டிருந்த தெளிவு உணர்த்தியது. நீரோடி மரங்கள் வேர்களை அகத்தின் வெளியே கொண்டு வந்திருந்தன. சுற்றம் பனிநீரை இழக்கத் தொடங்கியது. ஒளியின் பிரகாசம் வலுத்தது. ஒளி உருகி பாலைமர இலைகளில் வழியத்தொடங்கியது. பாலைமரங்கள் தேவ உலகமாக ஒளிரத் தொடங்கின. முக்கால் கட்டிய மிதிவண்டியில் வயிற்றிலும். முதுகிலும் உடமைகள் ஏறின. முன்கைகள் தாங்கிப்பிடிக்க மனைவி பின்னிருந்து உதைப்புக் கொடுக்க உடமைகளின் கோபுரத்தின் மேல் பிள்ளை கலசமாக இருக்க கால்கள் இயங்கத்தொடங்கின.
பின்னால் உலோக அமுக்கப் பொதிகள் வாய் பிரியும் அசைவுகள் துரத்திக்கொண்டு வந்தன தூரத்தே மங்கிய ஒளியில் 'தறப்பாள்' வீடுகள் புலப்பட்டன