11-20-2005, 10:51 AM
சைக்கிளில் ஏறுவதா விடுவதா என்று அவளுக்குள் சில நிமிடங்கள் பெரும் போராட்டம் நடந்தது. முன்பின் தெரியாதஅவனுடைய சைக்கிளில் ஏறுவது தன் பெண்மைக்கு அழகில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவித்தாள் பின் ஒருவாறு சமாளித்துக்கொண்டு மன்னித்துக்கொள்ளுங்கள் நான் உங்களுடைய வண்டியில் ஏறமுடியாது. நான் நடந்து செல்கின்றேன். என்னை வற்புறுத்தாதீர்கள் என்றபோது அவனுக்குள்ளும் அவளைப்பற்றி ஒரு உயர்வான எண்ணம் தோன்றியது.
சைக்களில் இருந்து இறங்கிக்கொண்டே நான் உங்களுடைய முடிவை மதிக்கின்றேன். உங்கள் முடிவு சரியான முடிவுதான் என்று சொன்னான். அவன் சைக்கிளை உருட்டிக்கொண்டு அவளுடன் நடந்துகொண்டிருந்தான். அவளும் அவனுடன் பேசிக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள். தலையை குனிந்துகொண்டு அவனுடன் பேசிக்கொண்டு நடந்தவள் சற்றுத்தலையை துாக்கியபோது
சற்றுத்திகைத்துவிட்டாள் யார் அங்கே வந்துகொண்டிருப்பது அப்பாவா?
தொடருங்கள்.