11-20-2005, 10:40 AM
நன்றி தூயவன், பல உண்மைகளை இங்கு கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். கருணாநிதி, எம்.ஜி.ஆரை மட்டும் கட்சியிலிருந்து வெளியேற்றவில்லை! நாவலர் நெடுஞ்செழியன் உட்பட பல மூத்த தலைவர்கள் வெளியேறக் காரணமாக இருந்தார். இதே போன்றுதான் தி.மு.கவில் அடுத்த தலைவராவதற்குரிய தகுதிகளைக் கொன்டிருந்த வை.கோ அவர்கள் மிக கேவலமான முறையில் குற்றஞ்சாட்டப்ப்ட்டு வெளியேற்றப்பட்டார். வை.கோ அவர்கள், தன்னை விடுதலைப் புலிகளின் துணையுடன் கொலை செய்ய முற்பட்டார் என்று கூட குற்றஞ் சாட்டியிருந்தார். தனது மகன் ஸ்ராலினுக்காக வை.கோ பலிக்கடாவாக்கப்பட்டிருந்தார். அதன் மூலம் வை.கோவின் வை.கோவின் அரசியல் வாழ்க்கையையே அஸ்தமனமாக்க முற்பட்டார். ஆனால் அதன் பின் வை.கோ புது சகாப்தம் படைத்தது யாமறிந்ததே! ஆனால் எவ்வளவுதான் கருணாநிதி, தனது குடும்ப உருப்பினர்களை தி.மு.கவில் தலைமைக்கு கொண்டுவர முற்பட்டாலும், கருணாநிதிக்குப் பின் தி.மு.கவின் தலைமை வை.கோவிடம் செல்வது தவிர்க்க முடியாதது. அதுதான் நிதர்சனமும்.
எம்.ஜி.ஆர், தனது கடைசி காலங்களில் கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த முற்பட்டாரென்றும், அ.தி.மு.கவை தி.மு.கவில் இணைக்க முற்பட்டாரென்றும் சில வந்திகள் வந்தன. அ.தி.மு.கவை தனக்குப் பின்னம் தலைமை தாங்க சரியான ஆளில்லை என்பதாலும், ஜெயலலிதா போன்றோரின் கைகளில் சிக்கி விடக்கூடாதென்பதாலுமே அப்படி முயற்சித்தாரென்று கூறுகிறார்கள்.

" "