11-20-2005, 04:52 AM
அந்த பாடல் தனக்கென ஒலிப்பதாக உண்ர்ந்தாள். மீண்டும் அம்மாவின் அலறல் "என்ன கண்ணாடிக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறாய்.. பள்ளிக்கூடம் போகும் முன் எதாவது உதவி செய்வோம் என்று நினைப்பு இல்லை எந்த நேரம் பார் கண்ணாடிக்கு முன்னால் தான்" என்று அம்மா புலம்பத்தொடங்கினாள். அம்மா எனக்கு நேரமாகிவிட்டது பின்னேரம் வந்து என் செல்ல அம்மாவிற்கு உதவி செய்கின்றேன் என்றவாறே முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு சாப்பாட்டு வோக்சையும் எடுத்துக்கொண்டு சைக்கிளை எடுத்தாள். அப்போ தான் தங்கை நேற்று சைக்கிளை எடுத்து காத்து போக வைத்திருந்தது தெரிந்து. இப்போ இதற்கு சண்டை போட்டால் நேரம் போய் விடும் பின்னார் வந்து அவாவை கவனிப்போம் என்று நினைத்து விட்டு சைக்கிளை உருட்டத் தொடங்கினாள் பக்கத்தில் உள்ள சைக்கிள் கடைக்கு. அந்த வெண்ணிலா எங்கையாவது கண்ணில் படக்கூடாதா என்று நினைத்துக்கொண்டே......

