11-20-2005, 02:24 AM
<b>எனவே நீங்கள் சொன்னது சரியாயின் ஏன் அவ்வானொலியின் நேயர் கடிதத்தில் இத்தவறைச் சுட்டிக் காட்டியிருக்கலாமே. நிச்சயம் அவர்கள் பதில் வழங்கி இருப்பார்கள்.</b>
ஆம். நான் அவர்களுக்கு எழுதியிருக்கிறேன். ஆனால் துரதிட்டவசமாக இன்னும் பதில் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.
எனது ஆதங்கம் என்னவெனில் அவர்கள் செவ்வி எவரைக் கண்டார்கள் என்பதல்ல.
அந்தச் செவ்வியில் செவ்விகாண்பவர் தனது கருத்துக்கு ஏற்ற பதிலைப் பெற முனைவது அப்பட்டமாகத் தெரிகிறது.
உதாரணமாக பேராசிரியரைப் பேட்டிகாணும்போது 'இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் புறக்கணிப்புக் குறித்த உங்கள் கருத்தென்ன?" என்று கேட்பதற்குப் பதில் பாடவேண்டிய பாடலுக்குப் பல்லவி எடுத்துக்கொடுப்பது போல ''இந்தத் தேர்தலில் தமிழ்மக்கள் புறக்கணிப்பு ஒரு சனநாயக மீறல் இல்லையா? உங்கள் கருத்தென்ன?" என்று கேட்டதைக் குறிப்பிடலாம்.
விசேட நிருபர் செவ்வி கண்டபோது வாக்களித்த இருவரையும் வாக்களிக்காத இருவரையும் செவ்வி கண்டார். அது நடுநிலையைப் பேண எடுத்துக்கொண்ட முயற்சி என்பதை நான் ஏற்றுக்கொள்வேன்.
ஆனால் செவ்வியின்போது எந்தப் பக்கமும் சாராத நடுநிலைமையான வினாக்களை வினவிப் பதில்களைப் பெறுவது நல்லது என்பதே எனது கருத்து.
<b>அன்புடன் திரு</b>