06-22-2003, 09:30 AM
சற்றும் எதிர்பாராமல் அது நடந்தது. காப்பரணிலிருந்து ஒரு இராணுவவீரன் நகர்வுக்குழிக்குள் குதித்து கணத்திலேயே துப்பாக்கியைத் தோளுக்குயர்த்தினான், அவனின் துப்பாக்கியின் சுடுகுழல் முட்டும் து}ரத்தில் இவள். காப்பரண் வாயினுள் குண்டெறிந்தது முதலில் நடந்ததா, அவள் இவனைச் சுட்டது முதலில் நடந்ததா, அல்லது எல்லாம் ஒரே சமயத்திலா? சொல்ல முடியவில்லை.
இரண்டு எறிகணைகள் கூவல் ஒலியுடன் தலையைக் கடந்தன. ஒருகணம் நிதானித்தேன். வழமையான அதிகாலை உபசரிப்பா? யானை வரவின் மணியொலியா?
யோசித்து முடிக்குமுன் ஒரு இருபத்தைந்து, முப்பது எறிகணைகள் சுழற்றி விசிறப்பட்டு விழுந்து வெடிக்க, மனமும் கையும் ஒரே நேரத்திலேயே இயங்கின. நான் வோக்கியை (றுயுடுமுலு) இயக்கி "என்ன மாதிரி?" என்று கேட்ட அதே நேரம், நிறைய "என்ன மாதிரியும்" "பதினெட்டால் வந்திட்டான், இருபத்திரெண்டால் வந்திட்டான், இருபத்தொன்பதால் வந்திட்டான், முப்பத்தாறால் வந்திட்டான்" எனவும் குரல்கள் ஒலிக்க, நிலமை சட்டெனப் புரிந்துபோனது. வரலாம், வருவான் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் அவசரமாகச் செய்யப்பட்ட தயார்ப்படுத்தல்கள் எல்லாம் எந்தளவில் இருக்கின்றன எனப் பார்த்து வரப்புறப்பட்ட நான், முன்னணியுமில்லாமல் பின்னணியுமில்லாமல் இடைவழியில், கொஞ்சம் சிக்கல்தான். 50 கலிபர்காரரைப் பார்ப்பதற்காகத்தான் நான் புறப்பட்டிருந்தேன். இனிப் பின்னுக்குப் போய் வேலையில்லை. கலிபர்காரருடன் தொடர்பெடுத்துக் கதைத்துவிட்டுத் திரும்ப முனைக்குப் போவது தான் மிகச் சரியான முடிவு. மெயினில் அதிர்வெண்ணுக்கு வோக்கியை ஓடவிட்டுப் பார்த்தேன். சேராளன் அங்கிருந்தவாறே முன்னணிக்காரனையும் மோட்டார்க்காரரையும் இணைத்துக் கொண்டிருந்தான்.
திடீரென எமக்கு எங்களின் 50 கலிபரின் அடி கேட்டது. அதற்கிடையில் அவ வளவு து}ரம் போய்விட்டானா? வேகமாக அவர்களின் அதிர்வெண்ணுக்குப் போனேன். அவர்கள் ஏற்கனவே அந்த அதிர்வெண்ணில் நின்றவாறு என்னைக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவசரமாகக் குறிக்கிட்ட நான்,
"லீமா சேராதான் நிக்கிறன் சொல்லுங்கோ"
என்றேன்.
"லீமா சேரா, எங்களுக்கு இடது பக்கம் நு}ற்றைம்பது மீற்றர் தள்ளி கிட்டத்தட்ட நு}று பேராவது பின்னுக்குப் போயிட்டாங்கள். நாங்கள் குடுத்துக் கொண்டேயிருக்கிறம். ஆளும் விடாமல் போய்க்கொண்டேயிருக்குது."
"விடாமல் பப்பா இந்தியா. குடுத்துக்கொண்டேயிரு. எல்லாப் பக்கத்தையும் அவதானிப்பில் வைச்சிரு. எல்லாருக்கும் இலக்கு பிரிச்சுக்குடு"
"விளங்குது லீமா சேரா. அதற்கேற்றமாதிரித்தான் எல்லாம் போட்டிருக்கிறன்"
என்றாள் பப்பா இந்தியர். அவள் ஒரு சிங்கி. யாரும் சொல்லாமலேயே எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் கற்புூரப் புத்திக்காரி. இனி நான் தாமதிக்காமல் மெய்னுக்குப் போய்ச் சேரவேண்டும். சேராவண் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பாள். ஆயிரம் வேலையிருக்கும் இப்போது.
மெயினின் அதிர்வெண்ணுக்குப்போய், பப்பா இந்தியாவை இராணுவம் கடந்துகொண்டிருக்கும் செய்தியை சேரா வண்ணுக்குச் சொல்லியவாறு வேகமாக மெயினை நோக்கி ஓடினேன். நான் நின்ற நடுத்துண்டுக்குள் இன்னும் எறிகணை விழவில்லை. ஏன்? நடுத்துண்டுக்குள் இராணுவம் நிற்கிறதோ? எனக்கு வலப்புறம் வேப்பமரத்தருகே ஏதோ அசைவு தெரிய, பார்வையைக் கூர்மைப்படுத்தினேன். ஆளேதான். என்னிலிருந்து 75மீ இடைத்தது}ரம் வரும். உடம்பெல்லாம் வகைதொகையில்லாத பாரங்களைச் சுமந்தவாறு இராணுவம் பின்னணிக்கு ஓடிக்கொண்டிருந்தது. எங்களுடைய எக்கோ லீமா குறுக்குத் தகட்டு வரிசையில் தான் ஓடுகிறார்கள். நிலைமையை சேரா வண்ணுக்குச் சொன்னேன்.
"எக்கோலீமா வரிசையோ" சிக்கவில்லை. வண்செவிணுக்கு அறிவிச்சு ஒழுங்குபடுத்துறன். நீ கெதியா வா?
என்றாள் சேராவண். நான் பாய்ந்தடித்து மெயினுக்குப் போய்ச்சேரவும் எக்கோலீமா வரிசையை எங்களுடைய எறிகணைகள் துடைத்தழிக்கத் தொடங்கின. நான் எதிர்பார்த்தமாதிரியே சேராவண் பதுங்கு குழியினுள் இல்லை.
"கெதியா வா" உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறன். டெல்ரா பதினெட்டு, இருபத்திரெண்டு, இருபத்தொன்பது, முப்பத்திரண்டு உடைபட்டு அவன்ர போக்குவரத்துப்பாதையா இருக்குது. எங்கட ஆக்கள் விழுந்திட்டினம். மிஞ்சியிருந்த ஆக்களை இழுத்துக் கொண்டுபோய் பன்னிரெண்டிலையிருந்து பதினாறுவரையும் போட்டிட்டு ராங்கோ மைக் நிக்கிறாள். பதினெட்டிலையிருந்தும் முப்பத்திரெண்டிலையிருந்தும் கடும் எதிர்ப்பு வருதாம். இவ வளவு நேரமும் ஸெல் போட்டுக் குடுத்தும் போகேல்லாமல் இருக்குதாம். எங்கட வலதுக்கு ஒரு கிலோமீற்றர் பின்னாலை அவன் ஒரு லைனைப் போட்டிட்டு நிக்கிறான். எங்களுக்கு எல்லாப் பக்கத்திலையும் அவன். இனி நான் இதிலை நிண்டு வேலையில்லை. தனித் தனிய நிண்டு என்னைத் தொடர்பெடுத்த எல்லாரையும் எப்படியாவது டெல்ரா நாப்பத்தொண்டுக்கு வரச்சொல்லியிருக்கிறன். நான் நாற்பத்தொண்டுக்குப் போறன். நீ பதினாறுக்குப் போ. ரெண்டு பக்கத்தாலையும் நெருங்கி லிங்க் பண்ணுவம். பாதையை மூடுற வரைக்கும் எங்களுக்குப் பின்னால நிக்கிறவன் பலமாத்தான் நிப்பான். சப்ளையை மறிச்சாத்தான் அவனை உடைக்கலாம். உனக்கு விளங்குதோ"
என்றாள் சேராவண் பதுங்குகுழியின் முகட்டில் நின்றவாறு. அவளும் அவளுடன் நின்றவர்களும் முழுமையான தயார் நிலையில்.
பதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்னோடு ஒரு 40 எம். எம். இருந்தால் நல்லது என்று மனதில் பட. அல்பா லீமாவைக் கூட்டிக் கொண்டு, என்னுடைய இடைப்பட்டி முழுமையும் குண்டுகளைக் கொழுவிக் கொண்டு பதினாறை நோக்கி ஓடிப்போனேன்.
பதினாறுக்குப் போனேன் என்பதை விட நான் கொலை வலையத்துக்குள் போனேன் என்பது தான் உண்மை. பதினாறு, பதினைந்து என்று எங்களுடைய ஆட்கள் நின்ற காப்பரண்களெல்லாம் எதிரியின் எறிகணை மழைக்குள் குளித்தபடி. இந்த எறிகணை வீச்சுக்குள் யாராவது எஞ்சியிருப்பார்களா? வோக்கியில் ராங்கோ மைக்கைக் கூப்பிட்டவுடனேயே,
"எனக்கு உன்னைத் தெரியுது. வேகமா ஓடி வா"
என்று கத்தினாள். அல்பா லீமாவும் நானும் ஓடிப்போய் பதினாறுக்குள் சறுக்கிப் பாய்ந்த வேகத்தில் சமநிலை குழம்பிச் சரிந்து விழப்போன எம்மை உள்ளிருந்தவர்கள் தாங்கிக் கொண்டார்கள்.
"இதுக்குள்ளாலை பார்"
என்றெனக்குச் சுடும் ஓட்டைக்குள்ளால் காட்டினாள் ராங்கோ மைக். அணிவகுத்து நின்ற மொட்டைத் தென்னைகளுக்கிடையால் பார்த்தேன். இருபது பேரளவில் கொண்ட அணி பதினெடட்டினு}டாக உள் நுழைந்து கொண்டிருந்தது. முதுகில் றுஐசுநுடுநுளுளு சுநுஊநுஐஏநுசு ஐச் சுமந்தபடி வந்த முதலாமவன் பதினெட்டை கடக்கவும் பக்கவாட்டாக நெற்றியில் சூடுபட அப்படியே விழுந்தான். இது பதுங்கிச்சூடு. நம்மவர்கள்தான்.
"சினைப்பர் எங்க நிக்குது"
என்றேன்.
புட்டிப் பொசிசனிலை இந்தியா அல்பா தான் குடுத்துக்கொண்டிருக்கிறான்.
என்று ராங்கோ மைக் சொல்லவும், அல்பா லீமா தன் 40 எம். எம் ஆல் இரண்டு எறிகணைகளை ஏவ. நின்றவர்கள் ஏனைய ஓட்டைகளால் சுட, விழுந்தவர்கள் போகமற்றவர்கள் ஓடித் தப்பினார்கள். இந்தத் தென்னைமர அணிவகுப்பையும் இடையில் தலைநீட்டும் மாமரங்களையும் கடந்து நீண்ட து}ரங்களுக்கு மிகச் சரியாகச் சுடுவதும் கொஞ்சம் சிரமம் தான். எனக்குப் பொறுமையே இல்லை. சேராவண் இன்னும்போய்ச் சேரவில்லையோ போயிருந்தால், தொடர்பெடுத்திருப்பாளோ?
"லீமா சேரா - சேராவண்"
வோக்கி கூப்பிட்டது. இவளுக்குச் சாவே இல்லை;
"சொல்லுங்கோ சேரா வண் நான் பதினாறிலை தான் நிக்கிறன்"
"சரி. நான் நாற்பத்தொண்டுக்கு வந்திட்டன். தொடங்குவம். வண் செவின்ரை நம்பருக்கு வா"
போனேன். இரு முனைகளால் நாங்கள் இறங்கப் போவதை வண் செவிணுக்குச் சொல்லி எறிகணை உதவி கேட்டான். வண் செவின் தயாரானது. நாங்கள் தயாரானோம்.
"வருகுது பாருங்கோ"
என்றது. பார்த்துக்கொண்டிருந்தோம். கும். கும் கும் என்றது. அவை மிகச் சரியாகப் பதினெட்டுக்கு நேரே விழுந்து வெடித்தன.
"சரியா"
"சிக்கவில்லை வண்செவிண். இப்படியே இருக்கட்டும். தேவையெண்டால் கேக்கிறன். சேராவண் நான் தொடங்கிறன்"
"உடனே தொடங்கு"
"அல்பா லீமாலு}லு}"
நான் வாய் மூட முதலே அவள் 40 எம். எம். ஐத் தோளில் தொங்கவிட்டு hP-81 ஆல் குறி பார்த்தபடி, "அடிலு} விடாதைலு}லு} அடிலு} அடிலு} அடிலு}"
என்றவாறு நகர்வுப் பதுங்குகுழிக்குள் குதித்துப் பதினெட்டை நோக்கி ஓடத் தொடங்க, அவள் பின்னே ஒரு பீ. கே. எல். எம். ஜீ இயக்குனர், சுடுனர், உதவியாளர் தத்தம் ஆயுதங்களுடன் ஓட, இன்னும் இருவர் நகர்வு குழிக்குள் பாய முற்பட, நான் அவர்களைப் பிடித்திழுத்து,
ரெண்டு பேரும் நில்லு. தேவைப்படேக்க கூப்பிடுறன்.
என்று அதட்டிவிட்டு, போனவர்களின் பின்னே பாய்ந்து ஓடினேன். என் பின்னே தொப்புத் தொப்பெனச் சத்தம் கேட்கத் திடுக்கிட்டுத் திரும்பினால், அந்த இருவரும் என் பின்னே ஓடி வந்து கொண்டிருந்தார்கள். சட்டெனக் கோபம் வந்தபோது ஒன்றும் பேசாமல் ஓடினேன். சண்டை தொடங்கினால் ஒருவரையும் கட்டுப்படுத்த இயலாது. நான் முந்தி, நீ முந்தி என்று எல்லோரும் வாலைக் கிளப்பிக் கொண்டு வெளிக்கிட்டுவிடுவார்கள். வந்து என்வென்றாலும் செய்யட்டும்.
பதினெட்டில் எதிர்பார்த்தளவு எதிர்ப்பில்லை. பதுங்குழிக்குள் ஒரு குண்டடித்தோம். பாய்ந்து சுட்டோம். உற்றுப் பார்த்தோம். மூன்று இராணுவத்தினர் பிய்ந்து தொங்கிப்போய் கிடந்தனர். இது வண் செவிண் செய்த வேலை. தாமதிக்க நேரமில்லை.
"சேராவண் லீமா சேரா. நான் பதினெட்டில நிக்கிறன்."
"அதில சிக்கலில்லையெண்டா வேகமா மற்றதுக்குப் போ. ஆக்களைக் குவிய விடாதை."
சாளி பிறேவோவில் ஆட்கள் வானிலெழும்பிக் காற்றை கிழித்தபடி டெல்ரா நாற்பது, நாற்பத்தொன்றுப் பக்கம் குதித்து வெடிக்குமோசை கேட்டது. சரி, சேராவண்ணும் இறங்கப் போகிறாள்.
நாங்கள் இனி அவதானமாகப் போக வேண்டும். பின்னே வந்த இருவரிடமும் இரண்டு பக்கங்களையும் அவதானித்தவாறு நகருமாறு பணிந்துவிட்டு, பார்த்துப் பார்த்து நகர்ந்தோம். முன் பக்கவாட்டுப் பற்றை மறைவுகளிலிருந்து சூடு வந்தபோதெல்லாம் லீமா தன் 40 எம். எம். ஆல் ஒன்று கொடுப்பாள். நாங்களும் சடசடப்போம். பெரும்பாலும் எதிர்ப்பு அடங்கிவிடும். பத்தொன்பது, இருபது, இருபத்தொன்றெல்லாம் சிறு எதிர்ப்புகளுடன் விழுந்துவிட, இருபத்திரெண்டை நெருங்க முன்பே நகர்வகழியின் வளைவு மறைவிலிருந்து வீசப்பட்ட இரு கைக்குண்டுகள் எம்மை வரவேற்றன.
"பின்னுக்குப்போ. பின்னுக்குப்போ."
என்று கத்தியவாறே அல்பா லீமா எங்களெல்லோரையும் பின்னுக்குத் தள்ளி நகர்வுக்குழியின் இன்னொரு வளைவில் விட்டாள். குண்டுகள் வெடித்த கையோடு அல்பா லீமா எறிகணையேற்றப்பட்டிருந்த 40 எம். எம். ஐ அவசரமாக தோளுக்கு உயர்த்தினாள். அதற்கு முன்பே பின்னே வந்த வால்களில் ஒன்று "இந்தாப் பிடி" என்றவாறு ஒரு குண்டை எறிய, அது முன்னே விழுந்து வெடித்துப் புழுதி அடங்கு முன்னரே சூடுகளை வழங்கியவாறு முன்னே பாயந்தோம். எம் முன்னெ போனவள் தடக்குப் பட்டவாறே போன ஏதோ ஒன்றில் என் கால்களும் தடக்க, குனிந்து பார்த்தேன். இராணுத்தின் உடல். சற்று அசைவதுபோல் மனதுக்குப்பட அவன் நெற்றியில் என் துப்பாக்கி முனையை அழுத்திச் சுட்டுவிட்டு நகர்ந்தேன்.
இருபத்திரெண்டில் இருந்து கிடைத்துக் கொண்டிருந்த எதிர்ப்புக்கு முகம் கொடுக்க இயலாமல் இருந்தது. தலையை உயர்த்திச் சுடுவதற்கு எதிரி எங்களை அனுமதிக்கவேயில்லை. நாங்கள் வியர்த்துக் களைத்து எவரும் அசைக்கமுடியாத பலத்துடன் அமைத்த காப்பரணுள் பாதுகாப்பாக இருந்தவாறு எதிரி விளையாடிக்கொண்டிருந்தது எரிச்சலைக் கிளப்பியது. ஒரு முறை தலையை உயர்த்தி அல்பா லீமாவால் ஒரேயொரு 40 எம். எம். ஐச் சுடும் துவாரத்தினு}டே ஏவ முடியுமென்றால் கதையே வேறு. இருபத்திரெண்டுக்கும் எங்களுக்குமிடையே ஒரு பதினேழு மீற்றர் இடைத்து}ரம் வரும். அதைக் கடப்பதற்குள் அந்தப்பாடு.
ஒரே இடத்தில் அதிக நேரம் தாமதிப்பதும் ஆபத்து. ஒரு இறுக்கமான முடிவை எடுத்தே ஆக வேண்டிய நிலை எங்களுக்கு. என் பின்னோடு வந்தவர்களைத் திரும்பிப் பார்த்தேன். நான் வாய் திறக்க முன்னரே ஒருத்தி,
"நான் போய்க் குண்டடிக்கிறன். எமக்குக் காப்புச் சூடு தாங்கோ."
என்றவாறு என் பதிலுக்குக் காத்திராமல் ஏற்கனவே பாதுகாப்பு ஊசி கழற்றப்பட்ட நிலையில் வைத்திருந்த குண்டுகளோடு எங்களை ஏறி மிதித்தவாறு ஓட, நகர்வகழிக்குள் பதுங்கியிருந்த அனைவரும் ஒரே நேரத்தில் நிமிர்ந்து இருபத்திரெண்டை நோக்கி சூடுகளை வழங்கினோம்.
எதிர்த் திசையிலிருந்து சூடு வரும்போது ஓடவேண்டுமென்ற விதிமுறைகள் எல்லாம் பயிற்சியின் போது மட்டுமே எம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன. சண்டை தொடங்கிவிட்டால் டீநுNனு ஆவது, ஊசுயுறுடு ஆவது, னுருஊமு றுயுடுமு ஆவது. நிமிர்ந்தபடி ஓட்டந்தான்.
இருபத்திரெண்டிலிருந்து வந்த எந்தச் சூடுமே குண்டோடு ஓடியவளில் கொழுவவில்லை என்பது நம்பமுடியாத உண்மை. எங்களுடைய திடீர் சூடும் குண்டேந்தியவளின் வருகையும் எதிரியைக் குழப்பிவிட்டதோ, என்னவோ, அவர்களின் சூடு நின்றுவிட்டது. இன்னுமொரு ஐந்து மீற்றரில் காப்பரண் வாயிலை அவள் நெருங்கிவிடுவாள் அதற்குள்லு}.
சற்றும் எதிர்பாராமல் அது நடந்தது. காப்பரணிலிருந்து ஒரு இராணுவவீரன் நகர்வுகுழிக்குள் குதித்து கணத்திலேயே துப்பாக்கியைத் தோளுக்குயர்த்தினான், அவனின் துப்பாக்கியின் சுடுகுழல் முட்டும் து}ரத்தில் இவள். காப்பரண் வாயினுள் குண்டெறிந்தது முதலில் நடந்ததா, அவள் இவனைச் சுட்டது முதலில் நடந்ததா, அல்லது எல்லாம் ஒரே சமயத்திலா? சொல்ல முடியவில்லை.
சுட்டவனைச் சுட்டோம். குண்டு வெடிப்பால் அதிர்ந்த காப்பரனுள் புகுந்து சுட்டோம். உள்ளே விழுந்து கிடந்த ஆறேழு பேருமே பெரிய மல்லர்கள்.
இருபத்திரெண்டு எதிரியின் போக்குவரத்துப் பாதையாக இருந்ததால், கடந்து போக யோசனையாக இருந்தது. நிறுத்திவிட்டுப் போக ஆட்களும் போதாது. சேரா வண்ணைக் கேட்டுப் பார்க்கலாம். சேரா வண் நின்ற அதிர்வெண்ணில் ஒலித்த கட்டளைகளும் நெருங்கமுடியாமல் எங்களைப் போலவே சிக்கல்பட்டவாறு இருக்கிறார்கள். நின்று யோசித்து என்ன செய்வது? ராங்கோ மைக்கைக் கூப்பிட்டேன்.
"பதினெட்டையும் இருபத்திரெண்டையும் கண்காணிப்பில வச்சிரு. நான் அங்கால போறன்"
என்றேன். நகர்ந்தோம். இருபத்தேழை அடையும் வரை சுடும் சிக்கல்கள் நிகழவில்லை. இருள் கவியத் தொடங்கிவிட்டது. நகர்வை நிறுத்திவிட்டு இருபத்தேழிலேயே நின்றோம். இருபத்தொன்பதில் நிற்கும் எதிரி எந்த நேரமும் எம்மைத் தாக்கலாம். பின்புறத்திலிருந்து வரும் இராணுவத்தினர் தற்செயலாகவேனும் உள் நுழையலாம். எனவே விழிப்போடு இருந்தோம்.
இரவு ஒன்பது, ஒன்பதரை இருக்கலாம். அல்பா லீமா என் தோளைத் தொட்டாள். அவள் காட்டிய திசையில் உற்றுப் பார்த்தேன். ஐயமில்லை. அது இரண்டு மனிதர்கள்தான். இருபத்தெட்டுப் பக்கத்திலிருந்து நகர்வகழியில் குனிந்தபடி அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். எம்மவர்களாக இருக்கக்கூடிய வாய்பேயில்லை. ஒருத்தி சுட்டாள். திடீரென இருவரையும் காணவில்லை. ஓடிவிட்டார்களோ? ஓடினால் இந்த இரவில் தொப்புத் தொப்பெனச் சத்தம் கேட்டிருக்குமே? அப்படியே நிலத்தில் குந்திவிட்டார்களோ ஊர்ந்தவாறு மேலும் நகர்கிறார்களோ? தெரியவில்லை. இரண்டு துப்பாக்கிகள் அவர்கள் மறைந்த இடத்தையே குறிபார்க்க, ஏனையவை எங்கும் அடிக்கக் கூடிய தயார் நிலையில். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும் அசைவொன்றும் இல்லை. என்ன நடந்திருக்கும்? யோசித்துக் கொண்டிருக்கையிலே ஒரு தலை உயர்ந்தது. கூடவே இன்னொரு தலையும். மறுபடியும் அவை எம்மை நோக்கியே அசைந்தன. சொல்லி வேலையில்லை. அமெரிக்கர்களால் பயிற்றப்பட்ட அணிகளென்ற இவர்களின் நினைப்புத்தானே பிழைப்பைக் கெடுக்கின்றது.
எங்கள் எல்லோருடைய துப்பாக்கிகளும் இந்த இரு தலைகளையும் வெளுத்து வாங்கிவிட்டன. துப்பாக்கி வெடியோசை விட கையெறி குண்டுகள் வெடித்த ஓசையும் சேர்ந்து எழுந்தது. பாதுகாப்பு ஊசி கழற்றப்பட்ட நிலையில் அவர்கள் கொண்டுவந்த குண்டுகளாயிருக்கும்.
எல்லாம் முடிந்தவுடன் மளமளவென எல்லோரும் இருபத்தேழுக்குள் புகுந்துகொண்டோம். இருபத்தொன்பதிலிருந்து எதிரி ஏவிய 60 எம். எம். மழை எம்மை அணுக முன்பே புகுந்துகொண்டோம். எல்லாமே முன் பின்னாகவும் பக்கவாட்டாகவுமே விழுந்து வெடித்தன. கும்மிருட்டு, தலைவரின் இயற்கை எங்களோடும் நட்பாயிருந்தது. எனவே தப்பிக் கொண்டோம்.
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பின்புறம் து}ர எங்கோ உரையாடல் கேட்டது. அது மெல்ல எங்களை நெருங்க நெருங்க மொழி விளங்கியது. உள் நுழைந்த இராணுவத்தினர் சிலர் ஏதோ தேவைக்காகத் தம் பகுதிக்குப் போகப்போகிறார்களோ? நெருங்கிய பின் அடிக்கத் தயாரானோம். ஆனால், குரல்கள் எம்மைவிட்டு விலகி இருபத்தொன்பதுப் பக்கமாகப் போயின. அதுதானே அவர்களின் பாதை. போய்விட்டார்கள்.
சிறிது நேரத்தின் பின் இன்னும் கொஞ்சம் குரல்கள். அவை எம்மை நோக்கி வந்தனபோல் தோன்றினாலும், இருபத்தாறுப் பக்கமாய்ப் போயின. திடீரென கதை நின்றுபோனது. ரோச் வெளிச்சம் அடிக்கப்பட்டது. பிறகு மறுபடி உரையாடல் ஆரம்பமானது. ஆனால், அது இப்போது எம்மை நோக்கி நகர்ந்தது. இருளில் உற்று உற்றுப் பார்த்து விழிகள் வெளியே விழுந்துவிடும்போல் இருந்தன. இப்போது இருபத்தாறுக்கும் எங்களுக்குமிடையிலான நகர்வகழியில் சில தலைகள் தெரியத்தொடங்கின. ஒருவர் தலை அல்ல. வந்தது ஒரு அணி. உரையாடல் மிக இயல்பாக நடந்தது. ஏதோ தமது தளமொன்றின் வரவேற்பறையில் நிகழ்வதுபோல. இவர்கள் எங்களது பகுதிக்கு வந்ததே பெரிய பிழை. வந்ததும் போதாமல் உல்லாசப் பயணம் வந்தவர்கள்போல, ஊர்சுற்றிப் பார்த்துவிட்டு, பளைப்பகுதியிலே தலைகளற்றுக் கிடக்கும் தென்னைகளையும் எண்ணிக் கணக்கெடுத்துவிட்டுத் திரும்பி வேறு செல்கிறார்களா?...
எங்களுடைய பீ.கே. எல்.எம். ஜீ அவர்களை வழியனுப்பத் தயாரானது