11-19-2005, 02:02 AM
<span style='font-size:25pt;line-height:100%'><b>இது நிழல் நிஜமல்ல</b></span>
[b]முன்னொருகாலத்திலே பத்மினி என்னும் பெயர் கொண்ட நங்கை தனது வெள்ளை குதிரையிலே தெற்கு நோக்கி சென்று ..... கொண்டிருந்தாள்.. இருட்டுவதற்குள் தென்னாட்டை அடைந்துவிடும் வேகத்துடன் குதிரையை முடுக்கிவிட்டாள்.. சந்தனவாசம் லேசாக காற்றில் மிதந்து வந்தது.. ''மடத்தை நெருங்கிவிட்டோம் சேனா'' சேனா என அவளால் அழைக்கப்பட்ட குதிரை புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் ஒரு முறை கனைத்துவிட்டு இன்னும் வேகத்தை கூட்டியது
அவள் ஆனந்தமுற்றாள் பல கற்பனைகளில் வேறு உலகுக்கு சென்றாள். இதனால் குதிரை வேகமெடுத்ததை அவளால் அறிய முடியவில்லை. அவ்ளோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சேனாவோ மடத்தை விரைவில் அடைய வேண்டும் என்னும் சந்தோசத்தில் தலை கால் புரியாமல் ஓடியது.. மடத்தில் இரவு நேரத்தில் கொடுக்கப்படும் சோற்றை தவரவிட்டுவிடக்கூடாதே என்பது அவளது எண்ணம் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவளது குதிரை.. மடத்தை நெருங்க நெருங்க இன்னும் வேகமாக சென்றது... மடத்தை நெருங்கிய போது அவளது ஆசை வீண்போகவில்லை...
மடத்தில அப்போது தான் இராப் போசனத்தை வழங்க ஆயத்தம் செய்து கொன்டிருந்தனர்.வரும் வழிப்போக்கர்களுக்கென்று சங்கிலிய மன்னனால் கட்டப்பட்டது அந்த மடம். அன்று நிலா வெளிச்சமாகையால் பலர் தமது பயணத்தை மேற்கொண்டிரிந்தனர்.ஆனையிறவைக் கடப்பதற்கு முன் சற்றுத் தூரத்திலேயே அந்த மடம் இருந்தது.தெற்கே வன்னி நாட்டிற்கும்,தென் கிழக்கே வணிகத் துறைமுகம் உள்ள மாந்தோட்ட நகரிற்கும் செல்லும் வழிப் போக்கர்கள் இளைப் பாறி செல்லும் இடமாக அந்த மடம் இருந்தது.
அனேகமானோர் வணிகர்களாகவும் ,பயணிகளாகவும் இருந்தனர்.மாறு வேடம் பூண்டிருந்த பத்மினி பெண்கள் எவரையுமே காணவில்லை.தனது மாறு வேடம் கலையாமல் அவள் அந்தக் கூட்டத்திற்குள் காரியம் ஆற்றவேண்டி இருந்தது.
அவள் தனது தட்டை எடுத்துக் கொண்டு ஒரு ஒரத்தில் இருந்த திண்ணையில் அமரப் போன போது ,பின்னால் இருந்து ஒரு குரல் 'தாங்கள் எங்கு செல்கிறீர்கள் வணிகரே' என்று ஒலித்தது.
தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளவிரும்பாத பத்மினி.. ஏதும் கேட்காதது போல சோறு வரும் திசையே பார்த்துக்கொண்டிருந்தாள்... ஆனால் அவர் விடவில்லை
அவள் உட்காரது நடக்கலானாள் அவரும் விடாது பின் சென்றார். அவளுக்கு பக் பக் என நெஞ்சடித்தது எங்கே தான் பிடிபட்டுவிடுவேனோ என்று செய்வதறியாது வேகத்தை கூட்டினாள் சோத்துக்கு குழம்பு இல்லை அது சொல்லவந்தால் இப்படி ஓடுகிறீர்களே என்று பின்னால் வந்தவர் சொன்னார்
அப்போது பத்மினிக்கு அசடு வழிந்தது அதனைக்காட்டிக்கொள்ளாது அப்படியா? மன்னிக்கவும் நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன் ஆதலால் தாங்கள் கூப்பிட்டது சரியாக கேட்கவில்லை சோற்றுக்குக் குழம்பு இல்லாவிட்டால் பரவாயில்லை எம்மவர்களில் அதிகமானோர் இடியப்பத்துடன் விரும்பிச் சாப்பிடும் சொதி அல்லது சம்பல் இருந்தாலே போதும் அல்லது சீனி இருந்தால் கொடுங்கள் அது போதும் என்று தனது பார்வையை அவர்மீது செலுத்தினாள். அதேநேரத்தில் இந்தகுரலுக்குரியவர் யார் முன்பே கேட்டிருகிறேன் யாரிவர்?தோற்றத்தில் வயதானாலும் குரலில் தழும்பும் இளமை,என்னை போல் மாறுவேடதாரியா? என்று யோசித்தவளுக்கு
ம்ம் நினைவுக்கு வந்தது. அன்றொருநாள் கன்னிமாட உப்பரிகையின் மேல் தோழியுடன் நின்றபோது புரவி மேல் அமர்ந்து தன்னை வர்ணித்து சென்ற வன்னி இளவரசன் குலசேகரன் குரலை போல் இருந்தது.....சற்று வடிவாக மீண்டும் ஒரு முறை பார்த்தாள்..ம்ம் அவரே தான் .. ஏன் இவரும் மாறு வேடத்தில் வந்திருக்கார் என்று யோதித்து விட்டு..அவரிடம் போய் ..தாங்கள் வன்னி இளவரசனை போல் தென்படுகிறீர்கள் ஏன் இந்த மாறு வேடம்? என்று கேட்டாள் ம்ம் எம் நாட்டுக்குள் உளவாளிகளின் நடமாட்டம் அதிகரித்து விட்டது அது தான் என்று சொல்லி கொண்டே எங்கிருந்தோ அவளை நோக்கி வீசப்பட்ட குறுவாளை தன் உடைவாளால் தட்டிவீழ்த்தினான்..
மழை முகத்தில் படுவது போல் இருக்க திடுகுற்று விழித்தாள் ம்ம் அத்தனையும் கனவு அம்மா செம்புடன் கையில் தண்ணியுடன் பக்கத்தில் என்னடி விடிந்தும் கனவோ எழும்படி படி என்று காளிபோல் எதிரே நின்றாள் சே கனவுகூட காணமுடியாத வாழ்க்கை!!!!!!

<b> .. .. !!</b>