11-18-2005, 11:34 PM
[size=15]<b>பெண்களுக்கான ஆசனங்கள்
குப்புற படுத்துச் செய்யும் ஆசனங்கள்
<img src='http://www.dinakaran.com/health/women_yoha/2005/aug/yoga.jpg' border='0' alt='user posted image'>
[b]புஜங்காசனம்</b>
நல்ல பாம்பு படம் எடுப்பது போல் தோற்றமளிக்கும். இதில் முதுகெலும்பு பின்புறம் வளைகிறது. சர்ப்பாசனம் என்றும் கூறலாம்.
<b>செய்முறை.</b>
குப்புறப்படுக்கவும், கால்களை இரண்டும் சேர்ந்து இருக்கட்டும். முகவாய்க் கட்டை தரையில் படிந்திருக்க வேண்டும். இரு உள்ளங்களைகளையும் மார்புக்கு அருகில் பக்க வாட்டில் வைத்து அழுத்தி மூச்சை நன்கு உள்ளிழுத்துக் கொண்டு பாம்பு படம் எடுப்பது போல மெதுவாக தலையை யும், மார்பையும் படிப்படியாக உயர்த்தவும்.
தொப்புளுக்கு கீழ் உள்ள பாகம் தரையில் படிந்திருக்க வேண்டும். இந்நிலையில் 30 விநாடிகள் இருக்கலாம். பிறகு மெதுவாக படிப்படியாக ஆரம்ப நிலைக்கு வரலாம். இதை 2 முறை செய்தால் போதும்.
<b>பயன்கள் :</b>
பெண்களுக்கு மிக உகந்த ஆசனம். மாத விடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், மலட்டுத் தன்மை, முதுகு வலி நீங்கும். தொப்பை கரையும். ஆஸ்துமா நீங்கும். முதுகெலும்பு பலம் பெறும். பெண்கள் நல்ல தோற்றத்தையும் முக அமைப்பையும் பெறலாம்.
<img src='http://www.dinakaran.com/health/daily/2005/aug/14/yoga.jpg' border='0' alt='user posted image'>
<b>அர்த்த சலபாசனம்</b>
அர்த்த என்றால் பாதி என்று பொருள்.
குப்புறப்படுத்து கைகளை பக்கவாட்டில் கால்களை ஒட்டி வைத்துப் பிறகு ஒரு காலை முடிந்த வரை பின்னோக்கி தூக்கவும். முட்டி வளையக் கூடாது. உள்ளங்கைகள் பூமியைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். இதே நிலையில் 15 விநாடி இருந்து விட்டு பிறகு மெதுவாக காலை கீழே இறக்கி இப்போது மாற்றுக் காலை தூக்கிச் செய்யவும். இவ்விதம் இரண்டு முறை செய்யலாம்.
<b>பயன்கள்</b>
சலபாசனம் செய்வது எளிதாகிறது.
கிட்னியும், காதும் பலப்படும்.
தொப்பையும் கரையும்.
<b>உட்கார்ந்து செய்யும் ஆசனங்கள் </b>
<img src='http://www.dinakaran.com/health/women_yoha/2005/nov/janu.jpg' border='0' alt='user posted image'>
<b>ஜானு சிரசாசனம்</b>
இரண்டு கால்களையும் நீட்டி நேராக உட்கார்ந்து வலது காலை மடக்கி குதிகால் ஆசன வாயில் படும்படி வைக்கவும். பிறகு மெதுவாக முன் நோக்கி வளைந்து இரு கைகளாலும் இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம் இடது கால் மூட்டைத் தொட வேண்டும். இந்த நிலையில் 15 விநாடி இருந்து பிறகு வலது காலை நீட்டி இடது காலை மடக்கி முன்போலச் செய்யவும். ஒவ்வொரு காலையும் 2 முறை செய்ய வேண்டும்.
<b>பலன்</b>
1. எருவாய், கருவாய் பகுதிகளிலுள்ள நரம்பு மண்டலங்களும் தசைகளும் வலிமை பெறுகிறது.
2. இது செய்தால் கெட்ட பழக்கங்கள் நீங்கி விடும்.
3. நீரழிவு நோய்க்கு மிக முக்கியமான ஆசனம்
4. பெண்களுக்கு கருப்பை மற்றும் அது சம்பந்தமான கோளாறுகள் நீங்கி விடும்.
5. உடல் எடை, தொந்தி குறைகிறது.
<b>குறிப்பு </b>
1. குதிகால் மீது உட்காரக் கூடாது.
2. அடிமுதுகு, முதுகுத்தண்டு கோளாறு உள்ளவர்கள் இதைச் செய்யக் கூடாது.
நன்றி: தினகரன்