06-22-2003, 09:28 AM
மூன்றாம் கட்ட ஈழப்போரும்
விடுதலைப் புலிகளும்
சுமார் ஆறரை ஆண்டுகளாக நீடித்த மூன்றாம்கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்துவிட்டது. இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்துக்குமான போரில் மிக மூர்க்கமானதும் தீவிரமானதுமான போர் இக்கால கட்டத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் சிந்தப்பட்ட இரத்தத்தின் அளவும், இழக்கப்பட்ட ஆளணி மற்றும் பொருளாதார இழப்பும் மிக உயர்வானதாகும்.
மூன்றாம்கட்ட ஈழப்போரினால் ஏற்பட்ட பெரும் சுமையை தாங்கமுடியாது பொ. ஐ. முன்னணி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தை அற்பஆயுளிலேயே முடித்துக் கொள்ள வேண்டியதாகியது.
ரூஙூஸசூசி;

1995இல், சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தபோது சந்திரிகா குமாரதுங்க அரசாங்கம் தமிழர் தாயகத்தின் மீது பாரிய படை நடவடிக்கைகளுக்குத் தயாரானது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இராணுவ hPதியில் ஒழித்துக் கட்டுதல் என்ற முடிவுடன் மேற்கொள்ளப்பட்ட இப்படை நடவடிக்கை ஒருபுறம் கால நிர்ணயத்துடன் கூடியதாகவும், மறுபுறத்தில் வெற்றிகள் விகிதாசார hPதியில் மதிப்பிடப்படுபவையாகவும் இருந்தன. 1995இன் மத்தியில் போர் மூண்டபோது, அவ வாண்டின் இறுதிக்குள் இப்போர் முடிவுக்கு வரும் என அரசு கூறியது. பின்னர் 1996 ஏப்ரலுக்கு எனவும், பின்னர் அவ வாண்டின் இறுதிக்குள் எனவும் கூறியது. இதேசமயம், யாழ்.குடாநாட்டை இராணுவம் ஆக்கிரமித்தபோது 60 சதவீத யுத்தம் முடிந்ததெனவும், 1997இன் இறுதியில் ஜயசிக்குறுவின் போது யுத்தத்தில் 90 சதவீதம் முற்றுப் பெற்று விட்டதாகவும் கூறியது.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முற்றிலுமாக இராணுவ hPதியில் தோற்கடித்தல் என்ற முனைப்புடன் செயலில் இறங்கிய பொ. ஐ. முன்னணி அரசாங்கம் இதற்கென இராணுவ அரசியல் இராஜதந்திர செயற்பாட்டில் அதற்கு ஏற்றதாக அணுகுமுறையையும் கைக்கொண்டது.
1. பாரிய படை நடவடிக்கைகள் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துத் தமிழர் தாயகப் பரப்பை ஆக்கிரமித்தல்.
2. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வென்ற hPதியில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரப் பகிர்வுடன் தமிழ்இனத் தேசவிரோதக் கும்பலுடன் இணக்கப்பாட்டுக்கு வருதல், மறுவளமாகக் கூறுவதானால் அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றைத் திணித்தல்.
3. விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என முத்திரையிட்டு சர்வதேச hPதியில் ஓரம்தள்ளி புலிகளுக்கு எதிரான போருக்கு சர்வதேச நாடுகளின் இராணுவ - பொருளாதார உதவிகளைப் பெறுதல், இதற்கென முழு அளவில் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
இராணுவ hPதியில், விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அழித்தல் என்ற நிலைப்பாட்டை எடுத்த பொ. ஐ. முன்னணி அரசாங்கம், சிறீலங்கா ஆயுதப்படையை நவீனப்படுத்துவதில் பெரும்முனைப்புக் காட்டியது. பாதுகாப்புக்கென பெரும் தொகை நிதியை ஒதுக்கீடு செய்த ஆட்சியாளர்கள் பெருமளவிலான நவீன போர்த் தளபாடங்களையும் ஆயுதப்படையில் இணைத்துக்கொண்டனர். நவீன குண்டுவீச்சு, ஜெற்விமானங்கள், தாக்குதல் உலங்குவானு}ர்திகள், தாக்குதல் டாங்கிகள், கனரக பீரங்கிகள், றொக்கட்டுகள், அதிவேக ரோந்துக் கலங்கள், பீரங்கிக் கப்பல்கள் என முப்படைகளும் நவீனப்படுத்தப்பட்டன. 2001ஆம் ஆண்டில் இராணுவச் செலவீடானது 8000 கோடிக்கும் 10.000 கோடிக்கும் இடையிலான தொகையை எட்டும் அளவுக்கு ஆயுத தளபாடக்கொள்வனவு உயர்நிலை அடைந்தது.
மிக வேகமாக நவீனப்படுத்தப்பட்ட இராணுவம், தொழில்சார் hPதியில் உலக முன்னணி இராணுவங்களுடன் இணைத்துப் பேசப்படும் அளவுக்கு வளர்க்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறீலங்கா இராணுவம் இதுவரையில் மேற்கொள்ளப்படாத அளவில் பாரிய படை நடவடிக்கைகளையும் இக்காலப்பகுதியில் நடாத்தியது. ரிவிரச, சத்ஜெய, ஜயசிக்குறு, ரணகோஸ போன்ற பாரிய நடவடிக்கைகள் ஒவ வொன்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்களை உடையவையாக மாதக்கணக்கில் நீடிப்பவையாகவும் இருந்தன.
இதில் ரிவிரச, சத்ஜெய போன்றவை இலக்கை அடைந்தவையாயினும், அதற்கென அரசு கொடுத்த விலை பெரிதாகவே இருந்தது. பல நு}ற்றுக்கணக்கான படையினரையும், பெருமளவு ஆயுத தளபாடங்களையும் இராணுவம் இழக்க வேண்டியதாயிற்று. இதனால் இவ வெற்றிகள் குறித்த மதிப்பீட்டில் பாதகமான விமர்சனங்களும் இருந்தன.
இதேவேளை, ஜயசிக்குறு, ரணகோஸ நடவடிக்கைகள் திட்டமிட்ட hPதியில் இலக்கை அடையாதவையாக மட்டுமல்ல, பெரும் ஆளணி இழப்புக்களையும், பெருமளவு இராணுவத் தளபாடங்களையும், பெரும் நிதிவிரையத்தையும் அரசுக்குக் கொடுப்பதாக இருந்தன. ஒட்டுமொத்தமாக நோக்கினால், மூன்றாம் கட்ட ஈழப்போரின் முடிவில் இக்காலகட்டத்தில் சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட ரணகோஸ, ஜயசிக்குறு, சத்ஜெய நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளால் முற்றாக முறியடிக்கப்பட்டவையாகவும், ரிவிரச நடவடிக்கையால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தைத் தக்க வைத்துக் கொள்ள மிகப்பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையையும் இராணுவத்துக்குக் கொடுத்துள்ளது.
மூன்றாம்கட்ட ஈழப்போரைச் சிறீலங்கா அரசு பெரும் முனைப்புடன் முன்னெடுத்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் அமைப்பும் அதற்கு ஏற்ற வகையில் தனது இராணுவ யுக்திகளையும் தாக்குதல் திட்டங்களையும் மாற்றியமைத்துக் கொண்டது. இதன் முதற்கட்டமாக யாழ் குடாநாட்டைக் கைப்பற்றவும், முற்றுகையிடவும் சிறீலங்கா இராணுவம் திட்டமிட்டபோது குடாநாட்டைவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் பின்வாங்கல் ஒன்றை மேற்கொண்டது. தமது ஆளணி, ஆயுத தளபாடங்கள் என்பனவற்றுக்குப் பெரும் சேதம் விளையாமலும், பல இலட்சக்கணக்கான மக்களுடனும் கூடியதாக இவ வெளியேற்றம் இருந்தது.
வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு நகர்ந்த விடுதலைப் புலிகள் அங்கு தமது நிலைகளை உறுதிப்படுத்துவதும், தமது இருப்புக்கு இடையுூறுகளை அகற்றுவதுமான நோக்கில் ஓயாத அலைகள் 01 நடவடிக்கை மூலம் முல்லைத்தீவுப் படைத்தளத்தைத் தாக்கி அழித்தனர். இப்படைத்தள அழிப்பானது யாழ் குடாநாட்டை விட்டு புலிகள் வெளியேறியமையானது முற்றிலும் தந்திரோபாய hPதியிலானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வதானதொரு நிலையை உருவாக்கியது.
இதன் பின்னர் சிறீலங்கா இராணுவம் சத்ஜெய, ஜயசிக்குறு நடவடிக்கைகளை மேற்கொண்டபோது விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல்களிலும் புதிய பரிமாணங்கள் வெளிப்படத் தொடங்கின. அதிலும், குறிப்பாக 'ஜயசிக்குறு' நடவடிக்கையின்போது புலிகள் செயற்பாட்டில் மரபுவழிப் படையணிகளின் பண்புகள் பெருமளவில் வெளிப்படத்தொடங்கின.
குறிப்பாகப் படையணிகளை நகர்த்தல், நேரடி மோதல்கள், கனரக பீரங்கிப் பாவனைகள், தொடர்ச்சியான பல நாட்கள் இரவு - பகல் சமர்கள் என்ற hPதியிலும் இரு எல்லைக் கோடுகளுக்கு இடையில் அமைந்தது போன்றதான பதுங்குகுழிச் சமர்கள் என்ற வகையிலும் இவை அமைந்தன. இவ வாறாக வளர்ச்சி கண்ட புலிகள், ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையின் மூலம் ஓர் எல்லையைத் தொட்டனர். அதாவது, இலங்கைத்தீவில் இரு இராணுவங்கள் உண்டென்பது எவராலுமே நிராகரிக்கப்பட முடியாததொன்றாகியது.
இவ வேளையில், விடுதலைப் புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் - 03 தாக்குதல் நடவடிக்கையும் அதன் உச்சமாக அமைந்த ஆனையிறவுப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் வெற்றிகொண்டமையும் சிறீலங்கா இராணுவ - விடுதலைப் புலிகள் இடையிலான இராணுவச் சமநிலையையே மாற்றுவதாக இருந்தது. இதனை சிறீலங்கா அரசு வெளிப்படையாக தனது நட்பு நாடுகளிடம் இராணுவ உதவி கோரியதில் இருந்தே புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
இந்நிலையில் மூன்றாம்கட்டப் போரில் வடபுலத்தில் நிகழ்ந்த இறுதிப் பெரும்சமராக சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட தீச்சுவாலை நடவடிக்கையும் புலிகளின் எதிர் நடவடிக்கையும் இருந்தது. சிறீலங்கா இராணுவம் பெரும் தயாரிப்புடன் மேற்கொண்ட இத்தாக்குதலானது விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டபோது சிறீலங்கா இராணுவத்தின் இயலாமை வெளிப்பட்டது. தமது அடுத்தகட்ட நடவடிக்கையைக்கூட இராணுவம் சிந்திக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. அதுமாத்திரமல்ல விடுதலைப் புலிகள் இயக்கத்தை இராணுவ hPதியில் வெற்றி கொள்ளுதல் முடியாது என்பதையும் இத்தாக்குதல் சம்பவம் உலகிற்கு வெளிக்காட்டியது.
இதேவேளை, மூன்றாம்கட்ட ஈழப்போர்க்காலத்தினுள் நடந்த ஒரு பெரும் தாக்குதல் சம்பவமாக கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதலும், சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதற் சம்பவமும் அமைந்திருந்தது. இதனை யார் நடத்தியிருப்பினும் சிறீலங்காப் படைத்தரப்பை நிலைகுலையவைத்தது மட்டுமல்ல, சிறீலங்கா அரசையே ஸ்தம்பிக்கச் செய்வதொன்றாகவும் இருந்தது. சிறீலங்காவின் எதிர்காலம் குறித்துப் பலத்த கேள்விகளையும், நம்பிக்கையீனங்களையும் தோற்றுவிப்பதொன்றாகியது.
சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொ. ஐ. முன்னணி அரசாங்கத்தால் பெரும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்ட மூன்றாம்கட்ட ஈழப்போர் முடிவடைந்த வேளையில் சிறீலங்கா ஆயுதப்படையினர் தமது அடுத்த கட்டம் குறித்து தீர்மானிக்க முடியாத குழப்பமானதொரு நிலையிலேயே இருந்தனர். ஏனெனில், இராணுவச் சமநிலை விடுதலைப் புலிகளுக்குச் சாதகமானதாக மாறியிருந்தது.
மூன்றாம்கட்ட ஈழப்போரானது தரையில் நிகழ்ந்ததற்கு எந்த வகையிலும் முக்கியத்துவம் குறைவில்லாமல் கடற்பரப்பிலும் நிகழ்ந்துள்ளது. இக்காலப் பகுதிக்குள் விடுதலைப் புலிகளால் இருபெரும் தாக்குதல்கள் திருமலைத் துறைமுகத்தினுள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட அதேவேளை தொடர்ச்சியாக நடந்த ஆழ்கடற்சமர்கள் பெரும்பாலும் விநியோகமார்க்கத்தை மையமாகக் கொண்டவையாகவே இருந்தன. மேலும், கடற்புலிகளின் தாக்கி அழிக்கும் திட்டத்தின் அடிப்படையிலும், தரைத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்குதல் என்ற hPதியிலும் இச்சமர்கள் இடம்பெற்றன.
தரைவழி விநியோக வழியின்றி யாழ். குடாநாட்டில் சுமார் 35.000 துருப்புக்களை நிலை நிறுத்தியிருந்த சிறீலங்கா அரசு, அவற்றிற்கான முக்கியமான விநியோக மார்க்கமாக கடல் வழியையே நம்பி இருந்தது. இதேசமயம் விடுதலைப் புலிகளின் விநியோக மார்க்கமும் கடல் வழி என சிறீலங்கா ஆயுதப் படையினரும் கருதியதினால் இரு தரப்பினரின் கவனமும் கடற்பிராந்தியத்தில் அதிலும் குறிப்பாக வட-கிழக்கு கடற்பிராந்தியமான புல்மோட்டையில் இருந்து பருத்தித்துறை வரையிலான கடற்பரப்பில் இருந்தது.
மூன்றாம்கட்ட ஈழப்போரில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற இக்கடற் பிராந்தியத்தில் இடம்பெற்ற கடற்சமர்களில் சிறீலங்கா அரசுக்குச் சொந்தமான பெரும் விநியோகக் கப்பல்கள் அதிவேகப் பீரங்கிக் கலங்கள், பீரங்கிக் கப்பல்கள் என்பன மூழ்கடிக்கப்பட்டன. இறுதியாக கடற்புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பலத்தை ஒடுக்கவும் என கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட 'வருணகிரண' நடவடிக்கையும் தோல்வியில் முடிவடைந்தது.