11-18-2005, 03:33 PM
Quote:ஆஸ்த்மாவில் அவதிப்படுகையில்
நெஞ்சுதடவிய
அம்மாவின் கரங்களை நினைவுபடுத்தும்
முதுகில் படரும்
விரல்கள்
நேசிப்பை முதன்முதலாய்
அனுபவிக்கும் சிலிர்ப்பைப்போல
கடந்தகாலத்தின் வலிகளுடன்
நம்மால் இன்னொருமுறை
இதமாய் நேசிக்கமுடிவது
வியப்புத்தான்
உன் ஆடைகள்
களையத்தொடங்கிய மூன்றாம் சாமத்தில்
வினாவுகிறாய்
முலை தடவும் மென்விரல்கள்
நாளை என் மூக்குத்தியை
மூர்க்கமாய்ப் பிடுங்கி எறியமாட்டாதென்பதை
எப்படி நம்புவது.
கவிஞர் சரியான முறையில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே எனது நிலைப்பாடு. ஏற்கனவே கசப்புடன் இருந்தவர்கள் அதனை மறந்து ஒன்றான போதினிலும் கடந்த காலம் ஒரு நிழலாய் நின்று எச்சரிக்கையுடன் இவ்வாறான கேள்வியைக் கேட்க தூண்டுகிறது.
இன்று காமத்தில் இவ்வாறு அன்பாக இருக்கிறாயே நாளை முன்பு போல் நீ மாறமாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம், இதை இப்படி விளக்குவதை விட வேறு எப்படி மிக அழுத்தமாக, ஏக்கமாக விளக்க முடியும் அப்படி விளக்க முடியுமென்றால் எங்கே சிலவற்றைத் தாருங்கள் பார்க்கலாம்.
அதைவிட இங்கு இச்சொல் மிக நாகரிகமாக எடுத்தாளப்பட்டிருக்கின்றது என்பது என் கருத்து. இச்சொல்லானது தமிழ்மொழியின் பண்டைய இலக்கியங்களில் மிகவும் சாதாரணமாக கையாப்பட்டிருக்கின்றது.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

