Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#85
மனித வரலாற்றின் மனிதத்தன்மை தொலைந்த பக்கங்களில் சில...
சிறீலங்கா இராணுவத்தால்
தமிழ்ப் பெண்கள் மீது பிரயோகிக்கப்படும்
போர் ஆயுதமாகிவிட்ட பாலியல் வல்லுறவு - ஒரு முழுமையான
பார்வை
கடந்த வருடம் டீடீஊ தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பிரபல நிறுவனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி பெருந்தொகைப்பணம் செலுத்தி செவ வி வழங்கிய சிறீலங்காவின் சனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிட்டிருந்த வாக்குமூலங்கள் முழு உலகையுமே முட்டாளாக கருதி விட்ட அவரின் அசட்டைத்தனத்தை மீண்டும் நிரூ பித்துள்ளபோதும். உண்மைக்கு புறம்பான முற்றிலும் விரோதமான அவரின் கூற்றுகளை ஒளிபரப்பி தமிழீழ மக்கள் மனங்களில் தனக்கிருந்த மதிப்பிற்கு இழுக்கு தேடிக்கொண் டது அந்த நிறுவனம். ஏனெனில் தமிழ் மக்கள் இன்றுவரை டீடீஊ செய்தி நிறுவனத்தின் நடுநிலைப் போக்கு மீது நல்ல நம்பிக்கையும் சிறந்த அபிப்பிராயமும் வைத்திருந்தார்கள் என்பதுதான் உண்மை. ஆயினும் சர்வதேச மன்னிப்புச் சபையால் சிறீலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைமீறல்கள் பற்றிய ஆதாரபுூர்வமான கண்டனத்தையும் வெளியிட்டதன் மூலம் தனது பக்கசார்பற்ற தன்மையை வெளிக்காட்டியிருப்பதையிட்டு மகிழ்ச்சிகொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் இல்லாதொழிக்கப்பட்டுவிட்டன. மனித உரி மை மீறல்களை தனது அரசு செய்வ தில்லை. தமிழ் பிரதேசங்கள் மீதான பொருளாதாரத் தடையை தான் ஆட்சிக்கு வந்த எட்டுத் தினங்களில் முற்றிலுமாக நீக்கிவிட்டேன், இதுவரை ஒரேயொரு பாலியல் வல்லுறவு சம்பவம் தான் தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றுள்ளது என்றெல்லாம் அப்பட்டமான, அசிங்கமான பொய்களை குவித்து கூச்சமுமின்றி ஒரு மாண்புமிகு சனாதிபதி அவர்கள் உரைப்பதை ஒளிபரப்புவது கூட ஊடக தாபனத்திற்கு இழுக்குத தேடும் செயலாகவே கருதப்பட இடமுண்டு. அல்லது இத்தகைய ஊட கங்களை தன் பிரச்சார சாதனமாகப் பயன் படுத்திவிடலாம் என்று சந்திரிகா எண்ணி யதை நிறைவேற்றித்தருகின்றனவா என்றும் சந்தேகிக்க இடமேற்படுவதில் வியப்பில்லை. செவ வியின்போது கேட்கப்பட்ட கேள்வி களுக்கு அவர் பட்ட திணறலையும் முற்றி லுமே அப்பட்டமான பொய்களைக் கூறி, மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகள் மற்றும் நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களை அடித்து மறுக்கும் அவரின் அநாகாPகமான செயலையும், 'பிசாசு கூட பைபிள் வசனம் பேசும்' என்ற பழமொழியைப் போல் வரலாற்றுச் சம்பவங்களுடன் ஒப்பிடுதல் போன்ற அருகதையற்ற நடவடிக்கைகளையும் அப்படியே படம் பிடித்துக் காட்டிய வகையில் அந்நிறுவனம் பாராட்டப்படவேண்டும். இவற் றை தனி மனிதர்கள் மட்டுமன்றி முழு உலகுமே உடனடியாகப் புரிந்துகொண்டு முகம் சுழித்தது. இதனால்தானோ என்னவோ அவ ரின் கருத்துக்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவை என்ற hPதியில் ஏனைய செய்தி ஊடகங்கள் அவற்றுக்கு முக்கியத்துவமோ பிரபலமோ கொடுக்கவில்லை. எனினும் வன்னி மக்கள், அதாவது முக்கியமாக சந்திரிகா அரசின் ஒவ வொரு திட்டமிட்ட இன அழிப்பு செயற்பாடுகளின் நகர்வுகளின் போதும் நசுக் கப்பட்டு நலிந்து போய்க்கொண்டிருக்கின்ற வன்னி வாழ் தமிழ் மக்களின் சார்பாக வன்னிப் பிரஜைகள் குழு ஆட்சேபம் தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் ஆட்சேபித்திருப்பது பண்டாரநாயக்க குடும்ப பாரம்பரியமாக தற்போது சந்திரிகாவிடம் வந்திருக்கும் இனத்துவேச அரசியலின் இராஜதந்திரமான பொய்யுரைத்தலை மட்டுமல்ல, போலித்தனத்தை பொய்யை, பொய்யென்று உணர்ந்துகொண்டு அதனை ஒரு பொருட்டாக கருதி ஊடகங்கள் வெளியிட்டிருந்தமையையும் சேர்த்துத்தான். கிட்லரின் பிரச்சார செயலரான கொயபல்ஸ் கொண்டிருந்த புகழையும் விஞ்சிவிட்டார் சந்திரிகா அம்மையார் என்பதை வெளிக்காட்டத்தான் ஊடகங்கள் அப்படிச் செய்திருக்கலாம். எது எப்படியிருந்த போதிலும் தமது கடமைகளை ஓரளவாவது நிறைவேற்றிக் கொண்டிருக்கின்ற அரசுகளுக்கெதிராக கண்டனத்தையாவது இன்று வெளியிட்டு வருவது பாராட்டப்படவேண்டியது. சமாதான முயற்சிகள் கனிந்து கொண்டிருக்கின்ற இந்தக் காலப்பகுதியில் நடந்து போனவற்றை மறந்துவிடத் தமிழ் மக்கள் தயாராகின்ற போதிலும், பாலியல் வல்லுறவு போன்ற அநாகரிகங்கள் என்றுமே மறக்கப்பட முடியாதவை. ஏனெனில் இனவாத வெறியர் களால் பாதிக்கப்பட்டவர்களாகிய தமிழ் இளம்பெண்களுக்கு நிச்சயம் நீதி கிடைத்தாக வேண்டும். அவர்களிடமிருந்து பறிக் கப்பட்ட அவர்களது வாழ்க்கைக்கு நட்டஈடு கொடுத்துவிட முடியாது போனாலும் இனிமேலாவது இவை நடைபெறுவது தடுக்கப்பட்டாகவேண்டும்.
சிறீலங்காவில் பண்டாரநாயக்க குடும்பத்தின் ஆட்சி ஆரம்பித்த காலம் முதற்கொண்டு சர்வசாதாரணமாக இருக்கின்ற இவையெல்லாம் ஒருபுறமிருக்க, சனாதிபதி சந்திரிகா வின் ஆட்சியிலேயே இலங்கைத்தீவு வரலாறு காணாத இனஅழிப்பு செயன்முறைகளையும் அவற்றிலும் அதியுச்சமான அதிஅகோரமான அதிகேவலமான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களையும் கண்டிருக்கின்றது. மனித உh}மை அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், உள்@ர் புனர்வாழ்வு நிறுவனங்கள், கண்டனப் பேரணிகள், கண்டன அறிக்கைகள் என்பவற்றால் இது நிரூபணமாகிக் கொண்டிருப்பதையும் உலகம் அறியாமல் இல்லை. நிலமை இப்படியிருக்க, தனது ஆட்சிக்காலத்தில் ஒரேயொரு பாலியல் வல்லுறவுச் சம்பவம் மட்டுமே இடம்பெற்றது என்றும் அதற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும் அபத்தமான பொய்யைக் கூறி, இவ வாறான அசிங்கங்களை போர்த்தி மூடிவிட முனையும் சந்திக்கா அவர்களின் செயற்பாட்டை எந்த மனிதாபிமானமுள்ளவனும் மன்னிக்கமாட்டான். சனாதிபதி என்னும் நிலையை விட்டு, சந்திரிகா அவர்கள் ஒரு குடும்பப் பெண், ஒரு தாய், ஒரு பாதிக்கப்பட்ட விதவை, இளம் பெண் பிள்ளையின் அன்னை என்ற hPதியில் அவர் இப்படியான பாலியல் வக்கிர கலாச்சாரத்திற்கு வக்காளத்து வாங்குவதன் மூலமாக, அதனை மேலும் வளர்த்துவிடத் துணைநிற்பதைவிட மோசமானது எதுவுமிருக்க முடியாது.
தமிழினத்தின் மீதான இன அழிப்பை பல ஆண்டு காலமாக பற்பல வழிகளிலும் பரிமாணங்களிலும் மேற்கொண்டு வரும் சிறீலங்கா வின் சிங்களப் பெரும்பான்மை அரசு ஈற்றில், இவ வாயுதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ள்ளது. தமிழரின் தனித்துவத்திற்கும் பெருமைக்கும் தன்னிறைவிற்கும் எவையெவை மூலகாரணங்கள் என்பதை ஆழ்ந்த ஆராய்ச்சியின் மூலம் அறிந்துகொண்டு அவற்றில் கைவைப்பதன் மூலம் நீண்ட கால அடிப்படையிலாவது தமிழினத்தின் அடையாளத்தையும் தன்னிகரில்லாத சிறப்பிற்கும் தளராத வீரத்திற்கும் காரணமான இனத்தூய்மையையும் சிதைத்துவிடலாம் என்று கீழ்த்தரமான, குறுக்கு வழியில் சிந்திக்கத் தொடங்கியது. அதனடிப்படையில்தான் பேரினவாதத்தின் இன அழிப்புப் படலத்தின் சதிநாசகார வியுூ கம் படிப்படியாக வாழைப்பழத்தில் ஊசி போல நகர்த்தப்பட்டது,
இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களை விட கல்வியறிவில் மேம்பட்டிருப்பதையும் அதிக தொழில் வாய்ப்பை பெறுவதையும் பொறுக்கமாட்டாத சிங்களத் தலைமை தமி ழரின் அறிவுப் பொக்கிசமான யாழ். நூலகத்தை எரியுூட்டியது. அடுத்து பல்கலைக்கழக வெட்டுப் புள்ளியில் கைவைத்தது, இது கல்வியறிவுடைய தமிழ்ச் சமுதாயம் இனியும் வளரக்கூடாது என்ற வெறியின் வெளிப்பாடு கள்.
தமிழர்களின் பாரம்பரிய புூமிகள் எங் குமே தமிழரின் புூர்வீக நிலங்களில் தம்மினத்தாரை குடியேற்றுவதன் மூலம் மேலும் படிப்படியாக நிலத்தை ஆக்கிரமித்து விடலாம் என்று ஆதிக்க குணத்தின் வெளிப்பாடு இது.
தனித்துவம் கொண்ட தமிழ் மொழியே தமிழரின் அசைக்க முடியாத அடையாளம் என்பதை அறிந்து கொண்டதன் விளைவே, இலங்கையில் இருந்து சிறுகச் சிறுக தமிழ் மொழியை ஒதுக்கிவிடும் நோக்கோடு சிங்கள மொழி அலுவலக மொழியாக்கப்பட்டமையும், இதன் அடுத்த கட்டமே தனிச்சிங்களமே ஆட்சி மொழியென பிரகடனப்படுத்தப்பட்ட செயற்பாடு. தமிழர்களை இரண்டாம் தரப்பிரஜைகளாக நடத்துவதன் மூலம் தமிழினம் இழிவான இனம் என்னும் எண்ணப்பாங்கை இலங்கைய}ல் வாழும் ஏனைய இனங்கள் மத்தியில் ஏற்படுத்தும் பொருட்டு வெளிப்படையாகவே பாரபட்சம் காட்டத் தொடங்கியது அரசு. அத்துடன் நின்றுவிடாமல் உணவு, மருந்து, கல்வி வசதிகள், வேலைவாய்ப்புக்கள் உட்பட எல்லாத்தையுமே மட்டுப்படுத்தி தமிழினத்தை நலிவடைய வைக்கும் பிரயத்தனத்தில் இறங்கியது. இதன் மூலம் 'யாமார்க்கும் குடியல்லோம்' என்ற தமிழினத்தின் திடசிந்தையை உடைத்தெறிந்து விடலாம் என்று கனவு கண்டது. இவற்றிற்கெல்லாம் மேலாக, மயிர் நீர்ப்பின் உயிர்வாழா கவரிமான் அன்ன தமிழினத்தின் மறஞ்சார் மானத்திற்கும், துவண்டே போகினும் துளியெனும் கறைபடாதுயர் தாய்மைக்கும், திமிர்ந்த ஞானச் செருக்கிற்கும், காரணமாயிருப்பது தமிழர்கள் தொன்றுதொட்டு பேணிவரும் ஒழுக்கமும் கட்டுக்கோப்புமே என்பதை உணர்ந்துகொண்ட சிங்களப் பேரினவாதம் ஆற்றாமையுடன் தமி ழரால் உயிரினும் ஓம்பப்படும் ஒழுக்கத்தை சிதைத்துவிட சித்தம்கொண்டது. இதன் விளைவே வெளியில் தெரியாத வகையில் நன்கு திட்டமிடப்பட்ட கலாச்சார சீர்கேடுகளை சிறிது சிறிதாக புகுத்தி வெற்றிகண்டுவிடலாம் என்றே நம்பியது. இந்த நோக்குடன் சிங்கள இராணுவம் தமிழர் செறிந்து வாழும் பிரதேசங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மது, போதைப் பொருள், சினிமா, நீலத் திரைப்படம், தவறான பாலியல் தொடர்புகள் என்று தமிழ் கலாச்சாரத்தில் என்றுமே இல்லாதவை இலவசமாக அறிமுகப்படுத்தப் பட்டன. இவற்றிற்கெல்லாம் முடிவைத்தாற் போல கட்டவிழ்த்துவிடப்பட்டதுதான் பாலியல் வல்லுறவும் பாலியல் துன்புறுத்தல்களும். 83 காலப்பகுதியில் சிவில் உடையுடன் காடைத்தனத்தில் ஈடுபட்ட அதே இராணுவத்தினர் இன்று சீருடைகளுடனேயே தம் கைவரிசையை காட்டத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஆவன செய்து கொடுத்திருந்தது சிங்களப் பேரினவாத அரசு அதிலும் குறிப்பாக சந்திரிகா அம்மையாரின் அரசு. எத்துணை ஆசை காட்டியும் மோசம் போய்விடாத தமிழ்ப் பெண்களின் கற்பையும் மனிதத்தை யும் சூறையாடுவதற்கு சிறந்த ஆயுதம் பாலியல் வல்லுறவே என்று சிங்களப்படைகளுக்கு புகட்டப்பட்டது. நேர்மையான அரசின் அனு சரணையுடன், அதுவும் ஒரு பெண், அதிலும் இரு பிள்ளைகளின் தாய் ஒருவரின் ஆட்சியில் தான் இதன் வளர்ச்சி உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அன்று காடையர்கள் பாலி யல் வல்லுறவின் பின் தடயத்தை அழிப்பதற் காக வல்லுறவிற்குள்ளான பெண்ணை கொலைசெய்து ஆற்றில் போட்டுவிட்டு தலை மறைவானார்கள். இன்றோ, இராணுவச் சீரு டையுடன் இராணுவ காவலரணில், பொலிஸ் நிலையத்தில், நடு வீதியில் இப்படி வெட்டவெளிச்சமாக பாலியல் வல்லுறவை தனியாகவும், கூட்டாகவும் செய்துமுடித்துவிட்டு, அடுத்த நாளும் அதே காவலரணில் அடுத்த இரைக்காக காத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு சந்திரிகா அம்மையாரின் துணை தான் காரணமன்றோ. சட்டத்தின் பிடிக்கு பயப்படத் தேவையில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. ஏனெனில் இதுவரை பாலியல் வல்லுறவு செய்தது நீதிமன்றில் நிரூபிக்கப்பட்ட போதும் அதியுச்ச தண்டனையாக இடமாற்றம் மட்டுமே கிடைத்திருக்கிறது. பாலியல் வல்லுறவின் பின் கொலை, கொலை செய்யப்பட்டவரை தேடி வந்த குடும்பத்தினரையும் கூண்டோடு கொலை, இதற்கு கூட சிறீலங்காவில் தண்டனை இன்னும் வழங்கப்படவில்லையே. இவ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியாள் இராணுவ சிப்பாய் இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். சந்திரிகா அரசில் தனித்த பாலியல் வல்லுறவு, கூட்டு வல்லுறவு, அதன் பின் சித்திரவதை கொலை இவையெல்லாம் கிரிமினல் குற்றங்களல்ல. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தானே.
'சிறீலங்காவின் பாதுகாப்புப் படையினர் பாரதூரமான மனித உரிமை மீறல்களிலும் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் என்பவற்றிலும் கடந்த 17 வருடங்களா தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். 'சிறீலங்கா காவல்துறையினரும் தற்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது' என்று 2000 டிசெம்பர் 20ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான ஐ.நாவின் விசேட முகவர் வெளியிட்ட அறிக்கை, ஏனைய மனித உரிமை அமைப்புக்களின் குரல்கள், அண்மையில் கொழும்பில் நடைபெற்ற கடையடைப்புடன் கூடிய கண்டனப் பேரணி, வன்னி பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் விடுத்த கண்டனம் இவையெல்லாம் வெளிவந்தும் நடக்கப்போவது என்ன? சனாதிபதி சந்திரிகாவின் நேரடி நெறிப்படுத்தலில் சிதைக்கப்படும் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை எப்போது விடியப்போகிறது.
வன்னியில் ஒளிப்பு ஆவணமாக்கப்பட்ட ஆதாரங்களை இங்கே விரிவாக பார்க்கவேண்டிய தேவை நம் ஒவ வொருவருக்கும் உண்டு. தமிழ் மக்கள் மீதான பாலியல் வல்லுறவு இதுபற்றி ஒளிவீச்சு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
மனித வரலாற்றின் மனிதத் தன்மை தொலைந்த பக்கங்களில் சில இவை, மனித இனங்களில் ஒன்று மற்றயதை பழிவாங்க, அவமானப்படுத்த, தன் மேலாதிக்க வெறியை வெளிப்படுத்த, இனத்தை தலைகுனிய வைக்க, ஏன் இன அடையாளத்தையே அழிக்க பயன்படுத்தும் கொடூர ஆயுதம் இது. ஒன்று மற்றயதன் மீது மேற்கொள்ளும் உச்சக்கட்ட சுரண்டல் வடிவம் இது. மனித இனத்தால் மனித இனத்துக்கென்றே வடிவமைக்கப்பட்ட சிறப்புச் சொல்லாட்சி இது. பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை களுள் அதிகூடிய உடல் உள தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வன்முறை வடிவமும் இது தான்.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)