Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#84
முளையாகி விருட்சமாகி
பெருவனமாகி-சுடா மகள்(ஐனனி)


"முழுமையாகவே
காவற் கடமையிலிருந்து
சகலதையும்
எம் பெண் போராளிகளே
கவனிக்கும்
எமக்குh}ய தனித்துவமான
முகாமைப்பாh த்து
மகிழ்வடைந்தோம்"


இந்த நீண்ட விரிந்து படர்ந்திருக்கும் கடற்பரப்பு எங்களுக்கேயுரியது! எங்களுக்கேதான். ஓ! எவ வளவு பெரியதோர் வளம் எம் தாய்மண்ணிற்குரியது. எங்கள் கடற்பரப்பில் இங்குமங்கும் பரந்து சிதறி வேகமாக இயங்கிக்கொண்டிருப்பவர்கள் யார்? எங்கள் கடற்புலிகள் தான். ஆண்களும் பெண்களுமாய் ஓ எவ வளவு நிறைவாக இருக்கின்றது. தமிழீழ வரலாற்றில்தான் எத்தனை மாற்றங்கள், எத தனை சாதனைகள்? கற்பனை கரை தட்ட முடியாதுதான். அண்ணனின் வார்ப்பில் எல்லாமாகி நிற்கும் பெண்புலிகள் தரையில், கடலில், எங்கெங்கோ! எவ வளவு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவுமுள்ளது? இன்று கடலுடன் கடலாகி சங்கமமாகி நிற்கும் பெண்புலிகள்.

அன்றொருநாள், ஏறத்தாழ பதினைந்த வருடங்கள் இருக்கும். இலங்கை இந்தியக் கடற்பரப்பில், தேசம் பற்றிய கனவுகளுடன் தேசத்தில் புதியன படைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் சமூகத்தின் புதிய மாற்றங்களின் அத்திவாரங்களுடன் தாய் மண்ணை விட்டுச் சென்று இந்திய மண்ணில் வாழ்ந்த நாட்களின் இனிய நினைவுகளின் இரைமீட்டலுடன் மனம் கொள்ளா மகிழ்வுடன் பெருமிதத்துடன், வான்பரப்பை இரசித்தபடி படகொன்று தாய்த் தமிழீழம் நோக்கி நகர்ந்து, கொண்டிருக்கின்றது.
யார் இவர்கள்? எங்கிருந்து செல்கின்றார்கள்? இவர்கள் வேறுயாருமல்ல. அண்ணனின் வளர்ப்பில் முதன் முதலாகத் தம் இராணுவப் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருக்கும் பெண்கள் அணியின் ஒரு தொகுதி இவர்கள். பெண்களை இயக் கத்தில் இணைப்பது பொருத்தமா? அவர்களால் ஆயுதப் பயிற்சி எடுக்கமுடியுமா? தனியே முகாமமைத்து பெண்கள் தனியாகத் தங்க முடியுமா? ஆயுதம் து}க்கி சண்டை பிடிக்க முடியுமா? இவர்கள் நாட்டில் என்ன உடை அணிவது? ஜீன்ஸ், சேட் பெண்கள் அணியலாமா? பொருத்தமா? இவர்களை சமூகம் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறது?
அவநம்பிக்கைகள், சந்தேகங்கள். இப்படி எத்தனை வகையான கேள்விகள்? சமூகத்தில் மட்டுமல்ல. எம் ஆண்போராளிகளின் பலரின் மத்தியிலும்தான். ஆனால், யாவற்றிற்கும தெளிவான பதிலைத் தன்மனதிலே கொண்டிருந்ததால், எம் தேசியத் தலைவர் அவரின் இயல்பான தன்மையைப் போலவே தன் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க முனைந்தார். "எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆண்போராளிகளைப் போலவே பெண் போராளிகட்கும் பயிற்சியைக் கொடுங்கள்" பொன்னம்மானிடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டார். தலைவரின் உணர்வை சொல்லாமலே புரிந்து நடக்கும் தளபதி அவர். பலரின் கேள்விகள் சந்தேகங்கள் தவிடுபொடியாக அண்ணனின் நேரடிக் கவனிப்பில் வெற்றிகரமாக முடிந்தது பயிற்சி. ஏறத்தாள ஒரு வருடம் கனவுபோல் கழிந்தது.
வழமையில் ஆண் போராளிகளின் பயிற்சி முகாமொன்று முடிகிறதென்றால், சகல தளபதிகளும் குவிந்து விடுவார்கள் தமக்குரியவர்களைக் கூட்டிச் செல்வதற்கு. இந்நிலை எமது பயிற்சி முகாமிற்கு சற்று மாறித்தானிருந்தது. நாடு செல்வதற்கு மேலும் சில மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டிய தேவையேற்பட்டது. முதலாவது அணியாக தீபாவுடன் பத்துப்பேர் முதற்படகிலேறி மன்னாருக்குச் செல்கின்றனர். நாடு செல்லும் எமக்கென பயணப்பொதிகள் நிறைய, இரண்டு சோடி சீருடை, சப்பாத்து, தொப்பி, எமக்குரிய ஏனையவை, எமக்குரிய ஆயுதம், உபகரணம் யாவும், கிற்பாக்கில் வைக்கக்கூடியவை வைக்கப்பட்டும் ஏனைய ஆயுதங்கள் யாவும் தனியாகவும் இரண்டு மூன்று பட்டு பொலித்தீனால் கடல் நீர் புகாது பொதியிடப்படுகின்றது. அவற்றுடன் எம் அந்நேர உணர்வுகள்லு} அந்தக் காலங்கள்லு} முதலாவது அணி வழியனுப்பி வைக்கப்பட்டு அடுத்த சுற்றில் எமது அணி. எமக்குரிய பொதிகளுடன் கடற்கரையை அடைகின்றோம். எம் பொதிகளுடன் நாட்டிற்குக் கொண்டு செல்லப்படும் வேறு பொருட்களும் படகுள் ஏற்றப்படுகின்றது. இறுதியாகக் கரையருகில் இருந்த கோவிலில் கற்புூரம் ஏற்ற முயன்றபோது கற்புூரம் உடைந்து சிதறுகிறது. தமக்குள் பார்வையால் பரிமாறிக்கொண்ட அவர்கள் படகில் எம்மை ஏற்றிக்கொண்டனர். உயிர்காக்கும் கவசம் ஏற்கனவே எம்மிடம் தரப்பட்டிருந்தது. புறப்பட்ட படகு கடலில் மூன்று முறை சுற்றி வலம் வந்தபின் தாயகம் நோக்கிப் புறப்படுகின்றனது. எங்கள் பார்வையில் யாவும் வியப்புடன். து}ரத்தே தெரிந்த வெளிச்சங்கள் தாயக மண்ணை நெருங்கிவிட்டோம் என்ற உணர்வைத்தர மனம் நிலைகொள்ளாது படபடக்கின்றது. "என்ன வெளிச்சம் அண்ணை இது" எம்மவரின் கேள்விக்கு "மன்னார் தள்ளாடி முகாமின் வெளிச்சம் தங்கச்சி" அவனின் பதிலைத் தொடர்ந்து "கனது}ரம் இன்னமும் இருக்கா நாங்கள் போய்ச்சேரலு}.?" "இல்லை அண்மித்து விட்டோம். இன்னும் சற்றுநேரம் தாமதிக்க வேண்டியுள்ளது. அதற்குப்பின்தான் எம்மவர்கள் தொடர்பு கொள்வார்கள்" என்ற செய்தியைத் தந்தனர் எம் படகோட்டிகள். அவர்கள் வேறு யாருமல்ல எம் மாவீரர் கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா, லெப்கேணல் பாக்கி அவர்கள்தான்.

இயங்கிக்கொண்டிருந்த படகின் இயந்திரம் திடீரென்று நின்றது. என்ன? ஏன் என்பதை அறிய முயன்றவர்கள் இருவர் கடலில் இறங்கி ஏதோ எஞ்சினுடன் போராடிக்கொண்டிருந்தார்கள். அலைகளால படகு தள்ளாடியதால் மேலெழுந்த அலைகளால் உள்வந்த நீரை அள்ளி ஊத்தியபடி இருந்தோம். எஞ்சினுடன் போராடும் போராளிகளை கேள்வியுடன் நோக்கியபடி? ஒரு கட்டம், எதையோ சரிசெய்த உணர்வுடன் கப்டன் பழனி படகில் தாவி ஏறி எஞ்சினை இயக்க முற்பட்ட வேளை எழுந்த பெரிய அலையொன்றில் படகு கவிழவும் சரியாக இருந்தது. என்ன நடந்தது என நாம் புரிந்து கொள்ள முன் படகின் இயந்திரப் பகுதி நீருள் மெதுவாக அம}ழத்தொடங்கியது. கப்டன் பழனி, லெப் கேணல் பாக்கி ஆகியோர் படகில் இருந்தவற்றில் கையில் கிடைத்தவற்றை எமது கையில் திணித்தனர். அது பொலித்தீனிடப்பட்ட பொதிகளோ, பெற்றோல்கானோ உயிர்வாழும் கவசமோ அது மிதக்கக்கூடிய ஏதுவாக இருந்தது. யாவரின் கையிலும் ஏதோ ஒன்று.
இயந்திரப் பகுதியின் அண்மையில் இருந்த இரு போராளிகள் படகு கவ}ழ்ந்து நீருள் அமிழ்ந்தபோது தம்மையும் மீறி குப்பியைக் கடித்துவிட்டனர். ஆனால், உப்புநீர் அவர்களின் வாயை இயல்பாக கழுவிச் சென்றதால் எவருக்கும் எதுவும் நேரவில்லை.
உயிர்வாழும் கவசமொன்று என் ஒரு கையில் கிடைத்தது. அதனுள் ஒரு கையை நுழைத்தபடி அதனை இறுகப் பற்றியபடி நீரினுள் நான். அதனால் அதனைப் புூரண மாகப் போடமுடியவில்லை. பெற் றோல்க்கானை ஒரு கையால் பிடித்த கஸ்தூரி மறுகையால் என் கையைப் பற்றிக் கொண்டாள். நானும் அவளும் அப் பெற் றோல்க்கானைப் பற்றிக் கொண்டோம்.
என்ன நடந்தது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டபோது கடலில் மிதந்து கொண்டிருந்தோம். எம்மை மேவும் அலையில் முக்குளித்து மெதுவாகத் தலையை நிமிர்த்தி சுதாகரிக்குமுன் அடுத்தஅலை தலையினை மேவும். நீச்சல் அனுபவமற்ற வர்கள் நாங்கள். எப்படி எம்மை நீருள் சமநிலைப்படுத்த முடியும் என்பதனை அ, ஆ வென்னவே அறியாதவர்கள். இருள் கவிந்த நேரமானதால் நீரின் மேற்பரப்பில் அலையில் பரந்துவிடும் எம்மவர்கள் புள்ளி புள்ளியாகத் தெரியும். நீருள் இங்கும் அங்கும் நீந்திச் சென்று அவர்களின் பொதிகளைப் பற்றி இழுத்து வந்து ஓரிடம் சேர்ப்பதற்காக போராடிக்கொண்டிருந்தார் லெப். கேணல் பாக்கி. சற்று நீச்சல் தெரிந்த ஓரிருவரை அழைத்துக் கொண்டு கரையை நோக்கி கப்டன் பழனி சென்று விட்டார். கவிழ்ந்த படகின் அணியத்தைப் பிடித்தபடி கப்டன் ரகுவப்பா ஏற்கனவே ஏற்பட்டிருந்த நெஞ்சுக் காயத்தால் நீருள் அவரால் கொஞ்சநேரத்திற்குமேல் நிற்கமுடியாது. நாம் கடலினுள் கவிழ்ந்தது 7.20 அளவில். நேரம் நகர்கிறது. நீரின் அலைப்பினால் நாம் நன்கு களைத்தே விட்டோம். அலை மேவும் இடைவெளிக்குள் தலையை நிமிர்த்தும் நேரம் கஸ்து}ரி மெதுவாகக் கூறுகின்றாள் "இனி என்னால் தாங்கேலாதக்கா. நான் குப்பி கடிக்கப் போகிறேன்" வார்த்தை இதயத்தைக் கனக்க வைக்கின்றது. "அங்கே பார் கஸ்து}ரி கரைதெரிகிறது. வெளிச்சங்கள் தெளிவாகத் தெரிகிறது. கரையை அண்மித்துவிட்டோம். இன்னும் கொஞ்சநேரம் தான். கெதியிலை போய்ச் சேர்ந்திடுவோம்" அலையை மீறி தலை நிமிரும் பொழுதில் மெதுவாக உறுதியாக அவளைத் தேற்றுகின்றேன். "அர்த்தமில்லாமல் இதற்குள் சவமாகப் போய்விடக்கூடாது. எப்படியும் எம்மண்ணை அடையவேண்டும். ஏதோ எம்மண்ணிற்கும் செய்ய வேண்டும்" எம் உள்மனதின் ஆழமாக நெரு டல் எம்மைத் தாங்க வைக்கின்றது.
ஏறத்தாழ 11.20 மணியளவில் மீனவப் படகொன்று எம்மை நெருங்குகின்றது. கப்டன் பழனி படகொன்றினை எங்கிருந்தோ எடுத்து வந்திருந்தார். கையிலிருந்த பொதிகளுடன் கேமாக படகினுள் ஏற்றப்பட்டதால் அனைவரும் களைப்பால் படகினுள் சுருண்டு விட்டோம். படகு மீனவக் குடியிருப்பொன்றை நோக்கி நகர்ந்தது.
எம்மை அழைத்துச் செல்லவென ஆரம்பத்திலிருந்தே காத்துநின்ற விக்ரரண்ணரின் (லெப். கேணல் விக்ரர்) அணியினர் எமது தொடர்பு முதலில் அறுபட்டபோது அவர்கள் குழப்பத்திற்குள்ளாயிருந்தனர்.
ஒருவாறு கரையொன்றை அடைந்த எமக்கு தேநீர் உணவு போன்றன அம்மக்களால் அன்பாகத் தரப்பட்டது. ஈர உடையுடன் நின்ற எமக்கு மாற்றுடையாக சாரம், சேட் கிடைத்தது. குப்பி கடித்திருந்த இருவரின் உடலும் சற்று தடித்து விட்டது. அதற்குள் உரிய இடத்துடன் தொடர்பை ஏற்படுத்த உரிய போராளிகள் எமதிடத்தை அடைந்தனர்.
சாரம், சேட்டுடன், இழந்த ஆயுதப் பொதிகள் ஏனையவை மனதைக் கனக்க வைக்க துயரமான அனுபவத்துடன் ஒரு சில பொதிகளுடன் சென்ற எம்மை எதிர்பார்த்து நின்றோர் கண்டதும் மகிழ்வாலும் எமது கோலத்தைப் பார்த்து விளையாட்டான கேலியுடனும் எம்மை அன்புடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். முதற் சென்றிருந்த எமது முதலாவது மகளிர் அணியினர். அந்தக் களைப்புற்ற வேளையிலும் அவர்களின் உடையை ஆவலுடன் ரசித்துப் பார்த்தோம். சற்றுத் தொளதொளவென்றிருந்த டெனீம் ஜீன்சும் பெல்ற்கட்டாத அரைக்கையை கொண்ட கோடிட்ட இந்தியன் சேட்டும் அதன் மேல் கட்டியிருந்த கோல்சரும் மறக்க முடியவில்லை. முழுமையாகவே காவற்கடமையி லிருந்து சகலதையும் எம் பெண் போராளிகளே கவனிக்கும் எமக்குரிய தனித்துவமான முகாமைப்பார்த்து துயரங்களை மறந்து மகிழ்வடைந்தோம். இவர்களுக்குப் பொறுப்பாக விக்ரரண்ணாவின் பிரதிநிதியாக மேஜர் நரேன் நியமிக்கப்பட்டிருந்தார். அன்றைய காலங்களின் தொடர்ச்சி இன்று பல்லாண்டுகாலமாகி வளர்ந்து விருட்சமாகி பரந்து விட்டது. அன்று எம்போராளிகள் ஒருவரைக்கூட இழக்க விடாது காப்பாற்றிய அவர்களின் துடிப்பான வேகமான செயற்பாடு இன்னும் மனதில் பசுமையாகலு}. நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
எம் அண்ணனின் கனவுகள் கற்பனைகள் காலத்தில் உயிர்பெற்றே வருகின்றது. விரைவில் எம் தமிழீழ மக்கள் அதன் முழுமையான பலனை பெறத்தான் போகின்றனர். அந்த உயர்ந்தவரின் உணர்வுக்கு செயல்வடிவம் கொடுக்க உழைக்கவேண்டியதே இன்று எம்முன் நிற்கும் பணியாகிறது
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)