Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ தேசிய கீதத்தை உருவாக்க....
#12
<b>வாழிய ஈழத் தாய்நாடு!</b>

வாழிய ஈழத் தாய்நாடு!
வான்புகழ் செந்தமிழ்த் திருநாடு!
வையகம் எங்கெணும் வாழ்தமிழ் உறவுகள்
வாழ்த்திட மலர்ந்த பெருநாடு!

தன்னுயிர் தன்னைப் பரிசாகத்
தந்தவர் கண்டநல் அரசாக
தன்னிக ரற்றவர் முன்னிலை நின்றொரு
சாட்சியம் நல்கிய தனிநாடு!

உத்தம மறவோர் களமாடி
உயிரைக் கொடுத்து விதையாகி
முத்தமிழ் காத்தவர் நித்தமும் பேணிய
முத்து நிகர்த்த தமிழ்நாடு!

செங்கோ லோச்சிய முன்னவரும்
செம்மொழி பழகிய மன்னவரும்
மங்காப் புகழொடு மீண்டும் வலம்வரும்
மாண்பு செறிந்த தமிழ்நாடு!

ஆண்டுகள் தோறும் களம்அளந்து
அறிவொடு வேங்கைகள் தடம்பதித்து
வேண்டிய (இ)லட்சியம் மெய்ப்படக் கண்டவர்
வெற்றி முழங்கிடும் வளநாடு!

உடைமையை இழந்த வெந்துயரில்
உரிமையின் வேள்வித் தீச்சுடரில்
புடமிடு பொன்னெனப் புத்தொளி வீசிடப்
புகழொடு நடமிடும் பொன்னாடு!

எங்களை ஈன்றநல் அன்னையரும்
எம்மவர் தம்பியர் தங்கையரும்
வெங்களம் மண்டிய சிங்களம் நீங்கிட
விடுதலை துய்த்திடும் நன்னாடு!

ஈழம் வெற்றியின் அடையாளம்!
இனிய தமிழ்க்குலம் அதையாளும்!
நாளும் அதன்புகழ் நனிசிறந் தோங்கிட
நல்லவர் உழைத்திடும் நன்னாடு!

கனவின் நனவாய்த் தமிழீழம்:
காலம் வழங்கிய பெருஞாலம்!
கனிந்தது சுதந்திரம்: இனிஇது நிரந்தரம்!
காணுமின், இன்னொரு தென்னாடு!

வாழிய ஈழத் தாய்நாடு!
வாழ்க தமிழ்த்தாய் வழிபாடு!
வாழிய வாழிய தாயகத் தாகம்
வளர்த்தவர் போற்றிய எழில்நாடு!!...

தொ. சூசைமிக்கேல் (tsmina2000@yahoo.com)
Reply


Messages In This Thread
[No subject] - by வினித் - 10-27-2005, 04:16 PM
[No subject] - by Netfriend - 10-27-2005, 04:21 PM
[No subject] - by cannon - 10-27-2005, 05:26 PM
[No subject] - by KULAKADDAN - 10-28-2005, 12:54 PM
[No subject] - by MEERA - 10-29-2005, 02:21 PM
[No subject] - by Mathuran - 10-29-2005, 08:51 PM
[No subject] - by வினித் - 10-30-2005, 04:04 PM
[No subject] - by Rasikai - 10-31-2005, 08:15 PM
[No subject] - by iruvizhi - 10-31-2005, 10:36 PM
[No subject] - by hari - 11-17-2005, 06:07 AM
[No subject] - by வியாசன் - 11-17-2005, 09:16 AM
[No subject] - by Rasikai - 11-17-2005, 06:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)