Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாராவது உதவி சொய்யுங்கோ SyncML பற்றிய விளக்க தெரிந்தால்
#2
வணக்கம் சோபனா...
நீங்கள் Synchronization Markup Language பற்றித்தானே கேட்கிறீர்கள். சத்தியமாக எனக்கு அதில் அனுபவம் கிடையாது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பயன்படுத்தியிருக்கிறேன்.

இது தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்து சமநிலைப்படுத்துவதற்கானது. அதாவது இரு வேறு வன்பொருட்களில் (hardwares : உதாரணமாக iPad , Computer) உள்ள விபரங்களை ஒன்றோடு ஒன்று சரிபார்த்து இரண்டு தரவுகளையும் சமநிலைப்படுத்துவது.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமென்றால்:

உங்கள் iPad இல் உங்கள் நண்பர்களின், உறவினர்களின் முகவரிகளை சேகரித்து வைத்திருக்கிறீர்கள். அதேபோல உங்கள் கணினியிலும் சில நண்பர்கள் உறவினர்களின் சில முகவரிகளை ஒரு மென்பொருளின் மூலம் சேகரித்து வைத்துள்ளீர்கள். iPad இல் இளைஞனின் முகவரியை மட்டும் சேகரித்து வைக்க மறந்துவிட்டீர்கள் (என்ன கோவமோ தெரியாது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ). ஆனால் உங்கள் கணினியில் இளைஞனின் முகவரி சேகரிக்கப்பட்டு உள்ளது. இப்போது உங்கள் iPad ஐ Computer உடன் இணைக்கிறீர்கள். அப்போது இந்த (புத்திசாலி) SyncML என்ன செய்யுமென்றால் கணினியின் தரவுகளையும், iPadஇன் தரவுகளையும் ஒப்பிட்டுப்பார்க்கும், பார்த்துவிட்டு "அடடா சோபனா இளைஞனின் முகவரியை iPad இல் சேமித்து வைக்கவில்லையே" என்றுவிட்டு இளைஞனின் முகவரியை iPad இற்குள் இணைத்துவிடும்.

இது தான் SyncML இன் வேலை.

சோபனா உங்கள் கேள்வி என்ன? SyncML என்றால் என்பதா? அல்லது அதன்மூலம் ஏதாவது செய்யப் போகிறீர்களா? குறிப்பாக எந்தவிடயத்தில் விளக்கம் தேவையென்று எழுதினால் தெரிந்தவர்களிடம் கேட்டாவது சொல்லலாம்.


Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 11-16-2005, 03:45 PM
[No subject] - by shobana - 11-17-2005, 09:07 AM
[No subject] - by இளைஞன் - 11-17-2005, 05:47 PM
[No subject] - by shobana - 11-17-2005, 07:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)