Yarl Forum
யாராவது உதவி சொய்யுங்கோ SyncML பற்றிய விளக்க தெரிந்தால் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: யாராவது உதவி சொய்யுங்கோ SyncML பற்றிய விளக்க தெரிந்தால் (/showthread.php?tid=2432)



யாராவது உதவி சொய்யுங்கோ SyncML பற்றிய விளக்க தெரிந்தால் - shobana - 11-16-2005

உங்களில் யாருக்காவது SyncML பற்றிய விளக்கம் தெரிந்தால் எனக்கு சொல்லித்தாங்கோ ஏன் என்றால் அதில் ஒரு விடயம் செய்யவேண்டும்.

நன்றி


- இளைஞன் - 11-16-2005

வணக்கம் சோபனா...
நீங்கள் Synchronization Markup Language பற்றித்தானே கேட்கிறீர்கள். சத்தியமாக எனக்கு அதில் அனுபவம் கிடையாது. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அதுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பயன்படுத்தியிருக்கிறேன்.

இது தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்து சமநிலைப்படுத்துவதற்கானது. அதாவது இரு வேறு வன்பொருட்களில் (hardwares : உதாரணமாக iPad , Computer) உள்ள விபரங்களை ஒன்றோடு ஒன்று சரிபார்த்து இரண்டு தரவுகளையும் சமநிலைப்படுத்துவது.

இன்னும் விளக்கமாக சொல்லவேண்டுமென்றால்:

உங்கள் iPad இல் உங்கள் நண்பர்களின், உறவினர்களின் முகவரிகளை சேகரித்து வைத்திருக்கிறீர்கள். அதேபோல உங்கள் கணினியிலும் சில நண்பர்கள் உறவினர்களின் சில முகவரிகளை ஒரு மென்பொருளின் மூலம் சேகரித்து வைத்துள்ளீர்கள். iPad இல் இளைஞனின் முகவரியை மட்டும் சேகரித்து வைக்க மறந்துவிட்டீர்கள் (என்ன கோவமோ தெரியாது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ). ஆனால் உங்கள் கணினியில் இளைஞனின் முகவரி சேகரிக்கப்பட்டு உள்ளது. இப்போது உங்கள் iPad ஐ Computer உடன் இணைக்கிறீர்கள். அப்போது இந்த (புத்திசாலி) SyncML என்ன செய்யுமென்றால் கணினியின் தரவுகளையும், iPadஇன் தரவுகளையும் ஒப்பிட்டுப்பார்க்கும், பார்த்துவிட்டு "அடடா சோபனா இளைஞனின் முகவரியை iPad இல் சேமித்து வைக்கவில்லையே" என்றுவிட்டு இளைஞனின் முகவரியை iPad இற்குள் இணைத்துவிடும்.

இது தான் SyncML இன் வேலை.

சோபனா உங்கள் கேள்வி என்ன? SyncML என்றால் என்பதா? அல்லது அதன்மூலம் ஏதாவது செய்யப் போகிறீர்களா? குறிப்பாக எந்தவிடயத்தில் விளக்கம் தேவையென்று எழுதினால் தெரிந்தவர்களிடம் கேட்டாவது சொல்லலாம்.


- shobana - 11-17-2005

நன்றி உங்கள் விளக்கத்திற்கு இளைஞன்...
எனக்கு பயன்படுத்தி என்ன செய்யலாம் என்பது தெரியும் நீங்கள் கூறியது போல் தான் நான் வேலை செய்தும் நிறுவனம் புதிதாக ஒரு மென் பொருள் செய்யச்சொல்லி என்னிடம் கேட்டார்கள்
ஆம் அம்மென்பொருளைப்பறன்படுத்தி எந்த ஒரு கம்பனியும் தங்களிடம் உள்ள தரவுகளை போன்ற வற்றில் பயன்படுத்துவதற்கும் தரவுகளை பங்கீடு செய்யவும் வேண்டும் அதற்குத்தான் நான் பயன்படுத்தலாம் என இருக்கிறேன் ஆனால் பற்றித்தெரிந்தவர்கள் சொல்லுங்கோ என்று கேட்டேன்
நன்றி
நட்புடன்
சோபனா....


- இளைஞன் - 11-17-2005

குறிப்பாக என்ன தேவைக்கு உங்கள் நிறுவனம் SyncML ஐ பயன்படுத்த உள்ளது?

இந்த இணையத்தளத்தை பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருகாவிட்டால் சிலவேளை பயனுள்ளதாக இருக்கும்.

http://www.openmobilealliance.org


- shobana - 11-17-2005

இளைஞன் Wrote:குறிப்பாக என்ன தேவைக்கு உங்கள் நிறுவனம் SyncML ஐ பயன்படுத்த உள்ளது?

இந்த இணையத்தளத்தை பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருகாவிட்டால் சிலவேளை பயனுள்ளதாக இருக்கும்.
http://www.openmobilealliance.org



நீங்கள் குறிப்பிட்டு இருந்த இணையத்தளம் பார்த்தோன் மேலோட்டமாகத்தான் அதனால் அதில் எனக்கு எதுவும் விளங்கவில்லை