06-22-2003, 09:24 AM
ஒரு கட்டத்தில் கண்ணிவெடி அகற்றப்படடாத பகுதிக@டே முட்கம் பிச் சுருள்களைப் பாய்ந்து கடந்து ஓட முற்பட, புதைக்கப்பட்டிருந்த எமது கண்ண}வெடிகளும் செப்பமாக அமைக் கப்பட்டிருந்த கண்ணிகளும் சூழ்ச்சிப் பொறிகளும் தம் பணியைச் செவ வனே செய்யத் தொடங்கத்தான் மூளை அட அட அட! இவற்றை இப்படி இப்படிவை என்று கண்ண} வெடிகள் விடயத்தில் தலைவர் தனிக்கவனம் எடுத்து, தளபதிகளிடம் நேரடியாகச் சொல்லி விளங்கப்படுத்தி எங்களை வேலை செய்வித்ததெல்லாம்
இதற்காகத்தானா!
பாய்ந்து பாய்ந்து நாம் சுட்டதை விடவும், ஆற அமர யோசித்து அவர் போட்ட திட்டம் எதிரிக்கு அதிக சேதத்தைக் கொடுத்த ஆச்சரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
உண்மையிலேயே அது ஒரு அருமையான சண்டைதான். எங்களைவிட ஆண்களின் உயரம் அதிகம்தானே. எங்களுக்கு ஏற்ற ஆழத்தில் நாங்கள் வெட்டியிருந்த நகர்வகழியில் எதிரிகளின் தோளைக்கூட மறைக்க இயலாமல் போயிற்று. காப்பரண் வாயிலில் தன்னை நிலைப்படுத்திய பீ. கே. எல். எம். ஜீ இடம் வலமாக நாலைந்து தடவைகள் சுழன்று சீறிவிட்டு உள் நுழைய, குண்டுத்துவாரங்களினு}டே நாங்கள் தொடங்கினோம். எதிர்ப்பும் கடுமையாகத்தான் இருந்தது. சண்டை கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கு மேலாக நடந்தது. ஒரு கட்டத்தின் பின் எதிர்ச்சூடு வரவில்லை. அதற்காக முழு இராணுவமுமே இறந்துவிட்டதாக நம்ப நாம் தயாராகவில்லை.
காயமடைந்தவர்களை முழுதாயிருப்பவர்கள் இழுத்தச் செல்ல முயல்வார்கள். முதுகில் சுமந்தபடியே நீண்ட து}ரங்களுக்கு ஊர்ந்து செல்லக் கூடிய பயிற்சிகளைக்கூட அவர்கள் பெற்றிருக்கலாம். பெரும்பாலும், காயமடைந்த, இறந்த வீரர்களை நகர்த்துவதற்கே விரும்புவார்கள். எம்மை சும்மா விட்டுச் செல்வதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
எல்லோருடைய காதுகளுமே எங்களை விட்டுப் புறப்பட்டு நகர்வகழிக்குள் இறங்கிவிட்டிருந்தன. ஒவ வொரு சிறு ஒலியையும் உள்வாங்கி மூளைக்கு அனுப்பி, பரிசோதித்துக் கொண்டன. ஒரு சத்தம் சற்று வேறுபாடாக இருந்தது. சர்லு} க்.. சர்லு}. க லு} சர்லு} க்லு} ஏதோ இழுபடும் ஒலி. அல்பா லீமாவின் 40 எம். எம். ஒருதரம் இயங்கியது. எங்கும் அமைதி. சர்லு} க்.. ஒலியைக் காணவில்லை. இன்னுமொரு ஐந்து பத்து நிமிட நேரம் கழிந்த பின் மீண்டும் சர்.. க்லு} சர்லு} க்லு} சனியன் இன்னும் சாகவில்லையோ? ஒரு கையெறி குண்டை வீசினோம். அமைதி. இடைவெளிவிட்டு, பின்னரும் அதே சர்லு}. க்லு} சர்லு}. க்லு} யாரடா இவன் நாசமாய்ப்போகின்றவன்? கோபம் மேலிட்டது. ஒருவனோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ உயிருடன் இருப்பது தெரியவில்லை. சரியாகத் தெரியாமல் குண்டுகளைச் செலவழிக்கவும் யோசனையாக இருந்தது. கவனிக்காது போலிருந்து நடப்பதைக் கவனிக்க முடிவுவெடுத்தோம். ஆனால், பின்னர் அதற்குள்ளிருந்து ஓசைகள் எதுவும் எழவில்லை. அல்லது எழுந்த ஓசையை களைப்பு மேலிட்டால் காதுகள் உள்வாங்கவில்லை. ஏதோ ஒன்று. வானில் அழகாக நட்சத்திரங்கள் மின்னின. அங கொன்றும் இங்கொன்றுமாய் ரவைகள் சீறின. எறிகணைகளும் இடையிடையே பறந்தன. விழிப்பாகவே இருக்கின்றோம் என்று எதிரியும் நாங்களும் பேசிக்கொள்ளும் சங்கேத மொழி இது. நேரம் மூன்றைக் கடந்து விட்டது. மனமும் உடலும் சோர்வை ஒரு பக்கம் தள்ளி வைத்துவிட்டு சண்டைக்குத் தயாரானது. விடிவதற்குள் இருபத்தேழைவிட்டு வெளியேறி விடவேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. சில நேரம் நிலம் தெளிய முன்னரே இருபத்தேழு ராங் ஒன்றால் ஏறி மிதிக்கப்படலாம். இருபத்தாறை நோக்கிப் போவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இறந்த மனிதர்களை ஏறிமிதித்தவாறே போகவேண்டியிருக்கும் என்பதுதான். சில வேளை 'இறந்தவர்'களில் சிலர் எழுந்து நின்று சுடலாம். அப்படி நடந்தால் பரவாயில்லையே சண்டைபிடித்துக் கொண்டே நகரலாம். உயிரோடு உள்ளபோது அவர்கள் மேல் எழும் கோபம் இறந்தபின் ஏன் எழுவதில்லை என்பது புரியவில்லை.
3.30 ஆகிவிட்டது. இனியும் தாமதிப்பதில் வேலையில்லை. எல்லோரும் நகர்வகழிக்குள் இறங்கினோம். முன்னே போனவர்கள் கால் வைத்த இடங்களில் பின்னே போனவர்கள் கால்வைத்து நடந்தோம். எதிர்ப்பு எழவில்லை. காயத்துடன் இறந்துபோக முயற்சித்தவன் அல்லது முயற்சித்தவர்கள் சிலவேளை அதிகளவு இரத்தப்போக்கால் இறந்திருக்கலாம். விழுந்தவர்களைக் கடந்த பின்னும் முதுகு கூசியது. எத்தனை பேர் கடந்து போனோம் என எண்ணிவிட்டு அதன்பின் எழும்பி முதுகில் சுடுவார்களோ? திரும்பிப் பார்த்தேன்.
"என்னக்கா?"
என்றாள் பின்னால் வந்தவள்.
"ஏதேனும் அசைவு?"
"ஒரு பிரச்சினையுமில்லை"
சிந்தனைகள் பல மாதிரி ஓடிய, இருபத்திரண்டுக்கு எதிரி மறுபடி வந்துவிட்டானோ? தெரியவில்லை. இருபத்தேழுக்கு காலையில் என்ன நடக்கும்? தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் எங்களுடைய ரவைகள் குறைந்துவிட்டன என்பதும், நகர்வகழியில் விழுந்து கிடப்பவர்களிடம் ரவைகள் இருக்கின்றன என்பதும்தான். உடனேயே ரவைகள் நிரப்பிக் கொண்டோம். அல்பா லீமா தன் காற்சட்டைப் பைக்குள்ளும் 40 எம். எம். எறிகணைகளைத் திணித்துக் கொண்டாள்.
இருபத்தாறுக்கு வந்ததும் சேரா வண்ணைக் கூப்பிட்டேன். நிலைமையைச் சொன்னேன். முப்பத்தாறைப் பிடித்தபின் முப்பதிரண்டை நெருங்கும் முயற்சியில் தன்னைத் தவிர எல்லாருமே காயமும் வீரச்சாவும் என்றும், நான் இப்போது வேறு சிலருடன் முப்பத்தைந்தில் நிற்பதாகவும், விடிந்ததும் நிலைமையைப் பார்த்து முப்பத்திரண்டை நெருங்கப் போவதாகவும் குறிப்பிட்டாள். ராங்கோ மைக்கைக் கூப்பிட்டேன். இரவிரவாக இருபத்திரண்டுப்பாதையால் நடமாட்டம் இருந்ததாகவும், தாங்கள் சுட்டதாகவும், இப்போது சத்தம் ஒன்றும் இல்லை என்றும் அவள் குறிப்பிட்டாள்.
"ஆனாலும் கவனம். பதினெட்டை விட்டிடாதை. இருபத்திரெண்டையும் இடையிடையில பார்த்துக் கொள்"
என்றேன்.
இரண்டாம் நாள் சண்டை முதல் நாளைவிடக் கடுமையானதும் சிக்கலானதுமாக இருந்தது. இருபத்தேழை எதிரியின் ஆர். பீ. ஜீ கள் வந்து முத்தமிட்டதோடு எமது பக்கச் சண்டை ஆரம்பமானது. வண் செவிணில் ஆட்கள் எங்களுடைய வேண்டுகோளுக்கிணங்க இருபத்தொன்பதில் கும் கும் மெனக் குதித்து வெடித்தார்கள். அடி அடியென்று அடித்து இருபத்தொன்பதைப் பிடித்தோம். சேரா வண்ணைத் தொடர்பெடுத்து நிலைமையைச் சொன்னபோது, தான் ஏற்கனவே முப்பத்திரண்டைப் பிடித்துவிட்டு அதில் நிற்பதாகக் குறிப்பிட்டாள்.
ராங்கோ மைக்கைக் கூப்பிட்டோம். பதினாறுக்கும் இருபத்தாறுக்கும் இடையில் மாறி மாறி நடந்துகொண்டிருந்த அவளின் அணி இருபத்தாறில் இருந்து பதினாறை நோக்கி வந்து கொண்டிருந்தபோது பதினெட்டில் இராணுவம் நின்றிருக்கிறது. அவர்களை இருமுனைகளால் இவர்கள் தாக்கிக் கொண்டிருந்தபோது, இடையில் நின்ற அணிக்கு இருபத்திரண்டுப் பக்கத்தால் முதுகு அடி கிடைத்திருக்கின்றது. எனவே, ராங்கோ மைக் நேரடியாக இறங்கி பதினெட்டை அடித்துப் பிடிக்க, இடையில் நின்றவர்கள் இருபத்திரண்டை அடித்துப் பிடித்திருக்கின்றார்கள். தன்னைச் சேர்த்து மூவர் மட்டுமே முழுதாக எஞ்சியிருப்பதாகவும், மூவரும் இருபத்திரண்டில் நிற்பதாகவும், இயலுமான காயக்காரர்கள் சிறப்பு எல்லைப்படை வீரர்களைப் போட்டு பதினெட்டைப் பாதுகாப்பதாகவும், வித்துடல்களைப் பதினாறில் வைத்திருப்பதாகவும் ராங்கோ மைக் குறிப்பிட்டாள்.
எல்லோருடைய நிலைமைகளையும் தெரிந்து கொண்ட சேரா வண் அடுத்த கட்டளைகளை வழங்கினாள்.
"சிக்கலில்லை. எல்லாத்தையும் சமாளிக்கலாம். இப்ப உங்கடை பாதையால சிறப்புக்குரிய ஆக்கள் வருகினம். ஆக்களைப்போட்டு எல்லாப் பாதையையும் மூடுங்கோ. இனி அவன் உள்ளுக்கை வரக்கூடாது. வந்தவன் திரும்பிப் போகவும் கூடாது. விளங்குதோ?"
"விளங்குது சேரா வண்"
"ராங்கோ மைக் உனக்கு விளங்குதோ"
"விளங்கீட்டுது சேரா வண்"
"சரி உடனே ஒழுங்குபடுத்துங்கோ ஆக்களை எனக்கும் அனுப்புங்கோ. வேறையில்லை."
சிறப்பு எல்லைப்படை வீரர்கள் ராங்கோ மைக்கை வந்து சந்திக்கவே இருண்டுவிட்டது. இரவிரவாக அவர்களை பதினெட்டு, இருபத்திரண்டு, இருபத்தொன்பது, முப்பத்திரண்டு, முப்பத்தாறு, நாற்பத்தொன்று என எதிரி பாவித்த அனைத்துப் பாதைகளிலும் நிறுத்தினோம். இருபத்திரண்டில் ராங்கோ மைக், முப்பத்திரண்டில் நான், நாற்பத்தியொன்றில் சேரா வண்ணும் ஏனைய நிலைகளில் எங்களில் ஏழு எஞ்சிய ஒவ வொருவருமாக சிறப்பு எல்லைப்படை வீரர்களுக்குப் பொறுப்பாக நின்று கொண்டோம். எம்முடன் வந்தவர்களில் பீ. கே. எல். எம். ஜீ இயக்குனரும் ஒரு hP -56 -11 காரியுமே மிச்சம். அல்பா லீமாவின் 40 எம். எம். என்னிடமிருந்தது.
இனி விடிந்த பின்னர்தான் சண்டை. காவற்கடமையை என்னிடம் தராமல் தமக்குள்ளேயே பகிர்ந்து கொண்டார்கள் அந்த வீரர்கள்.
"நான் கொஞ்சநேரம் பார்க்கிறன்"
என்று கேட்டும் பார்த்தேன். பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். வீட்டில் தம் தங்கைகளை இரவில் தனியே விடாத, து}ரப் பயணங்களின்போது தம் மிதி வண்டிகளில் ஏற்றிச் செல்கின்ற அண்ணாக்களாகவும், தமது உழைப்பில் ஒரு பகுதியை அக்காமாரின் சீதனத்துக்காக சேர்க்கும் தம்பிமாருமாக இருந்து கொண்டே, தேவைப்படும் நேரங்களில் சண்டைக்கு வந்து போகும் இவர்களுக்கு என்னைப் பாh க்கப் பாவமாகத்தான் இருந்திருக்கும்.
ஐந்து ஆண்களிடையே தனித்து ஒரு பெண்ணாக நின்ற எனக்கு அவர்கள் இல்லாத பக்குவமெல்லாம் பார்த்தார்கள். கையோடு கொண்டுவந்த பணிசையும் தண்ணீர்க்கானையும் முதலிலேயே என்னிடம் தந்துவிட்டார்கள். சாப்பிட்டு முடியும்வரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு, இன்னுமொரு பணிசையும் தந்து, "வைச்சிருந்து பசிக்கிற நேரம் சாப்பிடுங்கோ" என்றார்கள். இரண்டு ஓலைகளை இழுத்துவந்து போட்டுவிட்டு "படுங்கோ, விடிய எழுப்புறம்" என்றார்கள். எனக்குச் சிரிப்பும் வந்துவிட்டது. என் தலைப் பக்கத்தில் ஒருவரும் கால் பக்கத்தில் ஒருவருமாக கண்ண}யமான தூரத்தில் நின்று காவல் செய்த அவர்கள், இருட்டில் என் சிரிப்பைக் கவனித்திருக்கமாட்டார்கள். ஏதோ என்னுடைய உடல், பொருள், ஆவி எல்லாமே தமது பொறுப்பில் இருப்பதுபோல மிகவும் அவதானமாக நடந்துகொண்டார்கள்.
ஓலையில் சாய்ந்த எனக்கு வானத்து நட்சத்திரங்கள் தெரிந்தன. மார்பில் 40 எம். எம்.மும், hP -56 -11உம் சாய்ந்திருந்தன. இருபத்தொன்பதைப் பிடிப்பதற்கான கடும் சண்டை நடந்து கொண்டிருந்த நேரம். எதிரியின் பீ. கே. எல். எம். ஜீ. அடி அல்பா லீமாவின் இடது தோளிலிருந்து வயிற்றில் வலது புறம்வரை வரியாக சல்லடை போட, தள்ளாடியபடியே என் பக்கம் திரும்பியவள் 40 எம். எம். ஐ என்னிடம் நீட்டியபடியே, ஏதோ சொல்ல முயன்றபடி குப்புற என்மேல் சரிந்தாள். அவள் விழுந்த வேகத்திலும் நானும் விழுந்தேன். "விடாதை அடி" என்று விழுந்தபடியே மற்றவர்களிடம் கத்திவிட்டு அவளை நான் புரட்டியபோது உயிர் பிரிந்துவிட்டிருந்தது.
என்ன சொல்ல நினைத்திருப்பாள், 'அல்பா லீமா' என்று குறியீட்டுப் பெயரால் அழைக்கப்படும் எங்கள் அன்புக்குரிய அகல்யா, இப்போது என்னுடன் கதையேன் அகல்யா. அப்போது எனக்கும் நேரம் இருக்கவில்லை. இப்போது பேசேன்.
அகல்யாவின் தெத்திப்பல் சிரிப்பு கண்களுக்குள் வந்து போனது. 50 கலிபரைப் பார்ப்பதற்காக நான் புறப்பட்டபோது அகல்யா எழும்பியிருக்கவில்லை. வயிற்றுக்குத்து என்று முனகினாள். வழமையாகவே இவள் வயிற்றுக்குத்து என்றால் சுருண்டு விடுவாள். நாங்களும் வேலை சொல்லமாட்டோம். வீட்டிலென்றால் எங்களை ஒரு வேலையுமே செய்ய விடாமல் அம்மாவே எல்லாம் செய்து, சின்ன மீன் வாங்கி அரைத்த கறி வைத்து, அது இதுவென்றெல்லாம், பக்குவம் பார்ப்பார். இங்கே அதற்கேது நேரம்? ஆளை ஆறுதலாக விட்டுவிடுவோம்.
எழுந்து நடமாடமாட்டாமல் கால் சோர்ந்து கிடந்தவள் எப்படித்தான் என்னோடு ஓடி ஓடிச் சண்டை பிடித்தாளோ. ஒருதரம் கூட முகம் சினக்காமல், நான் சொல்வதையெல்லாம் செய்துலு}. தனக்கு அடிப்படையாகத் தேவையான பொருட்களை வரும்போது கையோடு கொண்டுவந்தாளோ? அவசரத்தில் மறந்தாளோ? இரவிரவாகச் சண்டை நடந்ததே. ஓய்வு வேண்டும் என்று அவளும் கேட்கவில்லை. சண்டை அழுத்தத்தில் எனக்கும் நினைவு வரவில்லை. என்ன செய்தாய் அகல்யா? இப்போது என்னோடு கதையேன்.
புயல் மையங்கொண்ட கடலாய் மனம் பேரலைகளை வீசிக் கொந்தளித்தது.
இருபத்தொன்பதுக்குப் பின்னுள் வடலிக்கருகில் ஓலைகளால் மூடப்பட்டபடி அகல்யா, தொடைக் காயத்தால் குருதி குபுகுபுவென ஓட, பீ. கே. எல். எம். ஜீ.யை உடனேயே உதவியாளரிடம் கொடுத்துவிட்டு தானே தன் காயத்துக்குக் கட்டுப்போட்டு நகர்வகழிக்குள் சாய்ந்தபடியே கண்மூடிப்போன பீ. கே. எல். எம். ஜீ. சுடுவர் ஆதிiர் எனக்கு விழவிருந்த சூட்டை குறுக்கே பாய்ந்து தன் தலையில் வாங்கிக் கொண்ட பீ. கே. எல். எம். ஜீ இயக்குனர் அலையிசை எல்லோருமே இருக்கிறார்கள்.
"தங்கச்சி" என்று யாரோ கூப்பிட்டது போல் இருக்க, திடுக்கிட்டு விழித்து நேரத்தைப் பார்த்தேன். 3.40 எப்போது உறங்கினேன் என்பதே தெரியவில்லை. எழும்பி அப்படியே ஓலையில் இருந்தேன்.
"பணிசைச் சாப்பிடுங்கோ தங்கச்சி"
என்றவாறு தண்ணீர்க் கானைத் தந்தார்கள். இரண்டு நாட்களாகப் பல் துலக்காததால் வாய்க்கு பணிசின் சுவையே தெரியவில்லை.
அன்றைய பகல் சண்டையின்போது எனக்கு ஒரு வேலையுமே இருக்கவில்லை. எங்களுடைய எல்லா மோட்டார்களுமே தமது அதியுச்ச திறமையை வெளிப்படுத்த உள் நின்ற இராணுவம் ஓடத் தொடங்கியது. ஓடிய இராணுவத்தைத் தடுத்துச் சுட்டபடி, அவர்கள் உள் நுழைந்த பாதைகளில் நாம். முன்னே வந்தவர்கள் சூடுபட்டு விழுந்த விடயம் அறியாமல் பின்னே வருபவர்களும் அதே வழிகளிலேயே வந்து சூடுபட்டனர். தொகையாக ஓடி வரும் இராணுவம், சூடு விழத் தொடங்க பிரிந்து வலம், இடமாக ஓட முயற்சிக்கும்போது அடுத்தடுத்த நிலைகளில் நின்றவர்களுக்கு "ஆள் வந்து உங்களைச் சந்திக்கும்" என்று வோக்கியில் அறிவித்தது மட்டுமே நான் செய்த வேலை. தமது பாதைகள் முழுதும் தடைப்பட்ட நிலையில் திரும்பி உட்பக்கம் ஓடுவதும், மறுபடி பாதையை நோக்கி வருவதும், அடி விழ ஓடுவதுமாக இருந்த இராணுவம், ஒரு கட்டத்தில் கண்ணிவெடி அகற்றப்படடாத பகுதிக@டே முட்கம்பிச் சுருள்களைப் பாய்ந்து கடந்து ஓட முற்பட, புதைக்கப்பட்டிருந்த எமது கண்ண}வெடிகளும் செப்பமாக அமைக்கப்பட்டிருந்த கண்ணிகளும் சூழ்ச்சிப் பொறிகளும் தம் பணியைச் செவ வனே செய்யத் தொடங்கதான் மூளை அட அட அட! இவற்றை இப்படி இப்படி வை என்று கண்ண} வெடிகள் விடயத்தில் தலைவர் தனிக்கவனம் எடுத்து, தளபதிகளிடம் நேரடியாகச் சொல்லி விளங்கப்படுத்தி எங்களை வேலை செய்வித்ததெல்லாம் இதற்காகத்தானா!
பாய்ந்து பாய்ந்து நாம் சுட்டதையும் விடவும், ஆற அமர யோசித்து அவர் போட்ட திட்டம் எதிரிக்கு அதிக சேதத்தைக் கொடுத்த ஆச்சரியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சேரா வண்ணும் நானும் முன்னணிப் பகுதியைப் பார்த்தவாறு நடந்துகொண்டிருந்தோம். காவலரண்கள் சரிந்து அல்லது குலைந்து சேதமடைந்திருந்தன. திருத்த வேண்டும். வேலி பிய்ந்து அல்லது எரிந்துபோயிருந்தது. உடனேயே பச்சையோலை வெட்டியாவது அடைக்க வேண்டும். வேலி விழுந்ததால் பதுங்கிச் சூட்டு அபாயம் அதிகரித்திருந்தது. நகர்வகழிக்குள் இறங்க முடியாது. குண்டடித்தால் அகன்றும் லு}லு}லு}.. அகற்றி முடிக்கப்படாத இராணுவச் சடலங்களால் நிறைந்து கிடக்கின்றது. பிணவாடை அடங்க ஒரு மாதமாவது செல்லும்.
எக்கோ லீமா வரிசையைக் கடக்கும் போது கால்கள் தாமாகவே நின்று கொண்டன. இந்தச் சண்டையில் எதிரிகளை நான் முதன் முதலில் கண்ட இடம். ஏராளம் இராணுவம் எறிகணை வீச்சில் மாண்ட இடம். நிமிர்ந்தபடி கிடந்தது ஒரு இளைய சிங்களவனின் உடல். எம்மவர்களில் யாரோ ஒருத்தியின் குறி தவறாத சூடு அவன் நெற்றியைத் துளையிட்டிருந்தது. திறந்தபடி விறைத்திருந்தன அவன் விழிகள்.
அவன் கண்களையே பார்த்தபடி நின்றேன்.
"இளைஞனே யார் நீ?
எங்கிருந்து வந்து இங்கென் காலடியில் செத்துக் கிடக்கிறாய்?
இங்கே உனக்கு என்ன வேலை?
மலைமகள்