11-15-2005, 07:48 AM
இது நடந்தது எனது மாமாவிற்கு. அப்போது அவருக்கு 27 வயது இருக்கலாம். முதல்முதல் வேலைகிடைத்து அநுரதபுரத்திற்குச் சென்றிருந்தார்;. அது ஒரு சிங்களக்கிராமம். மின்சார வசதிகள் எதுவும் இல்லையாம். மாமா தங்க அரசாங்க குவாட்டஸ் கொடுக்கப்பட்டு இருந்ததாம். மற்றவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து போய்விட்டதால் மாமா மட்டும் தனது பகுதியில் தங்கியுள்ளார். இரண்டு நாட்கள் எந்தவித கஸ்டமும் இருக்க வில்லையாம். மூன்றாம் நாள் இரவு கதவைத்தட்டும் சத்தம் கேட்டதாம். மாமா விளக்கைக்கொழுத்தி கதவைத்திறந்து யாரென பார்த்திருக்கிறார். யாரும் இல்லையாம். சரி என்று படுத்துவிட்டார். சிறிது நேரத்தின் பின் கால்மாட்டுக்கட்டிலை யாரோ தூக்குவது போல உணர்ந்திருக்கிறார். கண்ணைத்திறந்து பார்த்த போது ஒரு உருவம் தெரிந்திருக்கிறது. விளக்கை ஏற்றிப்பார்த்த போது யாரும் அங்கு இல்லையாம். அடுத்த நாள் அவரின் சக சிங்கள அதிகாரிகளிடம் விபரம் சொன்ன போது அவர்கள் அந்த குவாட்டசை மாற்றிவிடும்படி சொல்லியிருக்கிறார்கள். காரணம் கேட்டபோது முன்பு வேலைசெய்த ஒரு ஊழியரின் கர்ப்பிணி மனைவி அதில் பிரசவத்தின்போது இறந்தாராம். அதன்பின் அந்த குவாட்டஸில் தங்குபவர்களை அவர் தொந்தரவு செய்து வருகிறாhராம். அதன் பின் மாமா வேலை வேண்டாம் என யாழ்ப்பாணம் வந்துவிட்டார்.

