11-15-2005, 07:09 AM
எனது பெரியம்மா சொன்ன கதை இது .அப்போது அவருக்கு 12 வயது இருக்குமாம். வருடா வருடம் தில்லையம்பலப்பிள்ளையார் கோவிலுக்கு எனது அம்மம்மா பொங்குவார். தில்லையம்பலப்பிள்ளையார் காட்டுக்குள்தான் உள்ளது. இன்றும் அதைச்சுற்றி பத்து பதினைந்து கிலோமீட்டருக்கு வீடுகள் எதுவும் இல்லை. அங்கு ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்களையும் வயதானவர்களையும் தவிர யாரையும் பார்க்க முடியாது.
அப்படி ஒருவருடம் கோவிலுக்குப் போய் பொங்கிவிட்டு திரும்பிவரும் போது இருட்டிவிட்டதாம். வழியில் யாருமே இல்லை. இருட்டு வேறு. மாட்டுவண்டி ஆடி ஆடி மெதுவாக போய்க்கொண்டிருந்ததாம். காட்டில் நரிகள் வேறு ஊளையிட தொடங்கிவிட்டதாம்.
ஓரிடத்தில் யாரோ அம்மா அம்மா என்று வேதனையுடன் கத்துவது கேட்டதாம். அது சாதாரணமாக இல்லாது வெகுதூரத்திற்கு முன்பே கேட்க ஆரம்பித்துவிட்டதாம். அம்மம்மா இரக்கப்பட்டு யாருக்கோ வருத்தம் போல கத்திக்கேட்கிறது. போய்ப்பார்ப்போம் என மாட்டுவண்டிகாரனிடம் கேட்டாராம். அதற்கு மாட்டுவண்டிக்காரன் வாயை மூடும் படி கோபமாக பேசிவிட்டானாம். எப்போதும் மரியாதையாகப்பேசும் அவன் கோபமாக பேசியது ஆச்சரியமா இருந்ததாம். அதும ட்டுமன்னிற மாட்டுவண்டிக்காரன் வாயுக்குள் கந்தசஸ்டி கவசத்தை முணுமுணுத்துக்கொண்டு இருந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்ததாம்.
சிறிது தூரம் கடந்துசென்றதும். அந்து முனகல் சத்தம் நின்று போனதாம். அம்மம்மாவிற்கு மனதிற்குள் கோபமாம். வண்டி வீடு வரும் வரை அவனுடன் பேசவே இல்லையாம். மறுநாள் வீடு வந்த வண்டிக்காரன் சொன்னது அனைவரையும் ஆச்சரியப்படவைத்ததாம். அந்த குரல் கேட்ட இடத்தில் ஒரு இடையன் மாட்டைக்காணாததால் மாட்டுக்காரன் என்ன செய்வானோ எனப்பயந்து அரளிவிதையை உண்டு இறந்துவிட்டானாம். அவன் வேதனையிலும் தண்ணித்தாகத்திலும் நெடுநேரம் துடித்து அதன்பின்தான் இறந்திருக்கிறாhன். சில நாட்களாக இரவில் இப்படிச்சத்தம் கேட்பதாக வேறு வண்டிக்காரர்கள் இந்த வண்டிக்காரனுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறாhகள். இதனால் வண்டிக்காரன் யாரையும் வண்டியில் இருந்து இறங்கி என்ன ஏது என்று பார்க்க விடவில்லையாம். அது மட்டுமன்றி கந்தசஸ்டி கவசத்தை அவன் முணுமுணுத்ததால் பெரிதாக ஒன்றும் ஆகவில்லையாம்.