Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#80
அமெரிக்காவின் எல்லா நன்றிகளும் பின்லாடனுக்கே


ஜெ ருசலேம் சென்ற கிறீஸ்தவ யாத்திரிகர்களை துருக்கியரும் பாலஸ்தீனியர்களும் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டி 1095ஆம் ஆண்டு பாப்பரசர் கிறீஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான சிலுவை யுத்தத்தை பிரகடனப்படுத்தினார். இந்த யுத்தம் சுமாராக நூற்றிஐம்பது வருடங்கள் நீடித்தது.
ஜெருசலேம் பிரச்சினை சிலுவை யுத்தப் பிரகடனம், சிலுவை யுத்தம் என்பன இரண்டாம் மிலேனியத்தை உலகளாவிய hPதியில் ஐரோப்பிய சக்கராதிபத்தியத்திற்கான மிலேனியமாக்கியது.
இப்போது மூன்றாம் மிலேனியம். இரண்டாம் உலக மகாயுத்தம் 1945ஆம் ஆண்டு முடிந்ததைத் தொடர்ந்து கொம்யுூனிஸ ஆட்சியை 'சிவப்பாபத்து' எனப் பெயரிட்டு அதற்கெதிரான யுத்தத்திற்கு அமெரிக்கா தலைமை தாங்கத் தொடங்கியது. சிவப்பெதிர்ப்பு யுத்தத்தில் அமெரிக்கா முனைப்பான வெற்றியீட்டியதால் ஏறக்குறைய ரஸ்யா தவிர்ந்த அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பெரும் போக்காக அமெரிக்கத் தலைமையை ஏற்கலாயின.
ஆனால், அமெரிக்காவின் உலகலாவிய தலைமைத்துவத்திற்கும், மேற்குலகின் வேகமான உலகளாவிய வர்த்தகப் பொருளாதாரத்திற்கும் இடைஞ்சலாக முதன் நிலை அர்த்தத் தில் இஸ்லாமும் இஸ்லாமிய அரசுகளும் காணப்படுகின்றன.
'சிவப்பாபத்து'க்கு எதிரான யுத்தம் முடிவடைந்ததும் இஸ்லாத்திற்கு எதிரான 'பச்சை ஆபத்து' என்றழைக்கப்படும் யுத்தமே அடுத்து நிகழுமென ஏற்கனவே அரசியல் ஞானிகளால் எதிர்வு கூறப்பட்டிருந்தது. ஆயினும் அயதொல்லா கொமெனியின் எழுச்சியிலிருந்தே அமெரிக்கா 'பச்சை ஆபத்து' எதிர்ப்பு யுத்தத்தை முழு அளவிற்கு சிந்திக்கத் தலைப்பட்டது. ஆயினும் 'சிவப்பாபத்து' அச்சுறுத்தல் தீரும்வரை அமெரிக்கா அதனை இரண்டாம் பட்சமாகவே வைத்திருக்க நேர்ந்தது. இதற்கிடையில் ரஸ்ய-அமெரிக்க பிரச்சினையைப் பயன்படுத்தியும், அமெரிக்க-ஈரானிய உறவு முறிந்ததைப் பயன்படுத்தியும் சதாம் உசைன் வளைகுடாவில் முன்னணிக்கு வந்தார். அமெரிக்காவுடனான போட்டியிலிருந்து 1989ஆம் ஆண்டு ரஸ்யா பின்வாங்கியதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது வெற்றிக்கொடியைக் கையிலேந்தியது. இஸ்லாமியப் பேருலகில், முதலடி போடப்படவேண்டிவராய் சதாம் உசைன் காணப்பட்டார். 1990ஆம் ஆண்டு பச்சை ஆபத்திற்கு எதிரான யுத்தம் வளைகுடாவில் வெடித்தது. ஆயினும் அந்த யுத்தம் உலகளாவிய பொருளில் பச்சை எதிர்ப்பு யுத்தமென முழு அளவில் பொருள்கொள்ளக் கடினமானதாகவும், அதேவேளை அந்தப் பச்சை எதிர்ப்பு யுத்தத்தைத் தொடர்ந்து விஸ்தரிக்க வழியற்றதாயும் இருந்தது. பச்சை எதிர்ப்பு யுத்தத்தை முழு அளவில் விஸ்தரிப்பதற்கான வழிகளை அமெரிக்கா தேடிக்கொண்டிருந்தவேளை வரப்பிரசாதமாய் பின்லாடன் வந்தார்.
அமெரிக்க பணயக் கைதிகளை கொமெனி வைத்திருந்ததைத் தவிர ஈரான் மீது அமெரிக்கா பாய வதற்கான வேறு சூழல்களை கொமெனி கொடுக்கவில்லை என்பதுடன் அவ வாறு பார்க்கக்கூடிய புறச்சூழலும் அப்போது அமெரிக்காவிற்கு இருக்கவில்லை. அச்சூழலைப் பயன்படுத்தி கொமெனி அமெரிக்க எதிர்ப்புச் சிந்தனையை ஈரானியர் மத்தியிலும் வேறு இஸ்லாமிய ஆர்வலர் மத்தியிலும் ஸ்தாபித்தும்விட்டார்.
ஆனால், சதாம் உசைனோ தனது ஆதிக்க வெறிக்கு இரையாக குவைத்தை கபளிகரம் செய்து தன் தேசத்து மக்களின் உரிமைதனை மீறுவதில் ருசிகண்ட சதாம் ஆதிக்க வெறிபிடித்து முன்யோசனையின்றி குவைத்தை கபளீகரம் செய்யவே இரட்சகர் வடிவில் அமெரிக்கா பச்சை எதிர்ப்பு யுத்தத்தை அழகாய் ஆரம்பித்தது. பச்சை எதிர்ப்பு யுத்தத்திற்கு தருணம் பார்த்திருந்த அமெரிக்காவிற்கு சதாம் வாய்ப்பளித்தது மட்டுமன்றி 'மீட்பர்' எனும் பெரும் பட்டத்தையும் அதற்கு வழங்கினார்.
2001ஆம் ஆண்டு செப்டெம்பரில் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீது பின்லாடன் மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல் மூன்றாம் மிலேனியத்தை உலகளாவிய hPதியில் அமெரிக்காவிடம் தாரைவார்த்துக்கொடுப்பதற்கான முன்னேற்பாடாக அமைந்துவிட்டது. "ஒரு செயலை அதன் விளைவினாலேயே மதிப்பீடு செய்ய வேண்டும்" என்ற வரலாற்று ஆய்வு முறைக்கூடாகப் பார்க்கையில் பின்லாடன் செய்வித்ததாகக் கருதுப்படும் இச்செயலின் விளைவானது அமெரிக்காவிற்கு எல்லாவகையிலும் வாய்ப்பளித்து அதன் ஆதிக்கத்தை உலகளாவிய hPதியில் பெரிதும் ஸ்தாபிக்க உதவியது. இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந து வெளிப்படையாகவே சிலுவையுத்தம் என அறைகூவினார்.
குவைத்தின் மீதான சதாமின் கபளீகரம் வளைகுடாவை அமெரிக்கா இராணுவமயப்படுத்த உதவியது. ஆனால் அது உலகளாவிய விரிவுக்கு போதாமலிருந்தது. ஆனால் இரட்டைக்கோபுர தாக்குதல் அமெரிக்க ஆதிக்கவிஸ்தரிப்பிற்கான ஒரு தத்துவத்தை கொடுத்தது. சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பதே அத்தத்துவம். வளைகுடாவை அமெரிக்கா இராணுவ மயப்படுத்தியிருந்த நிலையிலிருந்து தற்போது தென்னாசியாவரை அந்த இராணுவமயத்தை விஸ்தரிக்க பின்லாடனைக் காரணங்காட்டி அமெரிக்கா முழு இந்து சமுத்திரத்தையுமே தன்பால் இராணுவமயப்படுத்தியுள்ளது. இது உலகளாவிய hPதியில் அமெரிக்காவிற்கு முழு அரசியற் பொருளாதார இலாபத்தையும் ஏற்படுத்த ஏதுவாய் உள்ளது.
இந்திய சந்தை சுமாராக 80 வீதம்வரை உள்நாட்டுப் பண்டங்களால் நிரம்புகின்றது. நரசிம்மராவ பதவிக்கு வந்தபின் வெளிநாடுகளுடனான கூட்டுத் தயாரிப்புக்களுக்கு இந்தியா அதிகம் திறக்கப்பட்ட போதிலும் சந்தைப்பிடி இந்திய முதலாளிகளின் கையிலேயே உண்டு. ஆதலால் அமெரிக்கா தலைமையிலான உலக வர்த்தகமயமாக்கலுடன் இந்தியாவை இணைக்க அமெரிக்கா பெரும் எத்தனங்களைச் செய்யவேண்டியே இருந்த சூழலிற்தான் பின்லாடன் அமெரிக்காவிற்கு கைகொடுத்தார். யப்பான் போன்ற நாடுகளுடனான கூட்டுத்தயாரிப்புக்களுக்கு அப்பாலும் பலமான இந்திய முதலாளித்துவத்தைக் கொண்டதாகவே இந்திய அரசு இன்றும் காணப்படுகின்றது. சோவியத யுூனியனது வீழ்ச்சியின் பின்பும் இந்திய அரசு ரஸ்யாவுடனும் அமெரிக்காவுடனும் ஒரு விரோதமான உறவுக்கலவையைப் பேணுவதன் மூலம் இரண்டுக்கும் இடையே தனது முதன்மையை கட்டி வளர்க்கலாமென கனவுகண்டது. அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்களின் மத்தியிலும் ரஸ்யாவிடமிருந்து இந்தியா அண்டவெளித் தொழில் நுட்பங்களைப் பெற்றுக்கொண்டது. அதனை தனது இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்தியது. அமெரிக்க சீனலு} ரஸ்ய இழுபறிக்குள் இந்தியா இடையாக நுழைந்து தன்னை நிமிர்த்தலாமென நம்பியது.
இந்நிலைப்பாடு ஆரம்பத்தில் இந்தியாவிற்கு குறிப்பிடக்கூடியளவு வெற்றிகளையும் கொடுத்தது. இந்நிலையில் இந்தியாவை தனது ஏகவர்த்தக மயமாக்கத்துக் குள் கொண்டுவரவும், தனது ஆதிக்கத்திற்கு இந்தியாவை சரணாகதியாக்கவும் தேவையான முன்னிலை வாய்ப்பை பாகிஸ்தானின் அணுகுண்டுப் பரிசோதனை அமெரிக்காவிற்கு கொடுத்திருந்தபோதிலும் முழுப்பிராந்தியத்தையும் வர்த்தக மயமாக்கல் செய்வதற்கான ஆதிக்கத்தைப் பெற அது போதாமலே இருந்தது.
இராணுவ ஆதிக்கத்தை முழு அளவில் இந்து சமுத்திரத்திற் பெறுவதைத்தவிர வர்த்தக ஆதிக்கத்திற்கான அரசியல் நிலைமைகளை உருவாக்க முடியாதிருந்தது. அல்லது மெதுவாகவே பெறப்பட்டு வந்த வர்த்தக ஆதிக்கத்தை இந்த இராணுவ ஆதிக்கம் உடனடியாகத் துரிதப்படுத்துவதற்குரிய முன்நிபந்தனைகளை வழங்கியது.
பாகிஸ்தானின் அணுப்பரிசோதனைப் பின்னணியில் பின்லாடனின் இஸ்லாமிய அடிப்படைவாதம், பின்லாடன் தத்துவாPதியாகவும், நேரடி இராணுவ hPதியாகவும் காஸ்மீர் போராட்டத்திற்கு உதவியமை, இந்திய உள்நாட்டு இஸ்லாமியர்களும் பின்லாடனால் ஈர்க்கப்பட்டுவந்தமை என்பவற்றின் பின்னணியில் இந்தியா இஸ்லாமியரை தோற்கடிக்க வேண்டிய பிரயத்தனத்துள் சிக்குண்டிருந்தது. அது இந்தியாவாற் தோற்கடிக்கப்படக் கூடியதாகவும் இருக்கவில்லை. இந்தப் பின்னணியில் பின்லாடன் அமெரிக்காவைக் குறிவைத்தபோது அமெரிக்காவைக் கையாண்டு இந்த இஸ்லாமிய சவாலை இந்தியா வெற்றிகொள்ள விரும்பியது. இந்தியாவின் இத்தகைய தேவையும் எண்ணமும் அமெரிக்காவிற்கு கைகொடுக்கவே அமெரிக்கா தனது இராணுவ மயத்தையும், வர்த்தகமயமாக்கலுக்கான அரசியலாதிக்கச் சூழலையும் கச்சிதமாய் நிறைவேற்றிவிட்டது,
அமெரிக்காவை இந்தியா பயன்படுத்த நினைத்ததேயாயினும், விளைவு இந்தியாவை அமெரிக்காவிடம் முழு அளவிற் சரணாகதியாகிவிட்டது. உண்மையான அர்த்தத்தில் இன்னும் ஒரு பத்தாண்டில் இந்தியா அமெரிக்காவின் 51வது மாநிலம், இப்போது கிறிஸ்டினா ரொக்கா தென்னாசியாவிற்கான அமெரிக்க வைஸ்ரோய்.
1980களில் இந்தியா சொல்லியது இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாதென்று, ஆனால் கடந்த வாரம் வைஸ்ரோய் ரொக்கா யாழ்ப்பாணத்தில் ரணிலுடன் கூட்டாக நின்று மக்கள் முன் காட்சியளித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றி தன் முனைப்புடன் பேசினார். வாஜ்பாயோ இப்போது வரவேற்பறிக்கை விடுபவரானார். இது இப்பிராந்தியத்தில் இந்தியாவை அமெரிக்கா மேவிவிட்டதற்கு ஓர் உதாரணம் மட்டுமே.
இப்போது இந்து சமுத்திரத்தின் எந்த மூலைமுடுக்கிலும் அமெரிக்காவின் அரசியற் பொருளாதார இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்ட உதவிய பின்லாடனுக்கே அமெரிக்காவின் எல்லா நன்றிகளும்.
மு. திருநாவுக்கரசு
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)