11-15-2005, 12:16 AM
<span style='color:blue'><b>சிறுநீர் கல் அடைப்பு
தொந்தரவு நீங்க...</b>
<img src='http://www.dinakaran.com/health/yoha_benefits/2004/mar/patha_K_asanam.jpg' border='0' alt='user posted image'>
தரை விரிப்பின் மீது அமர்ந்து கொள்ளுங்கள்.
பிறகு இரு கைகளையும் முன்புற மாக நீட்டி, இரண்டு கால்களையும் பின்புறம் மடித்திடுங்கள்.
இப்போது வலது காலின் குதிங்கால் வலது தொடைச் சந்திப்பிலும்,
இடது காலின் குதிங்கால் இடது தொடைச் சந்திப்பிலும் ஒட்டும்படியாக மடித்துக் கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் இரு உள்ளங்கால்களும் எதிரெதிராக அமைந்திருப்பதைக் காணலாம்.
பிறகு இடது கையால் உங்களுடைய இடது உள்ளங்காலையும்,
வலது கையால் வலது உள்ளங்காலையும் நன்றாக அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தலையை நன்கு குனிந்து கால்களின் முன்னால் தரையில் தலையை வைக்கப் பழகுங்கள்.
ஆரம்பத்தில் இப்படி குனிவது சிரமம்தான்.
ஆனாலும் பிற ஆசனங்களை பழகப் பழக தலையும் நன்கு குனிய வரும்.
பின்பு எளிதாக தலையை உள்ளங்கால்கள் மீதே வைக்கப் பழகி விட முடியும்.
இந்த ஆசனத்தை செய்யும் போது பின்புறம் மேலே எழும்பி வரக்கூடும்.
அதை மேலே தூக்காமல் இருககப் பழக வேண்டும். ஆசனம் செய்யும் போது சாதாரண மூச்சே போதுமானது.
அதிகம் இழுத்து மூச்சு விட வேண்டாம்.
<b>பலன்கள்</b>
இந்த ஆசனம் மூலம் சிறுநீரகத்தின் கோளாறு எதுவாக இருந்தாலும் சரியாகி விடும்.
அதன் உள்ளே உள்ள சுத்திகரிப்பு சக்தி கூடி வரும்.
இரத்த ஓட்டம் சீராகி வரும்.
எந்தக் கடுமையான இருமலும் இந்த ஆசனத்தால் போய் விடும்.
அதுவே ஆசனத்தின் சிறப்பு.
சிலருக்கு மூத்திரக் கடுப்பு, பிருஷ்ட பாகத்தில் எரிச்சல் போன்ற தொல்லைகள் இருக்கலாம்.
அவர்கள் ஒழுங்காக இந்த ஆசனத்தை செய்து வந்தால் வலியும், எரிச்சலும் காணாமல் போய் விடும்.
சிறுநீரகத்தில் கல் அடைப்பு இடைஞ்சலும் நீங்கும்.
இந்த ஆசனம் பெண்களுக்கு அதிக பலன்களை தரும். முக்கியமாக மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு வரும் வலி, பிற கோளாறுகள் இதனால் மறைந்து விடும். கர்ப்பப்பை நல்ல திடகாத்திரமாக அமையும். பிரசவம் எளிதாக இருக்கும்.
ஆபரேஷன் கருவிகளை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.
குழந்தையும் பலமுடன் பிறக்கும்.
<b>கர்ப்பிணி பெண்கள் முதல் ஒரு மாதம் மட்டும் இந்த ஆசனத்தை செய்யலாம்.
இரண்டாம் மாதத்தில் இருந்து கண்டிப்பாக செய்யக் கூடாது.</b>
</span>
நன்றி: தினகரன்