11-14-2005, 08:07 PM
<b>ஜெர்மனியில் முக்கிய எதிர்கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்க கிருத்துவ ஜனநாயகக் கட்சி முடிவு</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/11/20051114155254051114_cdu.jpg' border='0' alt='user posted image'>
ஜெர்மானியில் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட்ட சமூக ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பது என்று கிறித்துவ ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது.
பெர்லினில் நடைபெற்ற கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் சிறப்புக் கூட்டதில் பங்கு கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த முடிவுக்கு ஆதரவளித்தனர்.
ஜெர்மனியின் அடுத்த சான்சிலராக பொறுப்பெற்கவுள்ள கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஏன்ஜெலா மார்கெல், கூட்டணி ஆட்சி அமைப்பதுதான், தற்போதுதைக்கு சிறந்த வழி என்று தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி குறித்து சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் கட்சியினரிடம் கார்ல்ஸ்ரூஹ்
நகரில் வாக்கெடுப்பு நடத்தவுள்ளனர். சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிரான்ஸ் முன்தபெரிங் எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் எதிர்கட்சியில் இருப்பதை விட அரசில் பங்கு பெறுவதால் கட்சிக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
-BBC tamil