Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#79
ஜெனரலின் கனவு
-நிலாந்தன்

என்ன சத்தம்?
ஜெனரல் திடுக்குற்று விழித்தார்.
யாரோ கதவைத் தட்டுகிறார்கள்.
யாரது? அதுவும் இந்த நேரத்தில்..
சி.ஐ.டி. யோ.? இருக்காது. மருமகள் தானே இப்பவும் அரசி.?
ஜெனரல் தடுமாறியபடி எழுந்து வந்து கதவைத்திறந்தார்.
யாரோ இருவர் தூய வெண் ஆடைகளோடு வாசலில் நின்றார்கள் சிரித்தார்கள். "என்ன ஜெனரல் யோசிக்கிறியள் நாங்கள்தான். முன்னாள் பாதுகாப்பு மந்திரிகள் நான் லலித் இவர் ரஞ்சன்."
"ஓலு} நீங்களாலு} வாங்கோ வாங்கோ இருங்கோ. ஏது இந்தப் பக்கம்? "வருத்தமாயிருக்கிறியள் எண்டு கேள்விப்பட்டம். அதுதான் பார்க்க வந்தநாங்கள்"
(1)
நித்திரை வரவில்லை. ஜெனரல் புரண்டு புரண்டு படுத்தார். ஆஸ்பத்திரிக் கட்டில் உறுத்தியது. ஆஸ்பத்திரி விசிறி இரைந்து சுற்றியது. ஆஸ்பத்திரி நெடி நாசியை உறுத்தியது. ஜெனரலுக்கு நித்திரை வரவில்லை.
இவ வளவு விரைவில் சிறைபோக நேரும் என்று ஒரு சோதிடன் கூட கூறிவைக்கவில்லை. சாத்திரிமாரை நினைக்க ஜெனரலுக்கு ஒரே ஆத்திரமாயிருந்தது. "உவங்கள நம்பித்தான் ஜெயசிக்குறுவும் தோற்றது இப்ப குடும்பத்தோட கம்பி எண்ணுற காலம்" ஜெனரல் நெடுமூச்செறிந்தார்.
"மொக்குப் பெடியளப் பெத்தால் இப்பிடித்தான் வரும். கொலை செய்யேக்க சாட்சியும் வைச்சுக்கொண்டு செய்திருக்கிறாங்கள். பேயன்கள், படு பேயன்கள். போகிற போக்கப் பார்த்தா குமார்பொன்னம்பலத்தின்ர கேசும் இறுகும்போல இருக்குலு}.ம்லு}" ஜெனரல் புரண்டு புரண்டு படுத்தார். நித்திரைக்கும் நித்திரையின்மைக்கும் இடையில் உடல் நெருப்பாய்த்தகித்தது. இயலாமை, கோபம், அவமானம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் அவருக்கு ஆறுதலாயிருப்பது மருமகளின் நினைவு ஒன்றுதான். "அவளும் இல்லையெண்டா இப்ப என்ர கதி?" ஜெனரல் பெருமூச்செறிந்தார்.
"மருமகள் ஆட்சியில் இருக்கிறவரைக்கும் ஒருவரும் என்னை அசைக்கேலாது" என்று அடிக்கடி தன்னைத்தானே தேற்றிக்கொண்டார். அப்படி தேற்றிக்கொள்ளும் போதுதான் சில சமயங்களில் கொஞ்சமாவது நித்திரை கொள்ளமுடிகிறது. ஜெனரல் புரண்டு புரண்டு படுத்தார்லு} நித்திரை வருவதுபோல இருந்தது வராது போலவும் இருந்தது.


(2)
என்ன சத்தம்?
ஜெனரல் திடுக்குற்று விழித்தார்.
யாரோ கதவைத் தட்டுகிறார்கள்.
யாரதுலு}? அதுவும் இந்த நேரத்தில்..
சி.ஐ.டி. யோ.? இருக்காது. மருமகள் தானே இப்பவும் அரசி.?
ஜெனரல் தடுமாறியபடி எழுந்து வந்து கதவைத்திறந்தார்.
யாரோ இருவர் தூய வெண் ஆடைகளோடு வாசலில் நின்றார்கள் சிரித்தார்கள்.
"என்ன ஜெனரல் யோசிக்கிறியள} நாங்கள்தான். முன்னாள் பாதுகாப்பு மந்திரிகள் நான் லலித் இவர் ரஞ்சன்".
"ஓலு} நீங்களா வாங்கோ வாங்கோ இருங்கோ. ஏது இந்தப் பக்கம்?" "வருத்தமாயிருக்கிறியள் எண்டு கேள்விப்பட்டம். அதுதான் பார்க்க வந்தநாங்கள்"
"கட்சியால வேறதான் எண்டாலும் முன்னாள் பாதுகாப்பு மந்திரிகள் எண்ட வகையில் நாங்கள் எல்லாம் ஒரே கட்சிதானேலு}."
"ஓம். ஓம் சந்தோசம் சந்தோசம் வாங்கோ இருங்கோ.."
(இனிவரும் உரையாடல் ஒரு நாடகம் போல இருக்கும் இதில் ஜெனரல், லலித், ரஞ்சன் என்ற மூன்று பாத்திரங்களும் கதைப்பார்கள்)


(3)
லலித்: மெலிஞ்சு போனியள் வருத்தம் சுகமே
ஜெனரல்: (அசட்டுச்சிரிப்போடு) விளங்குந்தானே சும்மா ஒரு நெஞ்சுக்குத்து
ரஞ்சன்: முந்தியெண்டால் இப்பிடிப்பட்ட கேஸ்களுக்கு மெடிக்கல் ரிப்போர்ட் எடுக்கிறது கஸ்ரம். ஆனா இப்ப உடன கிடைக்குது.


லலித்: விளக்கமறியல் கூடமே அப்பிடியே ஆஸ்பத்திரிக்குள்ள வந்திட்டு.
எல்லாப் பெரியபுள்ளியளுக்கும், ஒரே மாதிரியெல்லே வருத்தம் வந்திருக்குலு}


ஜென: (மனதுக்குள் கறுவியபடி) ஓமோம ஓமோம்
ரஞ்சன்: பார்க்கப் போனா. உங்கட மருமகளின்ர ஆக்களில கனபேர் இருதய நோயாளியள் போல இருக்கு.


ஜென: ஓமோம் ஓமோம்
லலித்: பாருங்கோவன் எங்கட ஜே.ஆர். செய்த புண்ணியந்தான் இதெல்லாம். அவற்ற அரசியல் யாப்பாலதான் உங்கட மருமகள் நின்றுபிடிக்கிறா. உங்களயும் சிறைபோகாமல் குறைஞ்சது ஆஸ்பத்திரியிலயாவது வைச்சிருக்கிறா நீங்கள் எல்லாரும் ஜே.ஆருக்கு நன்றி சொல்லோணும்


ஜென: மெய்தான் மெய்தான் சரியாச் சொன்னியள். அந்த மனுசன் பெரிய உதவி
செய்திருக்கிறார். ஆனா இந்தச் சிங்களச் சனம் இருக்குதே நன்றிகெட்டதுகள் நன்றி கெட்டதுகள்


ரஞ்சன்: ஒரு முன்னாள் பாதுகாப்பு மந்திரியையே பாதுகாக்கத் தெரியாத நாடு


ஜென: ஆனால் நானாவது பரவாயில்லை நீங்கள் பதவியில் இருக்கேக்கையே உங்களப் பாதுகாக்கேலாமல் போயிற்று (திருப்பியடித்த திருப்தியோடு சிரிக்கிறார்.)


ரஞ்சன்: ஓமோம் ஓமோம. மெய்தான்.


லலித்: ஆனால் சனத்தையும் முழுக்கப் பிழை சொல்லக் கூடாது. எங்கட சனம் நன்றி கெட்டதுகள் என்றத விடவும் மறதி கூடினதுகள் என்றதுதான் பொருத்தம்.


ஜென: ஏன் ஏனப்பிடிச் சொல்லுறியள்?


லலித்: பாருங்கோவன் மாறி மாறி ஆட்சிக்குவந்த எல்லாரும் முதல் சமாதானம் எண்டு சொல்லுவினம். பிறகு சண்டையில் கொண்டுபோய் முடிப்பினம். கடைசியில் சண்டையில் தோத்து இலக்சனிலயும் தோற்பினம். பிறகு மற்றக்கட்சி வரும். அதுவும் சமாதானத்தில தொடங்கி சண்டையில் முடிக்கும் திரும்பவும் திரும்பவும் ஒரே கதைதான்


ரஞ்சன்: மெய்தான் பைபிளில் ஒரு வசனம் இருக்கு சொல்லுறன் கேளுங்கோ எல்லாமே திரும்பத் திரும்ப நடக்கிறவைதான். இப்பொழுதும் நடக்கின்றன. இப்பொழுது நடப்பவைதான் இனியும் நடக்கப்போகின்றன. புூமியிலே சூரியனுக்குக் கீழே நூதனமானது எதுவுமேயில்லை.


லலித்: சரியாச்சொன்னியள சிங்கள அரசியலில் எல்லாமே திரும்பத்திரும்ப நடப்பவைதான்


ஜென: (எரிச்சலோடு) ஆனால், ஒரு முன்னாள் பாதுகாப்பு மந்திரி கம்பி எண்ணவேண்டி வந்தது முந்தி ஒருக்காலும் நடக்கேல..


லலித்: மெய்தான்லு} ஆனால் முந்தின பாதுகாப்பு மந்திரிகள் கொலை செய்யேக்க சாட்சியும் வைச்சுக்கொண்டு செய்யேல்ல..


ரஞ்சன்: ஜெனரல்லு}. நீங்களாவது பரவாயில்ல சிறைக்குத்தான் வந்திருக்கிறியள். ஆனால் நாங்கள் ரெண்டுபேரும் மேலயெல்லே போனனாங்கள். அவருக்கு மேடையில பரிநிர்வாணம் எனக்கு காரோட பரிநிர்வாணம்.


ஜென: (சீண்டப்பட்டவராக) நீங்கள் நக்கலடிக்கிறியள்லு}. சிறையில் வந்து கட்சி அரசியல் கதைக்கிறியள்.


லலித்தும் ரஞ்சனும்: இல்லை மெய்யாக இல்லை பிழையாக விளங்காதையுங்கோ. சமாதானம் அல்லது சிறை இரண்டும் உங்களுக்குப் பாதுகாப்பு எண்டு சொல்லத்தான் வந்தனாங்கள்.


ஜென: தேவையில்லை, உங்கட ஆலோசனை தேவையில்ல. நான் உங்கள் மாதிரி சாகிற ஆள் இல்ல. யாழ்ப்பாணத்தில் கொடியேத்தின சிங்கம் நான். உங்கட பைபிள் வசனத்தப் பொய்யாக்குறன் பாருங்கோ.
லலித்தும் ரஞ்சனும்: உணர்ச்சி வசப்படுகிறியள் பிறகும் கூடப்போகுது எங்கட வசனம். பிழைக்குமெண்டால் சில சமயம் உங்களுக்கும் பிள்ளயளுக்கும் சிறையும் தீரலாம். கவனம


ஜென: என்ன சிறையோலு}? எனக்கோ.? நடக்காது. மருமகள் நடக்க விடமாட்டாள.. நீங்க வீணா என்னச் சீண்டிறியள வெளியில போங்கோ போங்கோ வெளியில
(நெஞ்சு உண்மையாகவே வலித்தது. திடீரெண்டு விழிப்பும் உண்டாகியது யாரோ கதவைப் பலமாகத் தட்டினார்கள்)
'யாரது?'
'நான்தான் சேர் உங்கட பொடிகாட் நித்திரையில் கனவு ஏதோ. கண்டு கத்தினனீங்கள் போல இருந்திது' 'எட இவ வளவும் கனவாலு}? உண்மையில்லையா?'
ஜெனரல் நிம்மதியாகப் பெருமூச்செறிந்தார்.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)