11-14-2005, 01:14 AM
மணிமாறன் உங்கள் கொள்கை சரி ஆனால் எல்லாத் திருமணத்திலும்; சீதனம் வாங்கினார்களா இல்லையா என்று அறிய முடியுமா??? ஆனால் என்னைப் பொறுத்தவரை பெண்கள் எல்லோரும் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்வதில்லை என்று உறுதியான முடிவெடுத்தால் நிச்சயம் இவ்விடயம் விரைவில் நீங்கிவிடும். ஆனால் அதற்கு எத்தனைபேர் முன் வருவார்கள். இப்போது கூட திருமணப் பேச்சின்போது மாப்பிள்ளையின் விபரங்களைக் கேட்கும் பெண்களை விட மாப்பிள்ளைக்கு அந்த நாட்டு வதிவிட உரிமை உண்டோ என்ன கார் வைத்திருக்கின்றார் சொந்த வீடோ போன்ற கேள்விகள்தான் அதிகம்.

