11-13-2005, 11:51 PM
இப்போதெல்லாம் சசியின் அண்ணா அடிக்கடி ரமணன் அறைக்கு வருவார் ரமணனுக்கும் அது இடஞ்சலாக இருந்தாலும், சொல்லமுடியவில்லை. கடிதம் வந்த அன்று மாலை வந்த சசியின் அண்ணாவிடம் சொன்னான் "உங்கள் தங்கை கடிதம் போட்டு இருக்கிறா" என்று சொன்னான்.
"ஓ என்னவாம்..." என்று சிரித்தபடியே கேட்டவரிடம் கடிதத்தை கொடுத்தான்.வாசித்துவிட்டு
"கடவுளே நான் அம்மாவுக்கு சொன்னனான் சமைக்கவிடவேண்டாம் வரும் மாப்பிளை எங்களுடன் தானே இருப்பார்.அம்மா சமைக்கலாம் தானே பாவம் சசி என்ன கஸ்ட படுகிறாவோ..." என்று சொன்னார்
"ம்.ம்..."மென்று முழுங்கிய ரமணன் மனதுக்குள் சிரித்தான்.எத்தனை கற்பனைகள் ஆனால் ரமணனிடம் எந்தமுடிவும் கேட்காது அவர்களாக எடுக்கும் எந்தமுடிவுகளுக்கும் அவன் பொறுப்பு இல்லை தானே சாமியின் வரவுக்காக காத்து இருந்தான் ரமணன் காலம் தன் வேலையை தொடர்ந்தது
ஊருக்குப்போன சாமி திரும்பி வந்து விட்டான் என்று அப்பா எழுதி இருந்தார் எல்லா விடயமும் சாமி வந்து சொல்லுவார் என்று அப்பாவும் எழுதி இருந்தார். ரமணனும் சாமிவருவான் அல்லது கடிதம் வரும் என்று பார்த்தபடியே இருந்தான். இரண்டு மாதங்கள் சென்றும் சாமி ரமணனை தொடர்பு கொள்ளவே இல்லை சரி என்று இருந்தபோது அவனுக்கு ஜெட்டா திரும்பவும் போகும் சந்தர்ப்பம் வந்தது. அவனும் போனான் சாமியிடமும் போனான்.
அப்போ தான் ஏன்டா அவனிடம் போனேன் என்று இப்போதும் அழுகிறான். அந்த சுடுகின்ற பாலை வனங்கள் எல்லாம் இப்போ அவனுக்கு சுடுவதில்லை. அவனின் மனதும் மரத்து விட்டது இலங்கையை விட்டு போகும்போது எப்படியும் சீக்கிரமாக வந்து மதுவின் கைபிடிக்கும் இலட்சியத்துடன் போன அந்த ஆத்மாவின் அலறல் யாருக்குமே கேட்கவில்லை.
அவசர உலகில் அவனை பற்றி கவலைபட யாருமே இல்லை அப்பாவும் அம்மாவும் இறந்தபோதும், அவன் போகவில்லை அவனின் மருமக்களுக்கும் மாமாவின் படம் தான் தெரியும் அவன் அனுப்பும் சொக்கலேற்கள் ருசி தெரியும் மாமா வாங்கோ என்று கடிதம் எழுதுவார்கள். முகம் தெரியா ரமணன் மாமாவின் அன்புக்காக ஏங்கும் அவர்களால் ஏங்கதான் முடியும் அப்பாவின் பழையகடிதத்தை எடுத்துவாசித்தபடியே இருந்த ரமணணுக்கு மது கொடுத்த முத்தம் மட்டும் தான் நினைப்பில் இருக்கிறது.
அவன் சௌதிக்கு வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது ஜெனி எல்லோருமே நிரந்தரமாக இலங்கைக்கு போய்விட்டார்கள். அவர்களின் பிரிவுத்துயர் ஆரம்பத்தில் தன் வாழ்க்கையை நினைவுபடுத்தும் அப்பொதெல்லம் அவனுக்கு ஆறுதல் மதுவின் கடிதங்கள் தான்.
<b>ஓஒ பொறுங்கள் ஏன் ரமணன் இப்படி ஆகிவிட்டான் அடுத்தமடலில் சொல்கிறேன் </b>
-தொடரும்-

inthirajith