11-13-2005, 07:52 PM
து}யவன் தி மு க ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அண்ணா கருணாநிதி போன்றோர் திரைப்படங்களுக்கு கதை வசனம் அமைக்கத் தொடங்கிவிட்டனர்.. முதலில் அண்ணாத்துரை அவர்கள் தான் வேலைக்காரி ஓரிரவு போன்ற பங்களுக்குத் திரைக்கதை அமைத்தார். ஆனாலும் கருணாநிதி அவர்கள் பராசக்தி படத்திற்கு கதை வசனம் அமைத்தது தமிழ்த்திரையுலகில் திருப்புமுனையாக அமைந்தது. பலரும் அண்ணாத்தரையின் வசனத்தை விட கருணாநிதியின் வசனத்தைப் பாராட்டினார்கள். அது பின்னாளில் சரியென நிரூபிக்கவும் பட்டது. இந்நிலையில் அண்ணாத்துரைபோல் குரலை மாற்ற வெண்டிய அவசியம் கருணாநிக்கு ஏன் ஏற்படும் என எதிi;பார்க்கின்றீர்கள்?? நீங்கள் விரும்பினால் கருணாநிதியின் பழைய படங்களை எடுத்துப் பாருங்கள். உங்கள் ஆதாரத்தையும் தாருங்கள். எந்த ஆதாரத்தைப் போடலாமென நீங்கள் சிந்திப்பதும் புரிகின்றது.

