06-22-2003, 09:22 AM
ஜே.வி.பி.யின் தொடக்கம்
தமிழ் மண்:
முடிவு
வரலாற்றின் குப்பைத்தொட்டி
ஜே.வி.பி.யினர் எந்தத் தாய்ப் போராட்டத்திலிருந்து தமது ஆயுதப் போராட்டத்திற்கான கருவையும் உந்தலையும் பெற்றனரோ அந்த மண்ணிலிருந்துதான் விடுதலைப் போராட்டமும் எழுந்துள்ளது என்பதை அறிவார்களாக.
றோகண விஜேவீர தமிழீழ விடுதலைப் போராட்டத்தை 'ஏகாதிபத்தியத்தின் சதி' என வர்ணித்து ஒரு நூலெழுதினார்.
தன்னை ஒரு மாக்ஸிஸ புரட்சிவாத அமைப்பு எனப் பிரகடனம் செய்யும் ஜே.வி.பி. சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுதலைப் புலிகளையும் தற்போது மிக வன்மையாக எதிர்க்கின்றது. ஜே.வி.பி. தத்துவத்திலிருந்துதான் ஒரு பாடத்தையும் கற்கவில்லை, என்றாலும் அது தன் கடந்த கால அனுபவத்தில் இருந்தும் கூட எந்தவித பாடத்தையும் கற்கவில்லை.
1971ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது 14,000 சிங்கள இளைஞரை இந்திய இராணுவத்தின் உதவியுடன் சிறிமாவோ பண்டாரநாயக்கா கொன்று குவித்தார்.
தமிழரைக் கொல்வதில் பயிற்சி பெற்று அதில் கொலை ருசி கண்ட சிங்கள இனவாத இராணுவம் 1988-89 கால கட்டத்திலெழுந்த இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது ஒரு லட்சத்து இருபதினாயிரம் சிங்கள இளைஞரை கொன்று குவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இத்தனைக்குப்பின்பும் சிங்கள இனவாதத்தின் தன்மையை ஜே.வி.பி.யினால் புரிந்துகொள்ள முடியவில்லையோ?
புரட்சிவாதத் தன்மையற்ற ஜே.வி.பி. கிளர்ச்சிவாதத்தன்மையுடன் அரசியல் விவேகமற்ற hPதியில் முரட்டுத்தனமான கிளர்ச்சியில் ஈடுபட்டது. சிங்கள உயர் குழாத்தினால் புறக்கணிக்கப்பட்டு சமூக முன்னேற்றம் பின்தள்ளப்பட்டிருந்த தென்மாகாணத்து அப்பாவிக் கிராம இளைஞர்கள் விஜேவீராவின் அரை வேக்காட்டுத் தத்துவத்தை நம்பி உணர்ச்சி வசப்பட்டெழுந்தனர் அரசியலில் நரித்தனம் நன்கு வளர்ந்திருந்த சிங்கள உயர்குழாம் அந்த இளைஞர்களை தனது இரும்புக்கரம் கொண்டு கொடூரமாய் ஒடுக்கியது. விஜேவீர தனது அரைவேக்காட்டுத் தத்துவத்திற்கு புரட்சியையும் தென்மாகாண மக்களையும், தன்னையும் பலியிட்டார்.
முற்றிலும் தோற்கடிக்கப்பட்ட நிலையில் சோமவன்சக்களும், வீரவன்சக்களும் ஆயுதம் தாங்கிய புரட்சியை கைவிட்டு விட்டதாக அறிவித்து இனவாத ஆயுதத்தை தாங்குகின்றனர். தெற்கிற்கான புரட்சிக்கு துரோகம் செய்த ஜே.வி.பி. தற்போது வடக்கில் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிடக்கூடாது என்பதில் அதிகம் அக்கறையாய் உள்ளது.
இலங்கையின் நுனியிலும் அடியிலும், வடக்கிலும் தெற்கிலும், இரு வரண்ட வலயங்களிலும் ஏறக்குறைய ஒரே காலத்தில் இருவேறு ஆயுதப் போராட்டங்கள் எழுந்தன. இலங்கை சுதந்திரமடைய வேண்டுமென்ற கருத்தை முதன் முறையாக முன்வைத்து அதை நோக்கி அமைப்பை உருவாக்கியவர் பொன் இராமநாதன் சகோதரர்களில் ஒருவரான அருணாசலம் எனும் தமிழன் ஆவார். அதேபோல ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் சோஸலிஸ அரசை ஸ்தாபிக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்து 1961 ஆம் ஆண்டு அதற்கான சீன கொம்யுூனிஸ் சார்புக்கட்சியை ஆரம்பித்துவரும் ஒரு தமிழா என். சண்முகதாசனாவார். சண்முகதாசன் அவ வாறான ஒரு கருத்தை முதல் முறையாக அமைப்பு hPதியாக முன்வைத்திருந்த போதிலும் அவர் அவ வாறு ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஆயுதம் தாங்கிய நடவடிக்கையில் ஈடுபடவில்லை. ஆனால் 1967ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தீண்டாமைக்கெதிரான போராட்டத்தில் அவரது கட்சியினர் முனைப்புடன் ஆயுதம் தாங்கினர். இலங்கையில் 20ஆம் நூற்றாண்டு வரலாற்றில் ஆயுதம் தாங்கிய முதலாவது போராட்டம் தீண்டாமை ஒழிப்பிற்கான இப்போராட்டமேதான். கொம்யுூனிஸ்டுக்களினால் சாதிப்பாகுபாட்டைத் தீர்க்க முடியவில்லையேயாயினும் இந்த ஆயுதம் தாங்கிய போராட்ட நடவடிக்கையின் உதவி கொண்டு தீண்டாமையை பெருமளவு முடிவுக்குக் கொண்டுவந்தனர். அதாவது பொது இடங்களில் குறிப்பாக ஆலயம், தேனீh க்கடை, கிணறு என்பன திறக்கப்பட்டன.
இத்தகைய பின்னணியில் சண்முகதாசனின் கொம்யுூனிஸ் கட்சி இளைஞர் அணி அமைப்பாளராக இருந்த றோகண விஜேவீர அந்த இளைஞர் அணியை அடிப்படையாக வைத்து ஜே.வி.பி.யை ஸ்தாபித்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் தயாரானார். றோகண விஜேவீராவினது ஆயுதப் போராட்டத்திற்கான முதன் நிலை உந்தல் சண்முகதாசனிடமிருந்தும் 1960 களின் மத்தியில் யாழ்ப்பாணத்திலெழுந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டத்திலிருந்தும் பிறப்பெடுத்தது.
வரண்ட வலய தென்மாகாணம் சிங்கள ஆட்சியாளரால் புறக்கணிக்கப்பட்டும், உயர் குழாத்து சிங்களவரால் சமூக பாரபட்சத்திற்கு உள்ளாக்கப்பட்டும் வந்தது. 1956ஆம் ஆண்டு உருவான தனிச்சிங்களச் சட்டத்தின் அறுவடையால் கிராமியச்சிங்கள இளைஞர்கள் உயர்கல்வி பெற்று பல்கலைக்கழக அனுமதிக்கும் வேலைவாய்ப்புக்கும் போட்டியிடலாயினர் 1956ஆம் ஆண்டுத் தனிச்சிங்களச் சட்டத்தின் அறுவடை வெளிவர பதினைந்து ஆண்டுகள் தேவைப்பட்டன. இவ வாறு பெருகிய இந்த மாணவர் தொகையில் தொடர் புறக்கணிப்பிற்குள்ளான இந்த வரண்ட வலய தென்மாகாண இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிக்கு தயாராகினர். இதுவே இலங்கையின் 1971ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றும் நோக்குடன் எழுந்த முதலாவது ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியாகும்.
இதை அண்டிய காலத்தில் வடக்கில் தமிழீழப் போராட்டம் ஆயுதபரிமாணத்துடன் எழத்தொடங்கியது. சிங்கள ஆட்சியாளர்களின் தொடர் உண்மை மறுப்புகள், பாரபட்சங்கள், ஏமாற்றங்களின் மத்தியில் பல்கலைக்கழகங்களுக்கான தரப்படுத்தலானது வட மாகாண இளைஞர்களை உடனடியாக ஆயுதம் தாங்கத் தூண்டியது. சிங்களக் குடியேற்றங்கள் கிழக்குமாகாண இளைஞர்களை உடனடியாக ஆயுதம் தாங்கத் தூண்டியது. மேற்படி ஒடுக்குமுறைகள் இனவடிவத்தில் அமைந்ததால் அவை ஏற்கனவே இருந்த பல்வேறு இன hPதியான பிரச்சினைகளுடனும் இணைந்து ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டமாக எழுந்தது.
ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் இலங்கையின் ஆயுதம் தாங்கிய போராட்டங்களுள் மூன்றாம் கட்டத்தைச் சார்ந்தது. இலங்கையின் ஆயுதப் போராட்டங்களுக்கெல்லாம் தாய் யாழ்ப்பாணத்து தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டம்தான். சண்முகதாஸன் சாதி விவகாரத்தில் ஒரு நல்ல காரியத்தை தொடக்கினார். ஆனால் அதனை அவர் முடித்துவைக்காமல் ஏறக்குறைய தொடங்கிய இடத்திலேயே அதனை ஒரு சிறுவெற்றியுடன் விட்டுவிட்டுப் போய்விட்டார். இதில் அவருக்கு ஒரு நல்ல பாத்திரம் உண்டேயாயினும் தொடர் திட்டமற்ற வகையில் அதனை அவர் கைவிட்டமைக்காக வரலாறு அவரைக் கண்டிக்கும்.

றோகண விஜேவீர தமிழரை அந்நிய சக்திகளின் கைக்கூலி என்றார். அவரது வாரிசுகளின் நிலைப்பாடும் ஏறக்குறைய அவ வாறுதான் உள்ளது. இவர்களின் கூற்று இவ வாறிருக்கையில் வரலாற்று நடைமுறை வேறுவிதமாய்த்தான் அமைந்தது. ஈழத்தமிழர் முன்னேறவேண்டிய தூரம் மிக அதிகமுண்டுதான். ஆனால் நீண்டகாலமாய் பல வழிகளாலும், பலவகைகளாலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டுவரும் மக்கள் என்றவகையில், அதேவேளை அதிகம் விழிப்புள்ள மக்கள் என்றவகையில், இப்பிராந்தியத்தின் எல்லா முன்னுதாரணங்களினதும் கருப்பையாய் இந்த மக்கள் வாழும் மண் அமையும். இந்த யதார்த்தத்தை இப்போது ஜே.வி.பி. உள்வாங்கத் தயாரில்லை என்றால் நீண்ட காலத்தின் பின்பு மீண்டும் 'அ' விலிருந்து ஆரம்பிக்க வேண்டிவரும்.