11-13-2005, 03:55 PM
<b>நன்றி து}யவன் உங்கள் கருத்துக்களுக்கு
ஆனாலும் என்ன நோக்கத்திற்காக இதனை எழுதியுள்ளீர்கள் என்பது புரியவில்லை ஆனாலும் உண்மைக்கு மாறாக நிறைய எழுதியுள்ளீர்கள். கருணாநிதியின் குரல் ஆரம்பகாலத்திலிருந்தே கரகரப்பானதுதான் அவர் திரைக்கதையமைத்த அனைத்துத் திரைப்படங்களிலும் ஆரம்பத்திலேயே அவரது குரலிலேயே கதைச்சுருக்கம் வழங்கப்படும். நிங்கள் வேண்டுமாயின் அவர் திரைக்கதையமைத்த திரைப்படங்களைப் பார்க்கலாம். அதே போல கருணாநிதி அவர்கள் முதலமைச்சராகவிருந்தபோதுதான் தமிழகத்தில் அகதியாகவிருந்த எமது மக்கள் உயர்கல்வி கற்க வழியமைத்தார். ஆனால் ஜெயலலிதா வந்தவுடன் இதனைத் தடுத்து நிறுத்தினார். அத்துடன் அகதிகளுக்கு கொடுத்த உதவிகளைக் குறைத்து அவர்களை தானாகவே நாடு திரும்பும் நிலைக்கு மாற்றினார். அத்துடன் உதவிகள் கிடைக்காத அகதிப் பெண்கள் பலர் பணத்திற்காக விபச்சாரி ஆனார்கள். அவர்கள் சீரளிக்கப்பட்டு மறுநாள் மீட்கப்பட்ட செய்திகள் பல செய்திகளில் வந்தது கூட உங்களுக்குத் தெரியவில்லை. இன்றுவரை அதிகப்படியான அநியாயங்களை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செய்துவரும் ஜெயலலிதாவிற்கு நன்றாகத்தான் வக்காலத்து வாங்குகின்றீர்கள். புூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிப்பதுபோல் நீங்கள் கருத்தெழுதுகின்றீர்கள். இந்திய இராணுவத்தை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு கருணாநிதி அவர்கள் ஆற்றிய பங்கையும் நீங்கள் கொச்சைப் படுத்தியது உங்கள் சந்தர்ப்ப வாதத்தையே காட்டுகின்றது. வை.கோ வின் வெளியேற்றம் கருணாநிதியின் சதியென்றால் பின் வை.கோ எவ்வாறு கருணாநிதியுடன் சேருவார். அப்படிப் பார்த்தால் வை.கோவும் சந்தர்ப்பவாதியே. சுயலாப நோக்கம் என்பது எல்லா இடத்திலும் ஏன் நமது போராட்ட வரலாறிலேயே நிறைய உண்டு. கருத்துக்களை யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எழுதும் கருத்துக்களில் உண்மைக்குப் புறிம்பான விடயங்களை எழுதினால் எதிர்காலத்தில் உண்மையாக எழுதும் கருத்துக்கள் கூட சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கப்படும்.</b>