Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரியாணி செய்வது எப்படி
#9
<b>மட்டன் பிரியாணி</b>

தேவையான பொருட்கள் கறி -1 கிலோ
பிரியாணி அரிசி -1 கிலோ (பசுமதி அல்லது சம்பா)
வெள்ளைப் பூண்டு -75கி
இஞ்சி -75கி
ஏலக்காய் -5கி
கறுவா-5கி
கிராம்பு -5கி
பச்சை மிளகாய் -50கி
சின்ன வெங்காயம் -1/4 கிலோ
பெரிய வெங்காயம் -1/4 கிலோ
தக்காளி -1/4 கிலோ
நெய் -1/4 லிட்டர்
எண்ணெய் -3/4 லிட்டர்
தயிர் -3/4 லிட்டர்
கொத்தமல்லி -சிறிதளவு
எலுமிச்சம் பழம்


<b>செய்முறை</b>

கறியை உப்பு மஞ்சள் தூள் போட்டு குக்கரில் வைத்து 2 சத்தம் வந்தவுடன் இறக்கவும்.

வெள்ளைப் பூண்டு, இஞ்சி இரண்டையும் தனியாக அரைத்துக் கொள்ளவும். கறுவா, ஏலக்காய், கிராம்புயும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கறுவா, ஏலக்காய், கிராம்பு கறிவேப்பிலை பொட்டு வதக்கவும். பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும். பிறகு அரைத்து வைத்த இரண்டு மசாலாவையும் போடவும். வதக்கியவுடன் வேக வைத்த கறியை போட்டு வதக்கவும்.

பிறகு தயிரை ஊற்றவும். 1 கப் அரிசிக்கு 11/2 கப் தண்ணீர் ஊற்றவும். கறி நன்கு வெந்தவுடன் அரிசியை போடவும். அரிசி பாதி வெந்தவுடன் கொத்தமல்லி இலை எலுமிச்சம் சாறு ஊற்றி தம் போட்டு மூட வேண்டும். அரிசி வெந்தவுடன் இறக்கும் போது நெய் ஊற்றி இறக்க வேண்டும்.

மட்டின் பிரியாணி ரெடி. எல்லோரும் சாப்பிட வாங்கோ
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 11-13-2005, 07:42 AM
[No subject] - by விது - 11-13-2005, 12:08 PM
[No subject] - by Rasikai - 11-13-2005, 01:28 PM
[No subject] - by MUGATHTHAR - 11-13-2005, 02:04 PM
[No subject] - by Rasikai - 11-13-2005, 02:08 PM
[No subject] - by SUNDHAL - 11-13-2005, 02:13 PM
[No subject] - by Rasikai - 11-13-2005, 02:17 PM
[No subject] - by Rasikai - 11-13-2005, 02:24 PM
[No subject] - by SUNDHAL - 11-13-2005, 02:47 PM
[No subject] - by Rasikai - 11-13-2005, 03:20 PM
[No subject] - by தூயவன் - 11-13-2005, 03:24 PM
[No subject] - by Vaanampaadi - 11-13-2005, 04:51 PM
[No subject] - by Thala - 11-13-2005, 06:57 PM
[No subject] - by Rasikai - 11-13-2005, 07:34 PM
[No subject] - by Rasikai - 11-13-2005, 07:35 PM
[No subject] - by விது - 11-13-2005, 09:03 PM
[No subject] - by Rasikai - 11-13-2005, 09:07 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)