11-13-2005, 01:54 PM
எனக்குத்தெரிந்த இன்னுமொரு நபருக்கு நடந்த உண்மைக்கதை அவர் புலத்திற்கு வந்து நண்பர்களுடன் தங்கியிருந்தார். எதற்கும் அஞ்சாதவர். ஆனால் அவர் வீட்டில் இரவில் கட்டிலில் படுத்திருந்தால் பேய் காலைப்பிடித்து இழுத்து கீழே விழுத்திவிடுமாம். முதலில் இதை பெரிதாக அவர் எடுக்கிவில்லை. கனவில் திடுக்கிட்டு விழுந்ததாகவே நினைத்திருக்கிறார். நண்பர்களும் இதே கதையைச்சொல்லத்தான் அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. இவை மட்டுமன்றி சமைத்து மூடிவைத்த உணவுப்பாத்திரங்களை யாரோ உருட்டிவிடுவதாக உணர்ந்துள்ளார்கள். அப்படி உருட்டிவிடாத பாத்திரங்களில் உள்ள உணவுகள் மண் கடிபட்டதாம். இதன்பிறகு விNடியோ கமராவை இரவில் இயக்கிய போது ஒரு உருவம் ஒன்று பதிவாகியிருந்தது. இங்கு வந்த மலையாள மந்திரிகரை வீட்டுக்கு வரவைத்து கேட்டபோது அவர் வீட்டில் ஏதோ பொல்லாத ஆவியிருப்பதாக கூறியுள்ளார். அதை வெளியேற்ற பெரும் செலவாகும் ஆதலால் வீட்டைமாற்றிவிடுவதே நல்லது என அறிவுரை கூறியுள்ளார். இப்போத அவர்கள் வேறு வீட்டில் எந்தக்கஸ்டமும் இன்றி உள்ளார்கள். வீடு வாங்குபவர்களோ அல்லது வாடகைக்கு குடிபோகின்றவர்ளோ யாராணாலும் இந்த விடயத்தில் கொஞ்சம் அவதானமாக இருக்க வேண்டும்.

