11-13-2005, 01:09 PM
<b>திருமலையில் இலட்சக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின! </b>
திருகோணமலை கடற்பிரதேசத்தில் இலட்சக்கணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.
திருகோணமலை கடற்படை தளத்துக்கும் நகரத்துக்கும் இடையேயான 2 கிலோ மீற்றர் இடைவெளியில் கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்ட வகை மீன்கள் இலட்சக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கின.
குறிப்பிட்ட ஒரு வகை மீன்கள் மட்டுமே இறந்திருப்பதால் இயற்கை மாற்றங்களால் இந்த இறப்புகள் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
நகர சபைஇ மீன் வளத்துறை ஐ.நா. மற்றும் அமெரிக்க உதவி நிறுவனங்களின் சூழலியல் துறை அதிகாரிகள் இணைந்து இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். நகரசபைக்கு சிறிய அளவிலே உழவு இயந்திரங்கள்இ கையுறைகள்இ வாளிகள் ஆகியவற்றை கையளிக்க முடிந்தது என்றும் தொடர்ச்சியான மழையால் ஒட்சிசன் சுவாசக் காற்று கிடைக்காமல் இந்த மீன்கள் இறந்திருக்கலாம் என்று கருதுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்புகள் நிறுவனத்தின் திருமலை தலைவர் பிரிட்டா ஹெல்லெலன்ட் கூறினார்.
கடந்த சில நாள்களாக தொடர்ந்து இறந்த மீன்களை நாம் அப்புறப்படுத்தி வந்தாலும் நாளாந்தம் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்து வருவதால் நிலைமை மோசமாக உள்ளதாக திருமலை நகர சபையின் சுகாதார ஆய்வாளர் என். செந்தில்நாதன் கூறினார். இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் நகரசபை ஊழியர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தொண்டர்களும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் செந்திநாதன் கூறினார்.
நன்றி புதினம்
http://www.eelampage.com/?cn=21657

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>