Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#77
கனவுகள் மெய்ப்படும் காலம்

ஒரு பாசமுள்ள தந்தையாக அவர் காட்டும் கண்டிப்பும் எம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு அன்னை போல் அவர் காட்டும் பரிவு அவரிடம் எந்தப் பிரச்சினையையுமே மனம் விட்டு உரிமையுடன் கதைக்க வைக்கும். எமக்குத் தாயுமாகி, தந்தையுமாகி வழிகாட்டும் அந்தப் பெருந்தலைவர் எம்மில் வைத்திருக்கும் நம்பிக்கையும், அக்கறையும் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வல்லமையையும், வெற்றியை விரைவிலேயே அடைவோம் என்ற உறுதியையும் எம்மில் உண்டாக்கும்.
ஒரு பாசமுள்ள தந்தையாக அவர் காட்டும் கண்டிப்பும் எம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு அன்னை போல் அவர் காட்டும் பரிவு அவரிடம் எந்தப் பிரச்சினையையுமே மனம் விட்டு உரிமையுடன் கதைக்க வைக்கும். எமக்குத் தாயுமாகி, தந்தையுமாகி வழிகாட்டும் அந்தப் பெருந்தலைவர் எம்மில் வைத்திருக்கும் நம்பிக்கையும், அக்கறையும் எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் வல்லமையையும், வெற்றியை விரைவிலேயே அடைவோம் என்ற உறுதியையும் எம்மில் உண்டாக்கும்.
அவர் எம்மில் வைத்திருக்கின்ற நம்பிக்கை உடையுமாறு நடந்து, அதன் மூலம் அவரையே மனம் நோகப் பண்ணக் கூடாதே என்ற சிந்தனையே எம்மைக் கடமையில் கண்ணும் கருத்துமாக மூழ்கவைக்கும்.


தலைவரின் பிள்ளைகள்
இந்திய வல்லாதிக்கத்தின் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டி வைத்த தலைவர், இவர் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று உலக நாடுகளால் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர் அந்த நேரம் காட டிலே போராளிகளுடன் எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்.
எம்மை யாரிலும் சாராமல் தனித்து நிற்கப் பழக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அத்தனை பெண் போராளிகளுக்கும் தளபதியாக மேஜர் சோதியா அவர்களை நியமித்து நிர்வாகத்தை அவர் கையில் கொடுத்து, அவர்களுக்கெனத் தனியே ஒரு பாசறை அமைக்குமாறு கூறினார். தலைவரின் அந்தக் கனவுதான் பின்பு 'விடியல்' பாசறையாக உருவாகி, தொடர்ந்தும் பல புதிய பெண் போராளிகளை வளர்த்தெடுத்தது.
தலைவரைச் சிறைப்பிடிக்கும் நோக்குடன் செக்மேற்1, 2, 3 என்றெல்லாம் பெயர் சூட்டிய இராணுவ நடவடிக்கைகளால் இந்திய இராணுவம் மணலாற்றுக்காட்டையே சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த காலத்தில்கூட, எம்மை எப்படி எப்படியெல்லாம் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவரின் கற்பனை சற்றும் குறையவில்லை.
அவர் எம்மைக் கூப்பிடும்போதும் குறிப்பிடும்போதும் 'பிள்ளைகள்' என்ற சொல்லைப் பாவிப்பதிலும் காட்டுக்குள் எதுவும் புதிதாக, நல்லதாக வந்தால் "இதைப் பிள்ளைகளுக்குக் கொடு" என்று அவர் எங்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலும், அந்த நேரம் தலைவருடன் கூடவே நின்ற ஆண் போராளிகள் அநேகருக்குப் பொல்லாத கோபம். ஒரு காலத்தில் தங்களுக்கே தங்களுக்கு மட்டும் சொந்தமாக இருந்த தலைவரை இடையில் வந்த நாங்கள் பங்குபோட்டது மட்டுமன்றி, அவரில் அதிக உரிமை எடுத்துக் கொள்வதையிட்டு சினமடைந்த அவர்கள் எங்களைக் கண்டாலே "அண்ணையின்ரை மக்கள்" என்று எங்கள் காதுபடச் சொல்லிக் காட்டுவார்கள்.
"அண்ணையின்ரை மக்கள்" என்பது காலப்போக்கில் வெறும் 'மக்கள்' ஆகி, அந்த நேரம் தலைவருடனேயே நின்றவர்கள் மிக அண்மைக்காலத்துக்கு முன்பு வரையில் எம்மைப்பற்றிப் பேசும்போது 'மக்கள்' எனக் குறிப்பிடும் பழக்கம் இருந்தது. இப்போது அது மருவி 'பிள்ளைகள்' என்ற சொல் நிலைத்துவிட்டது. இந்தச் சொல்கூடத் தலைவரிடம் இருந்தே தோன்றியது.
"பிள்ளையளை வரச்சொல்லு"
"பிள்ளையளுக்கு அதைக் குடு" என்று கதைக்கின்ற தலைவரின் பழக்கம் அவருடன் கூடவே இருக்கின்ற ஆண் போராளிகள், தளபதிகள் மட்டத்தில் பரவ, பின்னர் இவர்களைப் பார்த்து எல்லோருமே எங்களை பிள்ளைகள் என்று குறிப்பிடத் தொடங்க, இன்று அந்தச் சொல் நிலைத்துவிட்டது. ஒரு காலத்தில் பெண்கள் தொடர்பான தவறான, பிற்போக்கான கருத்துக்களில் ஊறிக்கிடந்த சமூகத்தில் எம்மைப் "பிள்ளைகள்" என்ற மதிப்பான, கௌரவமான நிலைக்கு உயிர்த்தி வைத்தது எங்கள் அன்புக்கும் மதிப்புக்குமுரிய தலைவர்தான்.


தாயுமாகி.
காட்டுக்குள் நல்ல சாப்பாடே இல்லாத நாட்கள் அவை. ஆனால், எமக்குத் தேவையான அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டுக்குள் கொண்டுவந்து கொண்டே இருந்தோம்.
ஒருநாள் கூட இடைவெளியில்லாத சுமை து}க்கல், காலையில் பொருட்களைச் சுமந்து வருவதற்காக அணிவகுப்பது அந்த நாட்களில் நாளாந்த கடமைகளில் ஒன்றாகிவிட்டிருந்தது.
பெண் போராளிகள் யாரேனும் தலை முழுகி ஈரத்துடன் வந்து நின்றால் அவர்களை அன்று பொருட்கள் எடுக்கப்போக தலைவர் அனுமதிக்கமாட்டார். காட்டுக்கு வெளியேயோ, வேறு எங்கேயோ போய் ஒருநாளில் திரும்பி வந்துவிடமுடியாது. அந்த நிலையில் பெண்கள் இயற்கையாக உடல் சோர்ந்திருக்கின்ற நாட்களில் அவர்களை நீண்ட பயணங்களில் ஈடுபடுத்த அவர் மனம் இடம் தராது.
மேஜர் சோதியா அவர்களை அனைத்துப் பெண் போராளிகளினதும் பொறுப்பாளராக நியமித்த பின்னர் அடிக்கடி மேஜர் சோதியா அவர்களிடம் பொருட்களைச் சுமந்து வரப்போகும் அணியில் போகவிருக்கும் பெண் போராளிகள் தமக்கு வரக்கூடிய சிக்கல்களுக்குத் தயாராகப் போகிறார்களா, அதற்குரிய முறையில் தமக்குத் தேiவாயன எல்லாவற்றையும் கொண்டுபோகிறார்களா என்று கேட்பதற்கு அவர் தவறுவதேயில்லை.
ஒரு முறை காட்டுக்குப்போன காவல் உலா அணியில் ஒரு பெண் போராளி பாதை மாறித் தவறிவிட்டார். தலைவர் கவலையடைந்தார்.அந்தப்போராளி சற்று உடல்நலக் குறைவாக இருந்தார் என்று அறிந்ததும் அவர் கவலை அதிகமானது. பொறுப்பாளராக இருந்த பெண் போராளியைக் கூப்பிட்டு அவர் தனக்குத் தேவையானவற்றைக் கையோடு கொண்டு சென்றாரா என்று விசாரித்தார். அவருக்குத் தேவைப்படக் கூடிய அனைத்துப் பொருட்களையும் கொடுத்தே தேடுவதற்கு ஒரு அணியை அனுப்பினார்.
பாதை மாறி அலைந்த அந்தப் பெண் போராளி இருள் சூழத் தொடங்கியதும் ஒரு மரத்தின் மீது ஏறி இருந்துவிட்டார். விடியும் தறுவாயில் மரத்திலிருந்தவாறே ஒரு சத்த வெடி வைத்தார். அந்த ஒற்றை வெடியோசையை எதிர்பார்த்துக் காத்திருந்த மீட்பு அணி திசைகாட்டியின் உதவியுடன் வ}ரைந்து அவரை கூட்டி வந்த பின்னர்தான் தலைவர் நிம்மதியடைந்தார்.


காட்டிலே சொந்த வீட்டிலேபோல்
உண்மையில் இந்திய இராணுவக் காலத்தில் காட்டிலே தலைவருடன் வளர்ந்த பெண் போராளிகள் 'தந்தை மடியிலே செல்லப்பிள்ளைகள்' போலத்தான் வளர்ந்தார்கள். மிகவும் நெருக்கடியான, இறுக்கமான சூழ்நிலைகளில் கூட தலைவரின் கவனிப்பு அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருந்தது.
காட்டுக்குள் உணவுப் பொருட்களைக்கூட கொண்டுவர முடியாதபடி இந்திய இராணுவம் வலை விரித்துத் தடுத்திருந்த நாட்கள் அவை. மிக நீண்ட தொலைவுக்கு அப்பால் இருந்து அரிசி, மா, சீனி, பருப்பு, மண்ணெண்ணை என்று எல்லாவற்றையுமே பெண், ஆண் என்ற பேதமின்றி எல்லோருமே சுமந்து வரவேண்டியிருந்தது. கொண்டுவருகின்ற சுலபத்துக்காக மூடைகளைத் தலையில் வைத்துப் பெண் போராளிகள் நடந்ததைக் கண்ட தலைவர் தலையில் சுமைகளை வைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார். தோள்களில்தான் து}க்கலாம் என்று சொன்னார். இந்தச் சம்பவத்தை மீள நினைவு படுத்திய ஒரு பெண் போராளி "மூடைகளைத் து}க்கித் தலையில் வைத்தால் இருகைகளையும் வீசி இலகுவாக நடக்கலாம். ஆனால், அண்ணை அதை அனுமதிக்கேல்லை. ஒரு தோளிலையிருந்து மற்றத் தோளுக்குப் பாரத்தை மாத்திற ஒவ வொரு முறையும் பேசாமல் தலையில் வைத்துவிட்டு கையை வீசி நடந்தாலென்ன என்ற யோசனைதான் வரும். ஆனா, அப்படிச் சொன்னதுக்குக் காரணம் இருக்கும். தலையில் பாரம் சுமக்கிறதால வரப்போகிற பின் விளைவுகளைப் பற்றி எல்லாம் யோசித்துத்தான் அவர் அப்படிச் சொல்லியிருப்பார் என்று நினைச்சுக் கொண்டு தோளிலேயே சுமந்து நடப்பம்" என்றார். ஒவ வொரு விடயத்திலும் தலைவர் தங்களில் எவ வளவு கவனமுடன் நடந்துகொண்டார் என்பதை அவர்கள் பெருமையுடன் சொல்வார்கள்.
அந்த நேரம் எல்லோரிடமும் ஒன்று அல்லது இரண்டு உடைகள் மட்டுமே இருந்தன. காட்டிலே கிணறு வெட்டினால் என்ன, பெரு மரங்களைத் தறித்து சுமந்து வந்தாலென்ன, கிலோ மீற்றர் கணக்காக முள் மரங்கள், தடிகள் உடைகளைக் கொழுவி இழுக்கின்ற கொப்புகளிடையே நடந்து பொருட்களைச் சுமந்து வந்தாலென்ன, எல்லாமே அந்த இரண்டு உடைகளுடனும்தான். அநேக பெண் போராளிகளின் தோள் சட்டைத்துணி வியர்வையில் ஊறியும், அழுத்தும் சுமைகளின் பாரத்தாலும் நைந்து போயிருந்தன. ஒரு கட்டத்தில் சிறு கொப்பு உடைகளில் கொழுவினாலும் 'டர்' என்று கிழிந்தன. முன்னும் பின்னும் ஆண் போராளிகள் தம் சுமைகளுடன் கூடவே வந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் சின்ன முட்களை எடுத்து, கிழிந்த இடத்தை இரண்டாக மடித்து குத்திவிட்டு மீண்டும் சுமைகளுடன் நடப்பார்கள். அநேகரின் உடையில் தோளில் தையல்கள் போடப்பட்டிருந்தன. காட்டிலே எல்லோருடைய நிலையுமே அதுதான். யாருக்காக யார் என்ன செய்யமுடியும் அந்தக் காட்டில்?
இவ வளவு நெருக்கடிகளுக்கிடையிலும் காட்டுக்குள் ஒருவாறு உடைகள் வந்து சேர்ந்துவிட்டன. தலைவர் புதிய உடைகளுடன் ஒவ வொரு பெண்போராளியையும் கூப்பிட்டு அவரவருக்குப் பொருத்தமாக உள்ளதா என்பதைத் தானே பார்த்தார். எல்லாருக்குமே உடைகள் சரியாக இருந்தனவா என்று வீட்டிலே அம்மா கவனிப்பது போல் காட்டிலே அவர்தான் கவனித்தார்.
ஒருமுறை காட்டுக்குள் பெண்களுக்கான சுகாதாரத் துவாய்கள் முற்றாக கையிருப்பில் இல்லாமற் போயின. நிலைமை சிக்கலாகிவிட்டது. தலைவர் உடனேயே ஆண் போராளிகள் அனைவரிடமிருந்த பழைய சாறங்கள் எல்லாம் தனக்கு வேண்டும் என்று வாங்கி, கொதிநீரில் அவிக்க வைத்து, பெண் போராளிகளின் பாவனைக்குத் தந்து சிக்கலைத் தீர்த்துவிட்டார். சொந்த வீட்டிலே இருப்பதுபோன்ற உணர்வு காட்டிலும் இவர்களுக்கு தலைவரின் கவனிப்பினால் உண்டாயிற்று.


கோழியின் இறகுக்குள் குஞ்சுகள்
இந்திய இராணுவக் காலத்தில் காட்டில் தலைவருடன் இருந்த பெண் போராளிகளின் எண்ணிக்கை இன்றைய நிலையுடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமே.
காட்டிலே அந்தநேரம் இடையிடையில் சண்டைகள் வரும். ஆனால், தலைவர் பெரும்பாலும் சண்டைகளில் ஆண் போராளிகளையே ஈடுபடுத்தினார். தன்னுடன் இருக்கின்ற குறைந்த எண்ணிக்கையிலான பெண் போராளிகளை அப்போதே சண்டைகளுக்கு அனுப்பி இழப்புக்களைச் சந்திக்காது, அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன், கவனமுடன் இருந்தார்.
பெண் போராளிகளுக்குப் புரியவில்லை.
அவர்களுக்குப் பயிற்சிகள் நடந்தன. ஆண் போராளிகளுக்கும் அவர்களுக்குமிடையில் போட்டிகள் கூட நடந்தன. ஆனால், சண்டை மட்டும் அவர்களுக்கு இல்லை.
என்ன இது?
அவர்கள் தலைவரிடம் கேட்டார்கள். கெஞ்சினார்கள். அடம் பிடித்தார்கள். ஒன்றிலுமே பயனில்லை. கடைசியாக ஒருமுறை மாதாந்த கலை நிகழ்ச்சியின்போது, சண்டைக்குப் போகவில்லையே என்ற ஏக்கத்தில் பெண் போராளிகள் மனநிலை பாதிக்கப்பட்டு வாய் புலம்புவது போன்ற காட்சிகளைக் கொண்ட நாடகம் ஒன்றை மேடையேற்றினார்கள்.
நாடகம் பார்த்த தலைவர் மனதுக்குள் சிரித்துக் கொண்டார். இருப்பவர்களைப் பாதுகாத்து, அவர்களின் பலத்தை அதிகரிப்பதிலேயே கவனமுடன் இருந்தார். அவர்களின் ஒவ வொரு வேலைகளிலும் அக்கறையுடன் இருந்தார்.
எண்ணிக்கையிலும் பலத்திலும் அவர்கள் வளர்ந்த பின்னர் பெண் போராளிகள் இல்லாமல் சண்டையே இல்லை என்ற நிலையை அவர் உருவாக்கினார். இன்று பெண்கள் படையணிகள் வளர்ச்சியடைந்திருப்பதற்கான காரணங்களிலே, அன்று தன்னுடன் சிறிய தொகையில் இருந்தவர்களை அவர் சரியான நேரத்தில் சரியான முறையில் பயன்படுத்தியதும் ஒன்றாகும்.
சிறகுகள் முளைக்கும்வரை எந்தத் தாய்ப் பறவையும் தன்குஞ்சுகளைப் பறக்க அனுமதிப்பதுமில்லை. சிறகுகள் பலமடைந்த குஞ்சுகளைக கூட்டிலேயே தங்கியிருக்க அனுமதிப்பதுமில்லை.

இன்னும் வரும்.....
- மலைமகள்
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)