11-13-2005, 12:46 AM
சுடுகின்ற புதைமணல்கள் - பாகம் 7
மயங்கி விழுந்தவனை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல மூன்று மணி நேரம் எடுத்தது. அங்குவந்த அரபிக்காரனின் உதவியால் வைத்திய சாலைக்கு மயக்கத்திலேயே கொண்டு சென்றார்கள். டொக்டர் மிகுந்தகோபத்துடன் "நல்லவேளை 30 நிமிடம் தாமதித்து இருந்தாலும் அவனை காப்பாத்தி இருக்கமுடியாது" என்று சொன்னர் இருந்தும் 15 நாட்கள் ரமணன் அங்கேயே தங்க வேண்டி நேரிட்டது.
15 நாட்களின் ரமணன் அறைக்கு திரும்பினான் அவனின் தங்கைக்கு பேசிய நண்பனும் அடிக்கடி அவனைப்பார்க்க வரத்தொடங்கினார். ஒரு நாள் அவனிடம் வந்த அவர் "என்ன? உங்களிடம் தந்த போட்டோவை பார்த்தீர்களா உங்கள் விருப்பம் எப்படி என்று சொன்னால், அடுத்த விடுமுறைக்கு இருவரும் ஊருக்கு போய் எங்கள் இருவரினதும் கல்யாண அலுவல்களை பார்க்கலாம் தானே?" என்று சொன்னார்
ரமணனுக்கு முதலில் எதுவுமே புரியவில்லை "என்ன போட்டோ" என்று கேட்டான்.
"ஓ.... அன்று நான் உங்கள் றூம் க்கு வந்தபோது தந்த கடிதத்துக்குள் ஒரு போட்டோ இருந்தது பார்க்கவில்லையா?" என்று கேட்டபோது தான் அவனுக்கு எல்லாமே புரிந்தது.
வெட்கத்துடன் "ஐயோ நான் இன்னும் பார்க்கவில்லையே சரி" என்று அந்த கவரை திறந்து பார்த்தான்.
அதனுள்ளே ஒரு பெண் இரட்டை ஜடை போட்டு குறுகுறு என்ற பார்வையுடன் மிக அழகாக இருந்தா "யார் இது" என்று கேட்டபோது தான் சொன்னான் அந்த நண்பன்.
" இது என் தங்கை உங்களுக்கு விருப்பமா என்று சொல்லுங்கோ..." என்று ஆவலுடன் அவன் முகத்தை பார்த்தார்
"எங்கள் அம்மாவுக்கு உங்களை மிகவும் பிடித்து விட்டது தங்கைக்கு உங்களை விட்டால் நல்ல மணமகன் கிடைக்காது என்று சொல்லி விட்டார். நாங்கள் ஐந்து ஆண்சகோதரங்கள் தங்கை மட்டும் தான் ஒரு பெண் நீங்கள் கேட்பது எல்லாம் கொடுப்போம். இருக்கும் வீடு ஏன் எங்கள் தங்கையை எங்கள் தோளிலே சுமந்துதான் வைத்து இருப்போம் நீங்கள் அவவுக்கு தாலி கட்டும் போதுகூட.. "என்று சொன்னார்.
" ம்ம்...."அதில் தெரிந்தது அவர்களின் பாசம் ஆனால் அதை கேட்ட பக்கதில் இருந்த ஜேனி "என்னடா மச்சி ரமணா நல்ல இடம் தான் கிடைத்து இருக்கு.." என்று சிரித்தான். ரமணன் மனது வேதனை யாருக்குமே புரியவே இல்லை ஒரு நாள் தீடிரென்று சாமி மதுவின் அண்ணா ரமணன் அறைக்கு வந்தான்.
வந்தவன் முகத்தில் ஈயாடவில்லை. ரமணன் பார்த்ததும் தலைகுனிந்தபடியே இருந்தான் அறையில் வேறு நண்பர்களும், ரமணனை வருத்தம் பார்க்க வந்தவர்களும் இருந்தார்கள். அப்போ சாமி மெதுவாக "ரமணா உங்களுடன் கொஞ்சம் பேசவேணும் முடியுமா? "என்று கேட்டான்.

inthirajith