06-22-2003, 09:20 AM
பிரதான யாழ் கண்டி வீதி(ஏ.9) திறப்பின்போது மக்கள் கலந்து கொண்ட உணர்வு புூர்வமான நிகழ்வில் இருந து சில காட்சிகள்
நானிப்பொழுது ஒரு நெடுஞ்சாலை மட்டும் அல்ல இலங்கைத்தீவில்
சமாதானத்திற்கான முதலடிகள் எடுத்து வைக்கப்படும் ஒரு சமாதானச் சாலையும்கூட. இலங்கைத்தீவிலேயே இப்பொழுது அதிகம் கதைக்கப்படும் ஒரு சாலை நான்.
ஈழப்போரில் அதிகம் குருதி சிந்தப்பட்ட சாலையும் நானே.
ஏன் எனக்கு இத்துணை கவர்ச்சி? காரணம் இதுதான் நான் யாழ். குடாநாட்டை தீவின் பிறபாகங்களுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலையாக இருப்பதுதான்.
யாழ்ப்பாணத்தைப் பிடிக்கும் எந்த ஒரு அந்நியரும் அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்வதென்றால் என்னையும் பிடித்தாக வேண்டும். அதாவது யாழ்ப்பாணத்தின் மீதான வெற்றி எனப்படுவது என்னையும் பிடித்தால்தான் இறுதியானதாயும் உறுதியானதாயும் அமையும்.
என்பதினாலேயே நானெப்பொழுதும் யுத்தத்திற் சிக்கினேன் என்னை வழிமறித்து. எப்பொழுதும் சோதனைச்சாவடிகளும் முட்கம்பியரண்களும் இருக்கும்.
எத்தனை படையெடுப்புக்களிற்குச் சாட்சி நான்?
எத்தனை ஆயிரம் உயிர்கள் எனக்காகக் கொடுக்கப்பட்டன?
எத்தனை லட்சம் வேட்டுக்கள் எனக்காகத் தீர்க்கப்பட்டது?
எவ வளவு குருதி எனக்காகச் சிந்தப்பட்டது.
பாருங்கள். எனது மேனிமுழுதும் ராங்கிகளின் இரும்புப் பற்கள் பட்ட அடையாளங்களை. ஆனால் எந்த ஒரு அந்நியரும் யுத்த காலத்தில் என்னை முழுதும் தமது பிடிக்குள் வைத்திருந்ததேயில்லை.
வெள்ளையர், இந்தியர், சிங்களவர் என்று படைகொண்டு வந்த அந்நியர் எல்லாருக் கும் பிடிபட மறுத்து தழுவிச் செல்லும் ஒரு புதிராகவே நானென்றும் இருந்தேன்.
எனது இதுவரைகால இருப்பில் என்னால் மறக்க முடியாத விசயங்கள் இரண்டு. முதலாவது யாழ்ப்பாணத்து இடப்பெயர்வு. மற்றது ஜயசிக்குறு இரண்டுமே என்னைப் பைத்தியக்காரி போலாக்கின.
முதலாவது யாழ்ப்பாணத்து இடப்பெயர்வு. அது ஒரு கொடுமையான அனுபவம். எனது வாழ்நாளிலேயே நான் பார்த்திராத பயங்கரமான ஒரு ஊர்வலம் அது. முன்னெப்பொழுதும் அத்தனை சனங்கள் என்னைக்கடந்து போனதில்லை. அத்தனை வாகனங்கள் என்மீது ஊர்ந்து போனதில்லை.
அன்றைய அந்த மழையிரவில் எனது சனங்கள் அழுதழுது ஊர்ந்து போன காட்சியை இலங்கைத்தீவில் மட்டுமல்ல புூமியிலேயே வேறெந்தத் தெருவும் கண்டிருக்காது.
பிள்ளைகளைப் பெற்றும் மலடியாய்ப்போன ஒரு முதியதாயைப் போல தனித்திருந்தேன் நான். பிறகு ஆறு மாதங்கள் கழித்து சனங்கள் திரும்பி வந்தார்கள். ஆனால் ஆறுதலில்லை.
செம்மணியில் கிருஸாந்தி கதறியபோது எனக்கும் கேட்டது. அவளைக் குறையுயிராக அவர்கள் புதைத்தபோது நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளது தாயை சகோதரனை அயலவரைலு}. இப்படிப்பலரை அவர்கள் அந்த ஊரிவெளியில் புதைத்த போது நான் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கையாலாகாத சாட்சியாக.
போன சனங்களில் ஒரு பகுதியினர் இன்னும் வீடு திரும்பவில்லை. இனியெப்பொழுது அவர்கள் திரும்பி வருவார்களோ தெரியாது. ஆனால் அவர்களெல்லாரும் திரும்பிவரும் நாள்தான் எனது வாழ்வின் மிக மகிழ்ச்சியான நாளாயிருக்கும்.
மற்றது ஜெயசிக்குறு.
யாழ்ப்பாணத்தில் நானெனது சனங்களை இழந்தேன். வன்னியிலோ எனது காடுகளையும் சனங்களையுமிழந்தேன். எனது இரு மருங்கிலும் குடைபிடித்து நின்ற பெருவிருட்சங்களைத் தறித்துக்கொண்டு முன்னேறியது ஜெயசிக்குறு. ஜெனரல் ரத்வத்த தளபதிகள் புடைசூழ எனது மார்பின் மீது நின்று போஸ் கொடுத்தார்.
எனது மிருகங்கள் என்னைவிட்டு ஓடிப்போயின.
எனது பறவைகள் என்னைப் பிரிந்து பறந்துபோயின. ஆனால் எனது பிள்கைள் எனது ரகசிய வழிக@டாக வந்து வெடிமருந்துகளை விதைத்து விட்டுப்போனார்கள்.
ஜெயசிக்குறு காலம் எனது வாழ்நாளிலேயே மிகப்பயங்கரமான ஒரு காலம்.
யாழ்ப்பாணத்திற்கான வசதியான ஒரு விநியோக வழியைத் திறப்பதுதான் ரத்வத்தவின் பிரதான இலக்கு.
ஜெயசிக்குறுவை இன்னொரு விதமாகச் சொன்னால் ஒப்பறேஸன் கண்டிவீதி எனலாம்.
நான் வன்னிப் பெருநிலத்தைப் பிளந்துகொண்டு போகிறவள் என்றாலும் எனது முக்கியத்துவம் நான் முன்சொன்னபடி குடாநாட்டை தீவின் பிறபாகங்களுடன் தொடுப்பதுதான். நொச்சிமோட்டைக்குப் பிறகு எனது வழியில் பெரிதாக ஆறுகள் ஏதும் குறுக்கிடுவதில்லை.
கனகராயன் ஆற்றுக்கு சமாந்தரமாகப் போகிறவள் நான். மழை நாட்களில் வன்னிப் பெருநிலத்தில் எந்த ஒரு காட்டாறும் என்னை அறுத்தோடுவதில்லை. இதுவும் எனது கவர்ச்சிகளில் ஒன்று. இப்படிபல காரணங்களிற்காக என்னைப் பிடிக்க ரத்வத்த படையெடுத்து வந்தார்.
இதிலொன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். ஜெயசிக்குறு, யாழ்ப்பாணத்துக்கு பாதை திறக்கும் அதேசமயம் வன்னியை எனது அச்சில் வைத்து இரண்டாகப் பிளத்து விடுவதையும் இறுதி இலக்காகக் கொண்டிருந்தது. ஆனால் என்னைப் பிடிப்பது என்பது முழு அளவில் வன்னியைப் பிடிப்பது அல்ல என்று நடைமுறையில் நிரூபிக்கப்பட்டது.
ஏனென்றால், யாழ்ப்பாணத்துக்கான விநியோக வழி என்பதுதான் எனது முக்கியத்துவம், வன்னி வாழ்வின் அசைவியக்கத்தைப் பொறுத்தவரை எனது பாத்திரம் ஒப்பீட்டளவில் சிறியதே. வன்னி வாழ்வின் அசைவியக்கத்தைத் தீர்மானிக்கும் கிறவல் சாலைகள் என்னில் வந்து மிதந்தாலும் கூட வன்னிக்கிராமங்கள், பட்டினங்களின் அசைவியக்கத்தை நான் அதிகம் தீர்மானிப்பவள் அல்ல.
உண்மையில் எனது முக்கியத்துவம் யாழ்ப்பாணம் சார்பாகத்தான்.
எனவே என்னைப் பிடிப்பதன் மூலம் வன்னிவாழ்வின் அசைவியக்கத்தை அவர்கள் நினைத்தமாதிரி சிதைத்துவிட முடியவில்லை. இதனால் ஜெயசிக்குறு இடையில் இறுகிப்போய் நின்றுவிட்டது.
பிறகு ஓயாத அலைகள் மூன்று எழுந்து ஜெயசிக்குறுவின் வெற்றிகளை அள்ளிக்கொண டு போனது.
தோற்றோடிய சிப்பாய்களுக்கும் ராங்கிகளுக்கும் சாட்சியிருந்தேன் நான்.
ஆனையிறவில் நூற்றாண்டுகளாய் வெல்லக்கடினமாயிருந்த கோட்டை தகர்ந்தபோது தோற்றோடிய கெமுனு குமாரர்களுக்கும் உப்புக்காற்றால் படபடத்தாடும் வெற்றிக் கொடிக்கும் சாட்சியாயிருந்தேன் நான்.
வன்னியில் என்னைப் பிடிக்கப் புறப்பட்டு வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமாக என்னை இழந்தார் ரத்வத்த.
இழக்கப்பட்டு பிசாசுகளிடம் கையளிக்கப்பட்ட பட்டினங்களில் நான் தனித்துக்கிடந்தேன். மீட்கப்பட்டு சனங்கள் வீடு திரும்பிய பட்டினங்களில் நான் பொலிந்து கிடந்தேன்.
இப்பொழுது காட்சி மாறி விட்டது.
யுத்தத்தின் காரணமாய் யுத்தத்தின் சாட்சியாய் இருந்தவள் நான் இப்பொழுது சமாதானத்தின் ஆரம்ப வழியாக மாறியிருக்கிறேன். கிளிநொச்சிக்கு வரும் ஹெலிகொப்ரர்கள் என் மீது தாழப்பறந்து வந்து தரையிறங்கிச் செல்லும் இத்தருணத்தில் எனக்கொரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
அது இந்தியாவின் பேரரசனாயிருந்த அக்பரும் நகைச்சுவை மேதை பீர்பலும் முதலில் சந்தித்தது பற்றிய கதை.
ஒருமுறை அக்பர் வேட்டைக்குப் போன இடத்தில் வழியைத் தவற விட்டுவிட்டார். காட்டில் வழி தடுமாறிக்கொண்டிருந்த அவரும் மெய்க்காவலரும் இடையில் ஓரிடத்தில் பீர்பலைக் கண்டார்கள். அக்பரின் மெய்க்காவலன் பீர்பலிடம் கேட்டான்.
'இந்தப் பாதை எங்கே போகும்?'
பீர்பல் அமைதியாகச் சொன்னார். 'பாதை எங்கேயும் போகாது நீங்கள்தான் அதில் போகவேண்டும்' மெய்க்காவலனுக்குக் கோபம் வந்துவிட்டது. 'ஓய் பாதை கேட்பது யார் என்று தெரிகிறதாலு}? அவர்தான் பேரரசர் அக்பர்லு}.' என்றான்.
பீர்பல் இம்முறையும் அமைதியாகச் சொன்னார் 'பேரரசனாக இருந்தாலும் கூட பாதை எங்கேயும் போகாது அவர்தான் போகிற இடத்திற்குப் போகவேண்டும்'
இப்பொழுது
என்னுடைய கதையும் அப்படித்தான்.
பீர்பல் சொன்னது போல நானும்மொரு பாதைதான் தானாக எங்கேயும் போக முடியாத பாதை. நீங்கள்தான் போக வேண்டும். எங்கு வேண்டுமானாலும் போகலாம்.
யாழ்ப்பாணத்திற்கும் போகலாம், வன்னிக்கும் போகலாம், கண்டிக்கும் போகலாம், கொழும்புக்கும் போகலாம், யுத்தத்திற்கும் போகலாம்,
சமாதானத்திற்கும் போகலாம்.