11-12-2005, 11:18 AM
saththiri Wrote:புலத்தில் இளைஞர்களிடம் சீதன விடயத்தில் உண்மையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்டிருக்கு என்பதை பராட்டத்தான் வேணும் எனக்கு தெரிய அனேகமானவர்கள் தங்கள் பணத்தை செலவழித்துதான் தங்கள் துணைகளை கூப்பிட்டு திருமணம் செய்திருக்கிறார்கள்
சாத்திரி நீ சொல்லுற மாதிரி 100திலை ஒரு 10தான் இப்பிடி பி;ள்ளையை காசில்லாமல் எடுக்கினம் சீதனத்தை வாங்கிறதிலை முன்னுக்கு நிக்கிற ஆட்கள் பெடியளை பெத்தவைதான் இது சில இடங்களிலை பெடியங்களுக்குத் தெரியாமலே நடக்குது சீதனம் குடுக்கிறதுக்கு முன்னுக்கு நிக்கிற ஆட்களும் இல்லாமல் இல்லை இப்ப ஊரிலை வெளிநாட்டு மாப்பிளையளை விட படிச்ச கவர்மெண்ட் உத்தியோக காரருக்கு டிமான் கூடியிட்டுது நாட்டிலை பேச்சுவார்த்தை நடக்குது ஒரு முடிவுகிடைச்சா வெளிநாட்டுக்காரரை பிடிச்சு அனுப்பிப் போடுவினம் எண்டு சனம் ஊரிலை அள்ளிக் குடுத்து கட்டுறதுக்கு அடிபடுகுதுகள் இனி வெளிநாட்டுக்கு போன எல்லாரும் படிச்ச ஆட்களும் இல்லைத்தானே கையிலை காசுவந்த வுடனை தங்கடை குடும்பத்துக்கை ஒரு படிச்ச டாக்குத்தர் அல்லது இன்ஜீனியர் மாப்பிளை வரவேணும் எண்டு ஆசைப்படுவது இயல்பு இதுக்கு எவ்வளவு குடுக்கவும் அவை ரெடியா இருக்கினம் இதுக்கு அவை சொல்லுற காரணம் சீதனம் எண்டு குடுக்கிறது மகளின் பிற்கால வாழ்க்கைக்கு இரண்டுபேற்றை பேரிலையும் தானே போடுறம் அப்ப அதை எங்கடை மகளுக்குத்தானே குடுக்கினம் பிறகென்ன. . . .சில இடத்திலை டொனேஷன் மாதிரி வாங்கிறது தான் வருத்தம் உங்களுக்குத் தெரியுமே சில இடத்திலை சீதணத்தை டிமான் பண்ணிக் கேக்கிறது இந்த கலியாணம் கட்டுற பெட்டையள் தான் அக்காக்கு இவ்வளவு குடுத்தனீங்கள் எனக்கும் தாங்கோ எண்டு அப்ப எங்கடை பெடியள் திருந்தினாலும் யார் விடமாட்டினம் எண்டு தெரியுதுதானே ஒரு ரகசியம்
இப்ப புரொக்கர்மாரின் ரேட் எப்பிடித்தெரியுமே வாங்கிற சீதணத்திலை 10 வீதம் அப்பிடி எண்டா 50 லட்சத்துக்கு ஒண்டை முடிச்சன் எண்டால் பாருங்கோ என்ரை கொமிஷன் எவ்வளவு எண்டு ஏனப்பா எங்கடை பிழைப்பிலை மண்ணைப் போடுறீயள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

