Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#75
மனித வரலாற்றின் மனிதத்தன்மை தொலைந்த பக்கங்களில் சில..

ஒரு முழுமையான பார்வை
பெண்கள்தான். 'உலகம்
எங்கும் பெருக்கெடுத்து ஓடும்
யுத்தகால அழிவுவெள்ளம் பெண்ணின்
இரத்தத்தால் உருவானதொன்றே'
என்ற அமெரிக்கப் பெண் கவிஞர் எடிற் சிற்வெல்லின் கூற்றும் தமிழ் மண்ணும் விதிவிலக்கல்ல.
மனித குலத்தின் மனச்சாட்சி மனிதனாலேயே மிதிக்கப்படும் அவலம் மனித குலத்திற்கு மட்டுமே தனித்துவமானதொன்று என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்கள் இவர்கள்லு}. உடலைக் களமாக்கி உயிர் கொடுத்தவளை, உதிரத்தை உணவாக்கி சமையங்களை, உணர்வை, உறவை, அன்பை, அறிவை பயிராக்கி வளர்த்து விட்டவளை மிதிக்கும் விந்தையை மனித இனம் கற்றுக்கொண்ட போதே தொடங்கிவிட்டது. மானுடத்தின் அழிவு பகை முடிக்கவும் பலத்தைக் காட்டவும் அடக்கியொடுக்கவும் ஆளுமை சிதைக்கவும் இங்கே சிங்கள இனவெறி அரக்கர்களின் இலக்காக ஆகிப்போனது தமிழினத்தின் விழுதுகள் மட்டுமல்லலு}. வேர்களும் கூடவே. நல்லுறவு வேண்டி நாளெல்லாம் கனவு கண்ட நங்கையர்கள் வல்லுறவால் வாழ்வழிந்து, வாழ்விழந்து, உடல்சிதைந்து, உணர்விழந்து நிற்கக் காரணம் யார்? மனித வாடைக்கு மருளும் மானினமோ, மனித வேட்டையாடும் கொடிய விலங்கினமோ அல்லது மனிதனை அண்டிவாழும் மந்தை இனமோ செய்யாத இந்த இழிசெயலை ஆற்றலால் தன்னை மேம்படுத்திக் காட்டும் மனித இனம் எங்கிருந்து கற்றுக்கொண்டது? உயிர் கொடுத்தவளை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றும் மனுஸஎதிரியை தேடி உலக வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி கைகள் தேய்ந்ததே கண்ட பலன்.
ஆனாலும்.
உலக வரலாற்றை அகலக் கண்கொண்டு நோக்கும் போதுதான் பிறந்த மண்ணின் மகத்துவம் புரிகின்றது. தமிழீழப் பெண் தன் தாய்மண்ணில் உயர்ந்து நிற்பது புரிகின்றது. தமிழீழ மண் காக்கும் மைந்தர் தம் பெண்ணை மட்டுமன்றி மாற்றார் பெண்ணையும் மதிக்கும் குணம் புரிகின்றது. இந்த உயர் நிலைக்கு குழிபறிக்கவென்றே கங்கணம் கட்டி நிற்கிறது சிங்களத்தின் இன அழிப்பு அரசியல், சிங்கள இனவாதம் தமிழீழத் தேசியத்தை அழிக்க முயன்ற போதெல்லாம் அதிகம் பலியானது அப்பாவித் தமிழ்ப் பெண்கள்தான். 'உலகம் எங்கும் பெருக்கெடுத்து ஓடும் யுத்தகால அழிவுவெள்ளம் பெண்ணின் இரத்தத்தால் உருவானதொன்றே' என்ற அமெரிக்கப் பெண் கவிஞர் எடிற் சிற்வெல்லின் கூற்றும் தமிழ் மண்ணும் விதிவிலக்கல்ல.
சுதந்திர இலங்கையின் வரலாற்றுக் கறைபடிந்த அத்தியாயங்கள் இவை. ரயர் கலாச்சாரத்தில் தொடங்கி புதைகுழி அரசியலாக மாறிவிட்ட இக்காலம் வரை, உருக்கப்பட்ட, புதைக்கப்பட்ட உடல்கள் கணக்கற்றவை என்றால் குற்றுயிராகவும் குலையுயிராகவும் தப்பியபோதும் குடும்ப மானத்தைக் காக்க வாய்மூடி மௌனித்தவர்கள் அதைவிட ஏராளம். தமிழ்ச்சி சிந்திய இரத்தத்தின் எழுத்து மூலமான முதற் பதிவுகளிற் சில இவை. 58 அவலத்தை அப்படியே பார்த்த உயிருள்ள சாட்சிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
ஆவணி அமளி தமிழ்ப்பெண் சிதைக்கப்பட்ட, வரலாற்றை கணிசமாய்க் காட்டியது, ஒன்றல்லலு}. இரண்டல்ல 24 சேர்ந்து கர்ப்பிணிப் பெண்ணை சிதைத்ததை ஆழப்படுத்தியது. தனக்கு நேர்ந்த அவலத்தை தானே சொல்லும் மனத்துணிவைப் பெற்றுவிட்ட உயிருள்ள சாட்சிகள் எம்முன்னே இருந்தாலும் முகம் காட்டும் துணிவு இன்னும் அவர்களுக்கு வரவில்லை களங்கப்பட்டவள் என்று கணவனே கைவிட்ட பின்னர் தன்னை இனங்காட்டும் திடம் எப்படி வரும் அவளுக்குலு}?
தொடர்ந்து கறுப்பு யுூலை சாட்சி சொல்ல எவரையும் விட்டு வைக்காத அளவிற்கு மிகவும் கோரமாக சிங்கள இனவெறியர்களால் நடந்தேறச் செய்யப்பட்டது. புத்தனை வணங்கும் மண்ணின் மைந்தர்களை மக்களாக்கி, அன்று இன அழிப்பை மேற்கொண்ட அரசும் அரசின் காவலர்களும், இப்போது நேரடியாகவே களத்தில் இறங்கியபோது தமிழ்ப் பெண்ணின் அவலம் உச்சக்கட்டத்தை அடைந்தது. துப்பாக்கியின் துணைகொண்டு சாதிக்க முடியாதவன் இந்த இழப்பீட்டை தன் உடலால் நிரப்ப முனையும் காடைத்தனத்திற்கு பேர் போன சிறீலங்காவின் அரசியலை உலகம் பார்த்தது. அகிம்சையைப் போதிக்கும் மண்ணின் அடாவடித்தனமா இதுலு}? அல்லது அட்டூழியமே சிங்கள இனவெறி அரசின் கலாசாரம்தானா என்று முகத்தைச் சுழித்தது உலகம்.
'தமிழ்ப் புலிகளை முற்றாக அழித்து தமிழ்ப்பெண்களை சிங்கள சிங்கங்களால் நிரப்புவோம்' 1984இல் யாழ். மண்ணை ஆக்கிரமித்த சிங்கள இராணுவம் தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியபோது எழுப்பிய யுத்தக் கூச்சல் இதுதான். தனி மனித வக்கிரமும் இனத்தையே அழித்துவிடும் அரசியல் தந்திரமும் இணைந்தபோது அப்பாவித் தமிழ்ப் பெண்கள் அலங்கோலப்படுத்தப்பட்டார்கள்.
தென்தமிழீழம்லு} இன அழிப்பை அணுஅணுவாக அனுபவித்த மண் மனித வேட்டையையும் மனிதப் புதைகுழிகளையும் அதிகமதிகமாய் உள்வாங்கிய மண் பொஸ்னியாவில், ருவாண்டாவில், கிழக்கு திமோரில் அரங்கேறிய 'இனச் சுத்திகரிப்பு' சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் அதிகம் பாPட்சித்துப் பார்க்கப்பட்டது மட்டக்களப்பு பெண்களில்தான். வரலாறு இன்று தமிழன் பக்கம் திரும்புவதற்கு வலுச்சேர்த்தவர்கள்தான் அன்று தமிழனுக்கு எதிராக எழுதப்பட்ட இனஅழிப்பு வரலாற்றின் பதிவுகள் ஆயினர். இரண்டாம் ஈழப்போர் காலகட்டத்தில் இன்னும் இன்னும் உரத்து ஒலித்தது மட்டக்களப்பு தமிழ}ச்சியின் குரல்.
சிறீலங்கா பயங்கரவாதத்தின் பெண் அழிப்பு, வேட்டைகள் மூன்றாம் ஈழப்போரில் கிருசாந்தியில் தொடங்கி இப்போது விஜயகலா சிவமணி வரை நீண்டிருக்கின்றது. ஆனாலும் புதிய மாற்றமொன்று வெளித்தெரிகின்றது. மானத்திற்குப் பயந்து மௌனித்திருந்த மனச்சாட்சிகள் மெல்ல மெல்ல வாயைத் திறக்கின்றன. உறங்கிக் கிடந்த உண்மைகள் உரத்துப் பேசப்படுகின்றன. அத்தாட்சிகள் அழிக்கப்பட்டு கருகிய உடல்கள் கதைசொல்லத் தொடங்கிவிட்டன. முகவரிகள் மறைக்கப்பட்டு மூடியிருந்த புதைகுழிகள் தம்வரலாற்றைச் சொல்கின்றன. இன்னும் பல தமது முறைக்காகக் காத்திருக்கின்றன.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் பின்னர் பாதுகாப்பு படையினர் புரிந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்.
1996 செப். 10ம் திகதி திருநெல்வேலியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணொருவர் படையினர் பலரால் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டார்.
1996 செப். 08ம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வாசுகி என்னும் பெண்ணை அவரது வீட்டில் புகுந்த ஆறு படையினர் வல்லுறவிற்குள்ளாக்கி முயற்சித்தபோது அயலவர்களால் காப்பாற்றப்பட்டார்.
1996 மார். 07ம் திகதி தியாவெட்டுவா என்னும் இடத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணை, அவரது கணவனை துப்பாக்கியால் தாக்கிவிட்டு படையினர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தினர்.
1996 பெப்.11ம் திகதி குமரபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய தனலெட்சுமி, 24 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தன்று படையினரால் வல்லுறவுக்குள்ளாக்கிய பின் கொல்லப்பட்டார்.
1996 ஓகஸ்டில் திருகோணமலையைச் சேர்ந்த லக்ஸ்மிப்பிள்ளை எனும் பெண்ணை 03 பொயின்ற் படைமுகாமில் வைத்து வல்லுறவு புரியப்பட்டது பற்றி பகிரங்கமாக கூறியதற்கு பழிவாங்கும் பொருட்டு இருமகன்மார் முன்னிலையில் வைத்து மீண்டும் வல்லுறவு.
1996 மே 19ம் திகதி சரசாலை என்னும் இடத்தில் சிறீரஞ்சினி (18) புவனேஸ்வரி (36) ராஜேஸ்வரி (38) ஆகிய மூவரையும் படையினர் வல்லுறவிற்கு உட்படுத்தியபோது, அவர்கள் எதிர்த்துப் போராடியதால் ஏற்பட்ட காயத்தினால் வைத்தியசாலையில் மரணமடைந்தனர்.
1996 மே 19ம் திகதி கொடிகாமத்தில் தேவாலயத்திற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு.
1995 மே 12ம் திகதி மட்டக்களப்பில் 06 தமிழ்ப் பெண்களை கடத்திச் சென்ற படையினர் மாறி மாறி வல்லுறவு புரிந்தனர்.
1996 செப்.07ம் திகதி கைதடியைச் சேர்ந்த கிருசாந்தி குமாரசாமி (18) இராணுவத்தினரால் வல்லுறவிற்கு பின்கொலை, தேடிச்சென்ற தாயார், சகோதரன், பக்கத்து வீட்டார் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
1996 செப். 30ம் திகதி உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த ரஜனி வேலாயுதபிள்ளை (22) கனடாவுக்கு செல்வதற்காக நண்பியுடன் விடைபெற்றுத் திரும்பியவேளை கோண்டாவில் காவலரணில் படையினரால் தடுக்கப்பட்டு வல்லுறவின் பின் கொலை. சடலம் நிர்வாணமாக தோட்டத்தில் கண்டெடுப்பு.
1997யுூலை 12ம் திகதி அளவையைச் சேர்ந்த சந்திரகலா கிருஸ்ணபிள்ளை (20) என்ற ஆசிரியையை தாக்கிய படையினர் கூட்டு வல்லுறவு புரிந்துள்ளனர்.
1997 ஒக்19ம் திகதி வாழைச்சேனையைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ். ராஜினி துறைமுகப் படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இவர் இப்போது உடல் உளபாதிப்புற்ற நிலையில் உள்ளார்.
1997ஒக் 05ம் திகதி மாவடிவேம்பு என்னும் இடத்தைச் சேர்ந்த சின்னப்பு பாக்கியம் (37) என்ற தாய் படையினரின் பாலியல் வல்லுறவிற்கு ஆளானார்.
1997யுூலையில் அராலி என்னும் இடத்தைச் சேர்ந்த விஜயராணி (17) பாடசாலை வரும்போது படையினரால் கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு தற்போது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்.
1997 மே19ம் திகதி மட்டுவில் வடக்கை சேர்ந்த கிருபாதேவி (37) இவரின் கணவரையும் இருபிள்ளைகளையும் வெளியே விரட்டிவிட்டு அவரது வீட்டில் வைத்து படையினர் பாலியல் வல்லுறவு.
1997 செப். 05ம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த ஆறு வயதுடைய பாலந்தி என்னும் சிறுமியை படையினர் கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கியதால் ஆபத்தான நிலையில் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
1997 நவம்06ம் திகதி பளையைச் சேர்ந்த ஸியாமளா (17) என்னும் மாணவி இராணுவ சிப்பாயால் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டார்.
1998 யுூன் 22ம் திகதி பனிச்சங்கேணியைச் சேர்ந்த காளிக்குட்டி ராகினி (23) படையினரால் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார்.
1998 யுூலை 01ம்திகதி திருநெல்வேலியைச் சேர்ந்த நாகலிங்கம் பவானி (48) இவரின் வீட்டுக்கருகில் இருந்த காவலரண் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதன் பின்னர் கொல்லப்பட்டார்.
1996 ஏப்.29ம் திகதி கச்சாய் வீதி நாவற்குழியில் குடிசையொன்றிற்குள் புகுந்த படையினர் கணவனை வெளியில் இழுத்துவந்து கொலைசெய்துவிட்டு மனைவியை வல்லுறவிற்குள்ளாக்கினர்.
1996 யுூன் 17ம் திகதி மந்துவிலைச் சேர்ந்த புவனேஸ்வரியும் (36) அவரது சகோதரியும், சிவகுரு, நாகலிங்கம், ரவீந்திரன் ஆகிய மூவரையும் கொலை செய்த படையினரால் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டனர்.
1996 மே 04ம் திகதி கச்சாயைச் சேர்ந்த புஸ்பமலர் (22) கணவனுக்கு தேனீர் கொண்டு வயலுக்குச் சென்ற வேளை வயலில் வைத்து படையினரால் இவரது கணவன் கொல்லப்பட்டதுடன், இவரும் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டார். இருவரின் சடலமும் வயலிலிருந்து மீட்கப்பட்டது.
1996 யுூலையில் மந்துவிலில் சிவில் உடையில் வீடொன்றுக்குள் புகுந்த படையினர் பெண்ணை வெளியில் இழுத்துவந்து வல்லுறவு புரிந்தனர்.
1996 ஒக் 09ம் திகதி கெருடாவில் என்னும் இடத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி கார்த்திகேசன் (22) எனும் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய படையினர் அவரின் தந்தையையும் வாளால் வெட்டிக்கொலைசெய்தனர்.
1998 யுூலை 16ம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நாகலிங்கம் பவானி (46) என்னும் பெண்ணையும் இன்னொருவரையும் படையினர் வல்லுறவின் பின் கொலை செய்தனர். சடலங்கள் நிர்வாணமான நிலையில் திருநெல்வேலியில் கண்டெடுப்பு.
1998 மே 07ம் திகதி நொச்சிக்குளம் மன்னாரைச் சேர்ந்த 35 வயதுடைய மனநோயாளியான பெண்ணொருவரை படையினர் மன நோயாளி என்று தெரிந்தும் வல்லுறவு.
1998 ஒக் 27ம் திகதி அரியாலையைச் சேர்ந்த பாலகுமார் அஜந்தனா (17) பொலிசாரால் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு இரத்தக்கசிவுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
1998 மார்ச் 16ம் திகதி மீசாலையைச் சேர்ந்த செல்வராணி (28) நண்பியைச் சந்திக்கச் சென்றவேளை வீதியில் வைத்து இராணுவத்தினரால் கூட்டு பாலியல் வல்லுறவு.
1998 மார்ச் 15ம் திகதி திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று மாதக் கர்ப்பிணியொருவர் பொலிஸ் கான்ஸ்டபிளால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டார்.
1997 ஒக் 27ம் திகதி சொறிக்கல்முனையைச் சேர்ந்த சவரி மெற்றலின் (31) எஸ்.டி.எப் விசேட படையினரால் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.
1997 டிச.25ம் திகதி விடத்தல்தீவைச் சேர்ந்த கந்தையா அமுதா பொலிசாரால் பாலியல் வல்லுறவு.
1997 நவ. 23ம் திகதி நாயன்மார்க்கட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை கைகால்களை கட்டிய நிலையில் பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இராணுவத்தினர் சுயநினைவிழந்த நிலையில் விட்டுச்சென்றனர்.
1997 ஒக். 28ம் திகதி மந்திகையைச் சேர்ந்த 40 வயதுப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய படையினர் பாலியல் சித்திரவதைகளை மேற்கொண்டனர்.
1997 ஒக் 16ம் திகதி அம்பாறையைச் சேர்ந்த தங்கநாயகி (49) எனும் பெண்ணை பொலிசாரும் ஊர்காவற்படையினரும் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் பெண்குறியை வெட்டி சிதைத்து கொலைசெய்துள்ளதாக அவரின் மகன் தெரிவிப்பு.
1997 மே 17ம் திகதி அம்பாறையைச் சேர்ந்த முருகேசப்பிள்ளை கோணேஸ்வரியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய பொலிசார், அவரின் பெண்குறியினுள் கிரனைட்டை திணித்து வெடிக்கவைத்து படுகொலை செய்தனர்.
1997 யுூலை 17ம் திகதி அராலி தெற்கைச் சேர்ந்த 17 வயது மாணவியை மோசமாக தாக்கி மயக்கமடைந்த நிலையில் பாலியல் வல்லுறவு.
1997 மார்ச். 17ம் திகதி மயிலம்பாவெளி மட்டக்களப்பைச் சேர்ந்த வேலன் ராசம்மா (39) வேலன் வசந்தா (28) ஆகிய இரு சகோதரிகளை நான்கு படையினர் வீட்டினுள் புகுந்து மாறி மாறி பாலியல் வல்லுறவு.
1997 டிச. 31ம் திகதி மண்டூரைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணொருவர் எஸ்.டி.எப். விசேட படையினரால் தாக்கப்பட்டு காயங்களுடன் பாலியல் வல்லுறவு.
1996 நவ. 22ம் திகதி அச்சுவேலியைச் சேர்ந்த செல்வராஜா தேனுஜா (10) என்ற சிறுமி மீது புத்தூர் காவலரணில் இருந்த படையினர் பாலியல் வல்லுறவு.
1996 யுூலை 31ம் திகதி மன்னார் பள்ளிமுனையைச் சேர்ந்த இடா காமலிற்றா பள்ளிமுனை இராணுவத்தினரால் வல்லுறவு.
1999 டிச.17ம் திகதி மன்னாரில் வைத்து திருமதி நந்தகுமார் விஜியகலா (22) நாசகாரத் தடுப்புப் பிரிவினரால் பாலியல் வல்லுறவும் சித்திரவதையும்.
1999 டிச.28ம் திகதி புங்குடுதீவைச் சேர்ந்த திருமதி சரவணபவான் சாரதாம்பாள் (20) நான்கு கடற்படைச் சிப்பாய்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை.
2000 யுூன் 21ம் திகதி நீர்கொழும்பில் யோகலிங்கம் விஜிதா பொலிசாரால் சோதனைச் சாவடியில் வைத்து பாலியல் துன்புறுத்தலும் சித்திரவதையும்.
2001 பெப். 01ம் திகதி செட்டிப்பாழையத்தைச் சேர்ந்த கி. ஆனந்தி (28) எஸ்.ரி.எப். படையினரால் பாலியல் வல்லுறவு.
2001 மார்ச்.19ம் திகதி உப்புக்குளம் மன்னாரைச் சேர்ந்த சின்னத்தம்பி சிவமணி (22) கடற்படையினராலும் சி.எஸ்.யு படைப்பிரிவினராலும் பாலியல் வல்லுறவு.
2001 மே 19ம் திகதி பம்பலப்ப}ட்டியைச் சேர்ந்த சிவரஜனி, விமலாதேவி ஆகிய இருவரும் சிங்கள விடுதி உரிமையாளராலும் பொலிசாராலும் தாக்கப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவு.
2001 யுூன் 24ம் திகதி மருதானையில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் பொலிசாராலும் இராணுவத்தினராலும் பாலியல் வல்லுறவு.
சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் நடந்திருக்கும் எவ வளவோ சம்பவங்களில் வெளியில் வந்திருப்பவை மட்டுமே இவை. இப்படியாக ஆதாரங்களும் சாட்சிகளும் குவிந்து கிடக்கும்போது, எதுவுமே நடக்கவில்லை என்று தெரிவிப்பதால் அவற்றை மறைத்துவிட முடியாது என்பது ஒருபுறம் இருக்க, இவை மட்டுமல்ல இதைவிட மோசமானவை இனியும் நடக்க இடமுண்டு எனும் அச்சுறுத்தலையே விடுப்பதாக அமைகின்றது, எனவேதான் விழிப்படைந்து விட்டது தமிழ்ப் பெண்குலம்.
ஓங்கி ஒலிக்கும் குரல் கிருசாந்தி விவகாரத்துடன் தொடங்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக குரல்கள் ஒன்றுபட்டன. இலங்கை வரலாற்றில் முதன் முதலாக இப்போதுதான் தனித்த வாக்குமூலங்களாகவும், நீதியைப் பெற்றுத் தராத வழக்குகளாகவும் இருந்த நிலைமாறி இன்று இவை அநியாயத்தைத் தட்டிக்கேட்கும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களாகவும் பரிணாமம் பெற்றிருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக பாதிப்பை ஏற்படுத்திய ஆணினத்திலிருந்து எதிர்ப்புக் குரல்கள் எழும்புகின்றன. தன்னினத்தின் பாதிப்புக்காக குரலெழுப்பும் மனித உணர்வுகூட, இல்லாத பேரினவாதத்திற்கு துணைபோகும் பெண்ணியவாதிகளை சாட ஒட்டுமொத்தமாக புறப்பட்டு விட்டனவாய் மூடி மௌனித்ததுதானே வக்கிரம் பிடித்தவனுக்கு வாய்ப்பைக் கூட்டியது.
இது ஓர் ஆரோக்கியமான மாற்றம். தமிழன் பக்கம் திரும்பும் வரலாற்றில் பெண்ணின் மேன்நிலை பார்த்து வியக்கும் மாற்றம். தனித்தனி மனக்குமுறல்கள் ஒன்றாகி உறுமலாய் உரத்து ஒலிக்கின்ற மாற்றம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி இருந்தவைகள் அடம்பன் கொடியாய் திரளும் மாற்றம். ஆண் பெண் என்று தனிப்பாதை தவிர்த்து மனிதம் என்ற பொதுப்பாதையில் ஆண்குரலும் பெண்குரலும் சேர்ந்து ஒலிக்கும் மாற்றம். பெண்ணுக்காய் நீதி கேட்டு நிரம்பும் பக்கங்களில் ஆணின் கரங்களே அதிகமாய் இருக்கும் மாற்றம். தமிழீழ மண்ணில் பாலியல் வல்லுறவுக்கு இறந்த காலம் இருந்தது போல் நிகழ்காலம் இருப்பதுபோல் எதிர்காலம் ஒன்றை இல்லாமல் தடுக்க ஒன்றாய் உழைக்கும் மாற்றம் இது.
இன ஒடுக்குமுறை அடங்கிக் கிடந்த தமிழனை உசுப்பிவிட்டது.
அந்த விழிப்புணர்வின் வெளிப்பாடே தமிழீழ பெண்கள் மேம்பாட்டு நிறுவனம் விடுக்கும் எச்சரிக்கையுடனான கண்டன அறிக்கை.
சிங்களதேசமே ஒன்றை விளங்கிக் கொள் அறிவியல் தொழிநுட்ப வளர்ச்சியில் மேலோங்கி, மனித நேயம் மனித உரிமைகளை தமது நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பாதுகாக்கவென சட்டங்களும் அமைப்புக்களும் போட்டும் கூட பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் முதன்மைப் பதிவுகளைத் தமதாக்கிக் கொண்டிருக்கும் சில தேசங்களைப் போன்றதல்ல இந்த மண். அதுபோல கொலை, களவு, கலவரம் போல பாலியல் வல்லுறவை ஒரு குற்றமாகக் கருத முடியாது என்று கூறுகின்ற காவல்துறையும் எம்மிடம் இல்லை. பாலியல் வல்லுறவை பயங்கர குற்றமாகக் கருதி அதற்கு அதியுச்ச தண்டனை வழங்கும் மண் இது. யுத்தத்தின் பாதிப்புக்களின்றி அமைதியில் வாழ்ந்த காலத்திலும் சரி, யுத்தக் கொடுமைகளில் நலிந்து போனபோதும் சரி இந்த மண்ணில் விரல்விட்டு எண்ணிவிடக்கூட பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெற்றதாக வரலாறு இல்லை. தமிழ்ப் பெண்ணுக்கு இழைக்கப்படும் இத்தகைய அநீதிகள் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உலகம் இன்று நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அரசே! வெட்கக்கேட்டை வெளியில் சொல்ல மாட்டார்கள் என்ற மெத்தனத்தில் இனியும் தமிழ்ப் பெண்கள் மீது உனது வக்கிரங்களைக் காட்டலாம் என்று எண்ணாதே. ஒரு பெண்ணில் கைவைத்தால் ஓராயிரம் குரல்களும் கரங்களும் இங்கு எழும். அநீதிகளைத் தட்டிக்கேட்கும் மனித உரிமை விழுமியங்களைப் பேணுபவர்களுக்கு சரியான தரவுகளைத் தந்து நிற்கும் தன்னினத்தையே பாதுகாக்கும் மன உணர்வையும் மனோதிடத்தையும் தமிழ்ப் பெண்ணிடம் மட்டுமன்றி இந்த மண்ணில் வாழும் ஒவ வொரு சமூகப் பிரஜையிடமும் கட்டியெழுப்பிவிட்டோம். அடக்குமுறைகளும் அராஜகங்களும் அதிககாலம் அரசாட்சி செய்ததாக எந்த ஒரு வரலாறும் இல்லை.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)