11-12-2005, 09:00 AM
வியாசன் Wrote:மே 13இ 1997-ல் ஆரம்பிக்கப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை 18 மாதங்களிற்கு மேலாக தொடர்ந்து இடம்பெற்றது என்பதோடுஇ இதில் ஆக்கிரமிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான சதுரமைல் பிரதேசத்தில் பல பாரிய இராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அமைக்கப்பட்ட இராணுவத் தளங்கள்இ கட்டளை மையங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பாரிய ஆயுத தளபாடங்கள்இ நவீன தொலைதொடர்பு சாதனங்கள்இ ராடார்கள் மற்றும் யுத்த டாங்கிகள் உள்ளிட்ட வாகனங்களைக் கூட கைவிட்டு சண்டை தொடங்கியதும் இராணுவத்தினர் பின் வாங்கி ஓடினர் என்பதும்இ
மேற்படி ஜெயசிக்குறு ஆயுத தளபாடக் கையிருப்பு மற்றும் ஆனையிறவுத் தளபாடக் கையிருப்பு என்பன சிறிலங்கா இராணுவத்தின் ஒட்டுமொத்த ஆயுத வலுவில் 40 விழுக்காடு தொகையைக் கொண்டிருந்தவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அது எல்லாம் பழய ஆயுதங்கள்.... அவயளே எறிங்சுபோட்டு புதுசு வாங்க இருந்தவை... அதான் தேவையில்லை எண்டு விட்டுட்டுப் போனவை..... .
(விழுந்தாலும் மீசையில மண்படாதில்ல)
::

