11-12-2005, 08:18 AM
tamilini Wrote:Quote:புரட்சிகள் தேவைதான் அதனைப் பெண்கள் தம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சீதனம் கொடுப்பதா எனச் சீறி எழும் பெண்கள் தம் ஆண் சகோதரர்கள் வாங்கும் போது மட்டும் ஏன் எதிர்பதில்லை. வரும் பணம் இவர்களின் வங்கிக் கணக்கை நிரப்புவதாலோ?????
இது சரியான கேள்வி.. ஆனால் எத்தனை பேர் அப்படி தங்கள் சகோதரர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் இதை எதிர்க்க வேண்டும். அதே வேளை வெறுமனே தலையை ஆட்டி தாலியைக்கட்டிக்கொள்வதோடு நின்றுவிடாமல் ஆண்களும் இதை சாதிக்கலாம் அல்லவா?? ஏன் என்றால் அதோடு சம்பந்தப்பட்டது வாழப்போகும் ஆணும் பெண்ணுமே. அவர்கள் இருவரும் சீதனம் கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லை என்று உறுதியாய் நின்றால் யார் என்ன செய்துவிட முடியும். தன் வங்கிக்கணக்கை நிரப்ப நினைக்கும் தாயென்ன சகோதரி என்ன ஒன்றும் செய்துவிட முடியாது தானே. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சில இடத்தில்... மிகச் சமீபத்தில் கூட.. சகோதரிகளே உனக்கு சீதனம் கூட எனக்கு குறைய என்று அடிப்பட்டிருக்குதுகள்...! அவையும் பெண்கள் தானே...! ஆண்கள் மட்டுமில்ல...பெண்களும் மனதளவில் உறுதியா மாறனும்..கொடுக்கம்...கொடுக்கிறதை வாங்கம் (இப்ப சீதனம்..பல இடங்களில் நேரடியாக..ஆண்களுக்கு கொடுக்கிறதில்லை..பெண்ணுக்கு கொடுக்கிறம் என்று கொடுக்கப்படுகிறது..! அவைட வங்கிக் கணக்கே நிரப்பப்படுகிறது..! அதை பெரும்பாலான பெண்கள் ஆதரிக்கினம்...! அதுகூட மறைமுகமா சீதனம் வளரத்தான் இடமளிக்குது..! இவையும் கண்டிக்கப்படனும்..! தாழ்வென்று காட்டப்படனும்..!) குறிப்பா சீதனத் தடைச்சட்டம் வந்தாப் பிறகு..நன்கொடை என்றும் கொடுத்த பெண் வீட்டார் இருக்கினம்..அந்தளவுக்கு ஏன் கட்டாயப்படுத்தினம்...ஆண்களை...! அவையையும் கொஞ்சம் கண்டிக்கனும்...!
எங்கடை ஆக்கள் லேசான ஆக்களில்ல... தாயகத்தில காணி விற்றா புலிகளுக்கு பங்கு கொடுக்கனும் என்று..புலத்தில இருந்து ரகசியமா எழுதி மாத்திற ஆக்கள்..எங்க கள்ளம் செய்யலாம்...எப்படி சட்டத்தை ஏய்க்கலாம்...என்றதில...எங்கட சனம் கெட்டிக்காரர்..! ஒரு பக்கம் புரட்சி முழக்கம் இட்டு..பொழுது கழிச்சிட்டு இன்னொரு பக்கம்...எல்லாம் சர்வ சாதாரணமா செய்வினம்...சோ...எங்கடை ஆக்களுக்கு ஒரு விசயத்தை சொல்லிப் புரிய வைக்கிறது ரெம்ப கஸ்டம்..! தமிழினி..முயன்றிருக்காங்க..பாப்பம் என்ன நடக்குது என்று..! நல்லது நடந்தாச் சரி..சந்தோசம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

