11-11-2005, 11:23 PM
poonai_kuddy Wrote:கறுமம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்... கறுமியெண்டு பாவிக்கிறவையோ??? அப்ப கறுமன் எண்டும் சொல்லிருக்கா????
கறுமி என்பது பாவனையில் உள்ள சொல்தான்..! தெரியாட்டில் அகராதியைப் புரட்டவும்
"படைப்பது புதிதென்று கட்டறுந்து............."
எண்டுறத விட கட்டறுத்து தான் பொருத்தமான சொல்லு...நீங்கள் சொல்ல வந்த விசயத்துக்கக்கா...
கட்டறுவதற்கு அதுவும் ஒரு காரணம்....! இன்னும் காரணங்கள் இருக்கு தேவையா...??!
கருத்தடை தாண்டி
பிறந்தது எப்படி
வியந்துன்னை
வீதியில் விட்டதாலோ...??!
இந்த வசனம் ஒழுங்கா அமையலையே அக்கா.....இதின்ர பொருள விளங்கிக்கொள்ளுறதெண்டால் வீதியில் விட்டாதால் கருத்தடை தாண்டி பிறந்தாள் எண்டு தான் விளங்கிக்கொள்ளலாம்... ஆனா நீங்க சொல் வந்த விசயம் அதுக்கு எதிர்மறையானது......
கருத்தடை போட்டும்...அதையும் தாண்டி பிறந்ததை வியந்து...வீதியில் விட்டிருக்கு...( அதாவது வேண்டா வெறுப்பாகப் பிறந்ததாக.....!)
காரணம் கூறியே
தரணியெங்கும் பறக்கும் அவள்
தனிமையிலுன்னை விட்டதாலோ...??!
எண்டு முதலில சொல்லுறீங்கள்...
பிறகு....
சாதுரியமாய் சதி பண்ணி
சாதித்து முடித்ததும்
சகதியில் வெற்றுடலாய்
வீழ்ந்த கொடுமை கண்டதாலோ...??!
இப்பிடி சொல்லுறீங்கள்... ஒண்டுக்கொண்டு முரணா இருக்குதே....
இரண்டும் வேறு வேறு ஆட்களுக்கு வேறு வேறு சந்தர்ப்பங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கு.. குழப்பாமல் படியுங்கோ...!
கண்ணுக்கு கருத்துக்கு
சுதந்திரம் என்று
காரிகை உன்னுடல்
கலையென்று கவிபாடி
களிக்கும் கறுமங்கள்
தலைவிரித்தாடுதல் கண்டதாலோ...??!
உண்மைதானக்கா.....சினமா நடிகையின்ர படத்த போட்ட கலையெண்டு ரசிக்கிறாங்கள்....கனவில கற்பழிக்கிறாங்கள்.....இதில பெடியங்கள் மட்டுமில்ல... பெட்டையளும் நடிகையளின்ர படத்த போட்டு கலையெண்டு ரசிக்கினம்...<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
பெட்டையளும் ரசிக்கினம் எண்டா..அதில கலை என்று ஒன்றிருக்கு...ஆனா பெட்டையளை பொடியள் மட்டும் அந்தரங்கமா ரசிக்கினம் எண்டா...அதில கலை இல்லை...கண்றாவிதான் இருக்கு...! அதைக் கவிதைல வேற காட்டணுமோ...???! அதுக்கு வெளிப்படை என்ற புகழாரம் வேற...! வெளிப்படையத்தான் மறைச்சிருக்கு..பிறகு அதுக்க என்ன வெளிப்படை வேண்டி இருக்கு...???!
சினிமா நடிகையோ.. நடிகனோ... கலை என்பது
அது உங்களைப் பொறுத்தது..! சினிமா நடிகர் நடிகைகள் ஏதோ கலையைப் படைக்கிறார்கள்..அவர்கள் கலையல்ல..!
கண்ணதைத் துடைத்திடு
உடனடி..
இதில உடனடி எண்டுறது வாசிக்கும் போது வேற பொருளக் குடுக்கும்....... கண்ணதைத் துடைத்திடடி உடனே எண்டுறது தான் நீங்கள் சொல்ல வாறது... இது இரண்டாந்தடவை வாசிக்கேக்கத் தான் விளங்கும்... சிலபேருக்கு கனதரம் வாசிச்ச பிறகுதான் நீங்கள் சொல்லவாறதென்னெண்டு விளங்குமக்கா.... முதல் தடவை வாசிக்கேக்க....
கூர்ந்து வாசிக்கத்தான் அப்படி எழுதிறது...! அது கவி நடையில் வழமை..!
கவிதை வரிகள் ஒண்டோட ஒண்டு தொடர்பில்லாமல்.... சிலநேரங்களில ஒண்டுக்கொண்டு முரணாக இருக்கு.... ஒவ்வொரு வரியும் தனிச்சு வாசிக்கேக்கயுமஇ பொருள் தரணும்.... முழுக்கவிதையோட சேர்த்து வாசிக்கேக்கயும் ஒத்துவரணும்... இல்லாட்டி கவிதை எண்டுற எல்லைக்குள்ள வராது...
கவி வரிகளை ஒழுங்கா கோர்த்து வாசிக்கத் தெரியாட்டி முரண்படுவதாகத் தான் தெரியும்...! இல்ல ஒரு வரிக்கு பொருள் புரியாட்டிலும்..விளங்காது கவிதை...முரண்படுறதாத்தான் தெரியும்..! படத்தைப் பார்த்தபடி மொத்தக் கவிதையையும் படிக்க பொருள் புரியும்...! கவிதைக்கு எது எல்லை...அதைச் சொன்னா உபயோகமாக இருக்கும்..நீங்கள் நீங்கள் எழுதுவற்றையும் கவிதை இல்லை என்று வரையறுக்க அதிக நேரம் எடுக்காது..எதுக்கும் தெளிவான நிதானப் பார்வை அவசியம்..! காழ்புணர்ச்சில வாறது விமர்சனம் அல்ல..! விரோதம்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->