11-11-2005, 10:46 PM
Quote:அளிக்கபடாத வாக்கை கள்ள ஓட்டாக மாற்றுவதை விட அளிக்கப்பட்ட வாக்கை கள்ள ஓட்டாக மாற்றுவது நிச்சயம் கடினமான ஒன்றுதான்
எப்படி அய்யா அது கடினம் வாக்கழித்த ஒவ்வொருவரும் உரிமைகோரத பட்சத்தில்? வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வாக்குகளை எண்ணும் நிலையம் வரை கொண்டு செல்பவர்கள் பொறுப்பாக இருக்கமாட்டார்கள். வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பு வரிசையில் நின்று நீங்கள் உருவாக்கும் ஆதாரத்தை வாக்குகள் எண்ணும் நிலையம் வரை உங்களால் பாதுகாக்க முடியுமா?
செல்லாத வாக்குகளை வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று அளிப்பதன் மூலம் குறிப்பிட்ட வாக்கு அளிக்கப்பட்டுவிடும். ஆதலால் கள்ள வாக்கு அளிப்பதற்கு மேலதிக வாக்குச்சீட்டுக்கள் வேண்டும். அப்படி அவற்றை எடுத்தால் கூட வாக்கு எண்ணும் போது ஒரு குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் உள்ள வாக்காளரின் எண்ணிக்கை எவ்வளவு அதில் எவ்வளவு மொத்தவாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்பன போன்ற தரவுகள் மூலம் கள்ளவாக்குகள் கண்டுபிடிக்கப்படும். அவ்வாறு கண்டுபிடிக்கப்படுமாயின் அத்தொகுதியின் முடிவு ஒத்திவைக்கப்பட்டு மீள் வாக்களிப்பிற்கு அழைப்பு விடுக்கப்படும்.
இதன்மூலம் தமிழ் மக்களாகிய நாம் எமக்கு இத்தேர்தலில் உள்ள வெறுப்பைக்காட்டலாம். எம் தீர்விற்கு ஒரு அழுத்தம் கொடுக்கலாம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

