Yarl Forum

Full Version: What is the LTTE up to?
You're currently viewing a stripped down version of our content. View the full version with proper formatting.
ரணில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தடைப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து இடைக்கால நிர்வாக சபை சார்ந்த பேச்சுவார்த்தையை தொடர்வது, வடக்குக் கிழக்கு மீள்கட்டுமானம், இனப்பிரச்சனைக்கான தீர்வின் அடிப்படை தொடர்பாக தெளிவாக எந்த நிலைப்பாட்டையும் வைக்காத நிலையில் மகிந்த போல அப்பட்டமாக இனவாதம் பேசவில்லை என்ற ஒரு காரணத்துக்கா தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்குகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?

http://www.tamilguardian.com/beta/news_det....asp?newsid=353
சத்தியமாய் பிழையானது...!

பேசாமல் வாக்குக்களை யாருக்கும் வளங்காமல் விடலாம்... ஆனா அத்தனை வாக்குக்களும் கள்ள வோட்டுக்களாகும்...பிரதமருக்கு சாதகமாகும்.. எப்பிடியாவது. ராஜபக்ஷ ஐயா ஜனாதிபதியாய் வந்தாச் சரி.........
தல, அப்ப என்ன செய்ய வேணும் என்றியள்?
கள்ள வாக்குகளாகிடும் என்பதால் புறக்கணிக்க கூடாதா?
குறுக்ஸ்..!
தேர்தலைப் புறக்கணிக்காட்டால் தமிழரின் பெரும்பான்மை வாக்குக்கள் பெறும் ஜனாதிபதியோ அல்லது வேட்பாளர்... தமிழர்களினால் அங்கீகரிக்கப் பட்டவர் ஆகிவிடுவார்... அவர் சொல்வது தான் சரி எண்ற அழுத்தம் உருவாகும்...

வேண்டுமானால் வாக்குச் சாவடிக்குப் போய் வாக்குகளைச் செல்லாதவை ஆக்கலாம்... ஆனால் இந்த செயலை மக்களிடம் வெளிப்படையாய் கோருவது புத்திசாலித்தனம் அல்ல... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

பொறுத்துப் பாப்பம் நம்மவர்களின் முடிவு என்ன எண்டு...
தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் தலை சொன்னதுபோல செல்லாத வாக்குகளாக மாற்றுவதுதான் சிறந்தது. அப்படி செய்யாமல் புறக்கணித்தால் நிச்சயம் அவை கள்ள ஓட்டுக்களாக மாற்றப்பட வழி உண்டு என்பதுடன் போடப்படும் கொஞ்ச ஓட்டுகளும் முழு தமிழ்மக்களின் ஓட்டுகளாக சித்தரிக்கப்படும்.
செல்லாத வாக்குகளை கள்ள வாக்குகளாக மாத்துறது கஷ்டம் எண்டு யார் சொன்னது? செல்லாத வாக்குகளை அளித்த ஒவ்வொருவரும் உரிமை கோரப்போகிறார்களா தாங்கள் அவ்வாறு அளித்ததாக?
அளிக்கபடாத வாக்கை கள்ள ஓட்டாக மாற்றுவதை விட அளிக்கப்பட்ட வாக்கை கள்ள ஓட்டாக மாற்றுவது நிச்சயம் கடினமான ஒன்றுதான்
kurukaalapoovan Wrote:ரணில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தடைப்பட்ட இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து இடைக்கால நிர்வாக சபை சார்ந்த பேச்சுவார்த்தையை தொடர்வது, வடக்குக் கிழக்கு மீள்கட்டுமானம், இனப்பிரச்சனைக்கான தீர்வின் அடிப்படை தொடர்பாக தெளிவாக எந்த நிலைப்பாட்டையும் வைக்காத நிலையில் மகிந்த போல அப்பட்டமாக இனவாதம் பேசவில்லை என்ற ஒரு காரணத்துக்கா தமிழ் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்குகளை வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியா?
http://www.tamilguardian.com/beta/news_d...newsid=353

ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச ஆரம்பித்த சமயத்தில் ரணிலுக்கு வாக்களிப்பது நல்லது என்ற கருத்தையே கொண்டிருந்தேன். ஆனால் தொடர்ந்து யாழில் இணைப்பட்ட மற்றும் இணையதளங்களில் வெளிவந்த கருத்துகக்ளை படித்த போது அது தவறு என்பது புரிந்தது.

செய்தியை தனியே ஆங்கிலத்தில் இணைக்காமல் அதனை அடிப்படையாக வைத்து விவாதிக்க ஆரம்பித்தமைக்கு நன்றி குறுக்ஸ்
நீர் நன்றி சொல்லி என்ன உவர் தலா அங்கைபோய் பொரிய தொகை ஒண்டை ரணிலிட்டை வேண்டி போட்டு வந்து இஞ்சை கதைவிடுறார் செல்லாத வாக்குகளாக்காதேங்கோ எண்டு. உவருக்கு கார்ஸ்கில்றவுண்டெபவுட்டில வைச்சு பச்சை மட்டை அடி போட வேணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Mathan Wrote:அளிக்கபடாத வாக்கை கள்ள ஓட்டாக மாற்றுவதை விட அளிக்கப்பட்ட வாக்கை கள்ள ஓட்டாக மாற்றுவது நிச்சயம் கடினமான ஒன்றுதான்

எப்படி அய்யா அது கடினம் வாக்கழித்த ஒவ்வொருவரும் உரிமைகோரத பட்சத்தில்? வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வாக்குகளை எண்ணும் நிலையம் வரை கொண்டு செல்பவர்கள் பொறுப்பாக இருக்கமாட்டார்கள். வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பு வரிசையில் நின்று நீங்கள் உருவாக்கும் ஆதாரத்தை வாக்குகள் எண்ணும் நிலையம் வரை உங்களால் பாதுகாக்க முடியுமா?
ஒரு கும்பலை வைத்து பல வாக்குசாடிகளிலும் வாக்களிகாதவர்களின் பெயரில் வாக்குகளை குத்துவது இலகுவான ஒன்றுதான். ஆனால் வாக்குகள் செல்லாத ஓட்டுக்களாக்கபடும் போது அவற்றை கள்ள ஓட்டுக்களாக மாற்றுவதற்கு புதிய வாக்குசீட்டுக்கள் வேண்டும், வாக்கு பெட்டிகளை பாதுக்காப்போரின் ஒத்துழைப்பு வேண்டும். பெரிய அளவிலான ஒத்துழைபுடனேயே இந்த முறையில் கள்ள ஓட்டு குத்தலாம்.
kurukaalapoovan Wrote:நீர் நன்றி சொல்லி என்ன உவர் தலா அங்கைபோய் பொரிய தொகை ஒண்டை ரணிலிட்டை வேண்டி போட்டு வந்து இஞ்சை கதைவிடுறார் செல்லாத வாக்குகளாக்காதேங்கோ எண்டு. உவருக்கு கார்ஸ்கில்றவுண்டெபவுட்டில வைச்சு பச்சை மட்டை அடி போட வேணும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்களே என்னைக் காட்டிக் குடுப்பீங்க போல கிடக்கு... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஊரிலயும் ரணிலுக்குப் போடுவதிலும் பார்க்க... போடாமல் விடலாம் எண்ற றீதியான கருத்துக்கள்தான் இருக்கு... (2 நாட்களுக்கு மேல நான் அங்கு தங்க இல்லை ஆகவே சரியான கருத்து என்ன எண்டு சரியாய்ப் புரிய இல்லை)

ராஜபக்ஷ வந்தாலும் ரணில் வரக்கூடாது எண்ட ரீதியில்தான் நிறையப்பேர் சொன்னார்கள்... அதுக்கான காரணங்கள் (களத்தில் சொல்ல உகந்ததல்ல) நியாயமானவையாயும் உள்ளது...
Quote:அளிக்கபடாத வாக்கை கள்ள ஓட்டாக மாற்றுவதை விட அளிக்கப்பட்ட வாக்கை கள்ள ஓட்டாக மாற்றுவது நிச்சயம் கடினமான ஒன்றுதான்

எப்படி அய்யா அது கடினம் வாக்கழித்த ஒவ்வொருவரும் உரிமைகோரத பட்சத்தில்? வாக்குப்பெட்டிகளை பாதுகாத்து வாக்குகளை எண்ணும் நிலையம் வரை கொண்டு செல்பவர்கள் பொறுப்பாக இருக்கமாட்டார்கள். வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பு வரிசையில் நின்று நீங்கள் உருவாக்கும் ஆதாரத்தை வாக்குகள் எண்ணும் நிலையம் வரை உங்களால் பாதுகாக்க முடியுமா?



செல்லாத வாக்குகளை வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று அளிப்பதன் மூலம் குறிப்பிட்ட வாக்கு அளிக்கப்பட்டுவிடும். ஆதலால் கள்ள வாக்கு அளிப்பதற்கு மேலதிக வாக்குச்சீட்டுக்கள் வேண்டும். அப்படி அவற்றை எடுத்தால் கூட வாக்கு எண்ணும் போது ஒரு குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையத்தில் உள்ள வாக்காளரின் எண்ணிக்கை எவ்வளவு அதில் எவ்வளவு மொத்தவாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்பன போன்ற தரவுகள் மூலம் கள்ளவாக்குகள் கண்டுபிடிக்கப்படும். அவ்வாறு கண்டுபிடிக்கப்படுமாயின் அத்தொகுதியின் முடிவு ஒத்திவைக்கப்பட்டு மீள் வாக்களிப்பிற்கு அழைப்பு விடுக்கப்படும்.

இதன்மூலம் தமிழ் மக்களாகிய நாம் எமக்கு இத்தேர்தலில் உள்ள வெறுப்பைக்காட்டலாம். எம் தீர்விற்கு ஒரு அழுத்தம் கொடுக்கலாம்.