11-11-2005, 09:09 PM
Eelavan Wrote:யார் சொன்னது ஈழத்தில் சாதிபார்க்கும் முறை அழிந்துவிட்டதென்றுஅதுதானே!!! யார் சொன்னது???? இவ்வாறு விளம்பரம் கொடுக்கின்றவர்களிற்கு பாரதி என்னும் பெயரில் அமைப்பொன்றினை தொடங்கி பச்சமட்டை கொடுக்கவேண்டும். இந்த விடயத்தை பொறுத்தவரையில் புலம்பெயர் தமிழர்களை போற்றலாம், பலரிடம் இங்கே சாதிபார்க்கும் கேவலமான பளக்கம் இருந்தாலும், ஒரு குறிப்பிட்டத்தக்க மக்கள் இவ்வாறான செயல்களை முறியடித்து வெற்றிநடை போடுகின்றனர்.
கடந்த ஞாயிறு தினக்குரலை எடுத்துப் பாருங்கள்
யாழ் இந்து உயர் வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆணுக்கு அதே குலத்தைச் சேர்ந்த படித்த அழகிய மணப்பெண் தேவை என்று எத்தனை விளம்பரம் வந்திருக்கிறது.
முதலில் சமூக அக்கறை கொண்ட வீரகேசரி மற்றும் தினக்குரல் போன்ற பத்திரிகைகள் இம்மாதிரியான விளம்பரங்களை அடியோடு புறம்தள்ள வேண்டும் என்கின்ற தாழ்மையான வேண்டுகோளினை முன்வைக்கின்றேன்.

