11-11-2005, 06:18 PM
Quote:புரட்சிகள் தேவைதான் அதனைப் பெண்கள் தம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சீதனம் கொடுப்பதா எனச் சீறி எழும் பெண்கள் தம் ஆண் சகோதரர்கள் வாங்கும் போது மட்டும் ஏன் எதிர்பதில்லை. வரும் பணம் இவர்களின் வங்கிக் கணக்கை நிரப்புவதாலோ?????
இது சரியான கேள்வி.. ஆனால் எத்தனை பேர் அப்படி தங்கள் சகோதரர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் இதை எதிர்க்க வேண்டும். அதே வேளை வெறுமனே தலையை ஆட்டி தாலியைக்கட்டிக்கொள்வதோடு நின்றுவிடாமல் ஆண்களும் இதை சாதிக்கலாம் அல்லவா?? ஏன் என்றால் அதோடு சம்பந்தப்பட்டது வாழப்போகும் ஆணும் பெண்ணுமே. அவர்கள் இருவரும் சீதனம் கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லை என்று உறுதியாய் நின்றால் யார் என்ன செய்துவிட முடியும். தன் வங்கிக்கணக்கை நிரப்ப நினைக்கும் தாயென்ன சகோதரி என்ன ஒன்றும் செய்துவிட முடியாது தானே. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

