11-11-2005, 01:38 PM
கடந்த சில வருடங்களாக நானும் எனது நண்பர்கள் சிலரும் எந்தவொரு சீதனம் சம்பந்தப்பட்டு நடைபெறும் திருமணம் எதிலும் கலந்து கொள்வதில்லை, வாழ்த்துக்கள் அனுப்புவதில்லை. ஏன் வரவில்லை என்று வினவுபவர்களுக்கு எங்கள் காரணத்தை தெளிவாக சொல்லியும் வருகின்றோம். எங்கள் அணியில் மேலும் சிலரை சேர்த்தும் வருகின்றோம். சிலவேளைகளில் இது ஒருவகையான முரட்டுத்தனமான கொள்கையாக இருந்தபோதும் எம்மளவில் சில செயல்முறையில் அமைந்த ஆரோக்கியமான மாற்றங்கள் சிலவற்றை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் தொடர்கின்றோம். எமது அணியில் சேர யாழ் கள நண்பர்கள், நண்பிகள் முன்வருவார்களா?????????

