06-22-2003, 09:18 AM
யாழ்.பல்கலைக்கழக மைதானத்தில்
பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு
முப்பெரும் பேரணிகளாய் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட
மைதானத்தை வந்தடைந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்,
ஒன்று திரண்டு உரிமைக்குரல் எழுப்பினர். யாழ்ப்பாண வரலாற்றில் குறித்து வைக்கப்படவேண்டிய
நாளாக, 17.04.2002 அன்றும் இடம்பிடித்திருக்கின்றது.
பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வானது தமிழீழ வரலாற்றில் தனக்கென்றோர் இடத்தைப் பதித்துநிற்கின்றது.
தமிழர் தாயகத்திலும், அதற்கு வெளியே தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் எல்லாம், பற்றிப்படரும் பொங்குதமிழ் பேரெழுச்சியின் தாய்வீடு யாழ் பல்கலைக்கழகம் என்பது மிகையாகாது. ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், அடக்குமுறையாளனின் இறுக்கமான கொடுங்கரங்களுக்கு மத்தியில் நின்றபடி, அஞ்சாத்துணிவுடன், கடந்த ஆண்டு பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வை, யாழ் பல்கலைக்கழக சமூகம் நடத்தியது. அன்று அந்த மாணவ சமூகத்தால், வரலாற்றுப் பொறுப்புடன், விதைக்கப்பட்ட அந்த எழுச்சிக்கான விதை இன்று, மரமாகி விருட்சமாகி நிற்கின்றது.
யாழ் குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் எழுபதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
சிங்களத்தின் துப்பாக்கி முனைகளுக்கு மத்தியில் அன்று நடந்த பொங்குதமிழ் எழுச்சி நிகழ்ச்சிக்கும் இன்று நடைபெற்றுள்ள பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுக்கும் இடையே பாரிய வேறுபாடு.
சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் பிடிக்குள்ளே புலிகள் வந்து பகிரங்கமாக உறுமும் அளவிற்கு நிலைமை இன்று மாறிவிட்டது.
வன்னியில் இருந்து சென்று கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் இதில் கலந்துகொண்டார் என்பதும், விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் செல்வி தமிழினி அவர்கள் உட்பட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டதும் இப்பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வின் மற்றுமொரு சிறப்பு.
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை வலியுறுத்துவதுடன், தமிழர்தம் ஏகபிரதிநிதிகள் யார் என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு ஓங்கி உரைக்கும் ஒரு சனநாயக எழுச்சியின் வெளிப்பாடாக பரிண மித்திருக்கும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள், தமிழர் விரோத சக்திகளின் இதயங்களில் இடியாய் இறங்குகின்றன. தமிழ்மக்களால், மேற்கொள்ளப்படும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகள் சிங்களப் பேரினவாத சக்திகளை கிலிகொள்ள வைத்திருக்கின்றன என்பது, மேற்படி சக்திகளின் அண்மைக்கால ஆத்திரமூட்டும் பேச்சுக்களில் வெளிப்பட்டு நிற்கின்றன. வரலாற்றுப் பொறுப்புடன், இளம்சந்ததி ஆரம்பித்திருக்கும் இவ விடுதலைப்பணி, போற்றுதற்குரியது.
இன்னும் அது உறுதிபெறும், வேகம்பெறும் எனநம்பலாம். தேசியத்தலைமையின் கீழ் அணிவகுத்துள்ள எம் தேசம் இனிமேல் தூங்காது. விடுதலையின் சுமையை இனிமேல் தன்தோழில் தாங்கும்.