Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#72
நாம் இங்கு பிரஸ்தாபிக்கப்
போகின்ற விடயம் .
புதிய அரசால் தளர்த்தப்பட்டிருக்கும் பொருட்கள் மீதான தடையினால் எம்மக்கள் மத்தியில் புூரண பயன்பாட்டை ஏற்படுத்திவிட முடியுமா? அத்தோடு கிடைக்கப்பெறும் பொருட்களை எமது பகுதிகளிலேயே நுகரவும், கொள்வனவு செய்யவும் தகுந்த வசதி வாய்ப்புக்கள் உண்டா? அன்றி பொருட்களை எமது பிரதேசங்களில் பயன்படுத்தக்கூடிய ஏதுவானதொரு நிலமை உள்ளதா? இதுவே
எம்முன் எழுந்துள்ள கேள்விகளாகும்.
'புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிற்கு தடைநீக்கப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி'
'இதுவரையில் அமுல்ப்படுத்தப்பட்டு வந்த பொருளாதாரத்தடையானது தளர்த்தப்பட்டது. இனி தமிழர் வாழ்வில் விமோசனம் உண்டாகும்'
'வன்னிப் பகுதிக கு ஒரு லொறியில் சீமெந்து அனுப்பி வைப்பு'
'தடைநீக்கப்படாத பொருட்களில் பற்றரிகளும், முட்கம்பிகளும், போர்ப்பயன்பாடுடைய பொருட்களும் அடங்கும். சீமெந்து, கட்டிடப் பொருட்களும் மட்டுப்படுத்தப்பட்டஅளவிலேயே கொண்டு செல்ல அனுமதி'
இவையெல்லாம் இன்று வெளியுூர், உள்@ர் சர்வதேச ஊடகங்களினதும், பத்திரிகைகளினதும் முக்கியமான தலைப்புச் செய்திகளாகவும் பல்இன மக்களால் பிரஸ்தாபிக்கப்படுகின்ற முக்கியமானதொரு விடயமாகவும் நோக்கப்படுகின்றது.
கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்று வரும் போரினால் மூர்ச்சையாகி நின்ற மக்கள் நிம்மதியானதொரு விடிவைத்தேடி நின்றனர். இலங்கையின் ஒவ வொரு காலகட்ட அரசியல் தலைமை மாற்றங்களின் போதும் அவர்களது எதிர்பார்ப்புக்கள் அதிகமாக இருந்தன. அந்தவகையிலேயே தற்போது இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னாலும் மக்களினது எதிர்பார்ப்புக்கள் பலவாறாக இருந்தன. அதிலொன்றே கடுமையான முறையில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தமிழர் தாயகப் பிரதேசங்களிற்கான பொருளாதாரத் தடையானது நீக்கப்படுமா எனும் மேற்படி எதிர்பார்ப்பு ஆகும்.
கடந்த வருட இறுதியில் இலங்கையின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட ஐ. தே. முன்னணியானது சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் இனச்சிக்கலைத் தீர்த்துக் கொள்ள முன்வந்தது. அதற்கான முன்னோடி முயற்சியாக பொருளாதாரத் தடையில் தளர்வை ஏற்படுத்தவும் முன்வந்தது. இது எம்மக்களின் மத்தியில் மாத்திரமன்றி பெரும்பான்மை இனத்தவர்கள் மத்திய}லும் மன ஆறுதலை ஏற்படுத்தியது. அவர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.
ஆனால், நாம் இங்கு பிரஸ்தாபிக்கப்போகின்ற விடயம் இதுவன்று. புதிய அரசால் தளர்த்தப்பட்டிருக்கும் பொருட்கள் மீதான தடையினால் எம்மக்கள் மத்தியில் புூரண பயன்பட்டை ஏற்படுத்திவிட முடியுமா? அத்தோடு கிடைக்கப்பெறும் பொருட்களை எமது பகுதிகளிலேயே நுகரவும், கொள்வனவு செய்யவும் தகுந்த வசதி வாய்ப்புக்கள் உண்டா? அன்றி பொருட்களை எமது பிரதேசங்களில் பயன்படுத்தக்கூடிய ஏதுவானதொரு நிலமை உள்ளதா? இதுவே எம்முன் எழுந்துள்ள கேள்விகளாகும். அவை சார்ந்த விடயங்கள் தொடர்பாக இனி ஆராய்வோம்.
போரில் பாதிக்கப்பட்ட தமிழினத்தின் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகள் பல இன்றும்கூட தீர்க்கப்படாதிருக்கும் நிலையே உள்ளது. தொடங்கப்பட்டிருக்கும் சமரசப் பேச்சுவார்த்தைகள் சுமூகமான முறையில் நடைபெற்று முன்னேற்றம் காணப்படும் பட்சத்திலேயே அடுத்தகட்டப் பிரச்சினைகள் கவனத்திலெடுக்கப்படும் எனும் போக்கே நிலவுகின்றது. நிலமை இவ வாறிருக்க வெறுமனே பொருட்களை அனுப்புவது மட்டும் பெரியளவிலான பயன் எதையும் எமக்குத் தந்துவிடப் போவதில்லையென்பதனையே நாமிங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அதற்காக பொருட்கள் மீதான தடை நீக்கம் என்பது வேண்டாத ஒன்றாக நாம் கருதவில்லை. அது எம்மக்களின் அடிப்படை வசதி வாய்ப்புக்களில் தேவையானதொன்று. ஆனால், அதற்கு முன்னர் தீர்த்துக் கொள்ளப்பட வேண்டிய பிரச்சினைகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையாக இருக்கும் போது அவற்றைத் தீர்த்துக் கொள்ளாது பொருட்கள் மீதான தடைதளர்வினை ஏற்படுத்தினால் மக்களாகிய நாம் எவ வாறு தகுந்த முறையில் இந்நடவடிக்கையால் பயனடைய முடியும்.
முதலில் பொருளாதாரத்தடை நீக்கமென்றால் என்னவென்று பார்ப்போம். இரு நாடுகளுக்கிடையில் தடைப்பட்டிருக்கும் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் ஏற்படுகின்ற சுமூகமான ஓர் நிலையே பொருளாதாரத் தடைநீக்கம் எனப்படும். அதாவது, சிங்களப் பகுதிகளிலும் அன்னிய தேசத்திலும் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களைத் தமிழீழப் பகுதிகளுக்கு அனுமதிப்பது போன்று எமது தாயகப்பகுதிகளிலும் காணப்படும் மூலப்பொருட்களை உற்பத்திசார் பொருட்களையும் தென பகுதிகளுக்கும், இதர பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்ய சிங்கள அரசு முன்வர வேண்டும். எனவே, பொருளாதாரத் தடை எதுவுமற்று இந்நடவடிக்கையானது எதுவித தடங்கலுமின்றி சுமூகமான முறையில் பரிமாற்றம் செய்வதான நிகழ்வே உண்மையில் பொருளாதாரத் தடைநீக்கமெனப்படும். இந்நிலமையானது சரியான முறையில் பேணப்படும் போதிலேயே இருசாரார் மட்டத்திலும் பணப்புழக்கம் ஏற்படும் ஏதுநிலையுண்டாகும். அத்தோடு இருபக்க வர்த்தக நலன்களும் பேணப்படும்.
எனவே, ஐ. தே. முன்னணி அரசு பொருட்கள் மீதான தடை தளர்வினை ஏற்படுத்தி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியது போன்று பல வருடங்களக எமது தாயகத்தில் ஏற்றுமதிகளின்றி தேக்கநிலை கண்டுள்ள உற்பத்திப் பொருட்களை தென்பிரதேசங்களிற்கு எம்மக்கள் ஏற்றுமதி செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். அவ வேளையில்தான் எம்மக்களில் அதிகூடிய கொள்வனவுச் சக்தியுடையவர்களாக இனம் காணப்படும் அத்துறை சார்ந்த மக்கள் தடை நீக்கப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குரிய வசதி வாயப்பு உண்டாகும். அத்தோடு அவர்களைச் சார்ந்துள்ள சாதாரண மக்கள் மத்தியிலும் பணப்புழக்கம் ஏற்படும். தமது தேவைகளைப் புூர்த்தி செய்து கொள்வதற்கு வேறோருவருடைய உதவிகளை எதிர்பார்த்திராது தமது வருமானங்களைக் கொண்டே தமது தேவைகளைத் தீர்த்துக் கொள்ளும் நிலையுண்டாகும்.
போரில் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களில் பெரும்பலானோர் இன்றும் கூட பசி பட்டினியால் வாடுகின்ற நிலை ஒழிக்கப்படவில்லை. தொடரும் இந்நெருக்கடி நிலைகளை முதலில் புதிய அரசு அகற்றுவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். முற்று முழுதாய் கொள்வனவுச் சக்தியை இழந்திருக்கும் எம்மக்கள் மத்தியில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டியது நிவாரணப் பணியேயாகும். அதனைப் பெற்றுக் கொண்டு அவர்களது வாழ்க்கை ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியதன் பின்னர் போரில் அவர்கள் இழந்த அனைத்திற்குமான இழப்பீட்டுத் தொகையினை வழங்க வேண்டும். அதன் பின்னர் அதனோடிணைந்த செயற்பாடுகளாகக் கருதப்படுகின்ற மேலதிகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதுவே நல்லதெனப்படுகின்றது. அதுவே ஆரோக்கியமானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தும்.
இன றுவரை எமது மண்ணில் நடைபெற்றது போர். எனவே போர் நடந்த பிரதேசத்தில் என்ன நடந்திருக்குமென்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டியதல்ல. மக்கள் ஒவ வொருவரும் ஏதோ ஒருவகையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல குடும்பங்களில் குடும்பத்தலைவர்களை போர் சாய்த்தது. பலரை அங்கவீனராக்கியது. இப்படியாகப் பலரும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றபோது பொருட்களைக் கொள்வனவு செய்யவும், சுயதொழில் வாய்ப்புக்களைத் தேடிக் கொள்ளவும் எப்படி அவர்களால் முடியும்? எங்கிருந்து அவர்களுக்கு செலவு செய்வதற்குரிய பணம் கிடைக்கும்?
இராணுவ நவடிக்கைகளின் போதெல்லாம் நாம் பயன்தரும் சொத்துடமைகளையும், விளைநிலங்களையும் கடலையும் விட்டுக் குடிபெயர்ந்தோம். வேலை வாய்ப்பையிழந்தோம். தொழில் புரிவதற்கான அடிப்படைக் கருவிகளையும் அதனைக் கொள்னவு செய்வதற்கான மூலதனங்களையும் இழந்தோம். இடம்பெயர்ந்த இடங்களிலிருந்தபடி சிறு கைத்தொழில் முயற்சிகளையாவது மேற்கொள்வோம் என்றாலும் அதற்கான கருவிகள் தடை செய்யப்பட்டதனால் முடக்கம் ஏற்பட்டது. விவசாயம் செய்யவோ அன்றி கடல்சார் தொழில்களைச் செய்யவோ தகுந்த வசதி வாயப்புக்களின்றி எம்மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர். ஒவ வொருநாள் பொழுதையும் ஏதோ கிடைப்பதைக் கொண்டு வாழப்பழகிக் கொண்டார்கள்.
அத்தோடு தற்போது தத்தமது சொந்தத் தாயகப் பிரதேசங்களில் குடியமரத் தொடங்கியுள்ள எம்மக்களுக்கு உடனடி நடவடிக்கையாக நிவாரணப்பணிகளை ஒழுங்குபடுத்திக் கொடுக்க வேண்டும். கடந்த கால சந்திரிகா அரசால் தடைப்படுத்தப்பட்டு இன்றுவரை ஒழுங்குபடுத்தப்படாதிருக்கும் நிவாரணப் பணிகளால் வெட்டுகள், தளர்வுகள் போன்றவற்றை மீளப் பெறக்கூடிய ஒழுங்குகளை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உணவாகவும், பண உதவிகளாகவும் இந் நிவாரணப் பணிகளைச் செய்து முதலில் எம்மக்களை மீண்டும் தெம்புள்ள சமூகமாக மாற்றியதன்பின் பிற ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளும் போதிலேதான் நல்ல பயனை உண்டாக்க முடியும் என்பது எமது கருத்தாகும். இதைப் புதிய அரசு கவனத்தில் எடுக்குமா?
ஏனெனில், போர் நடந்து முடிந்த எந்தவொரு நாட்டிலும் நிலைமை சுமுகமானதொரு நிலைக்குத் திரும்பியதன் பின்னர் முதலில் அங்கு நடைபெறுவது றேம்கூறப்பட்ட நிவாரணப் பணிகளும் அதனோடிணைந்த இழப்பிற்கான புனரமைப்புப் பணியுமேயாகும். அதன் அடிப்படையிலேயே அரசு இந்நடவடிக்கைகளை எமது பகுதிகளிலும் மேற்கொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கின்றோம். அதில் தவறுமில்லையே. அழிக்கப்பட்டவையும், இழக்கப்பட்டவையும் அனைத்தும் எம்மக்களினது. அழித்தவர்கள் அரச படைகள். எனவேதான் இதை அரசு பக்கமிருந்து எதிர்பார்க்கின்றனர்.
புதிய அரசால் வழங்கப்படுகின்ற 'செய்து கொடுக்கப்படும்' எனும் பழைய பாணியிலான வாக்குறுதிகள் எதனையும் எம்மக்கள் நம்பமாட்டார்கள். ஏனெனில், கடந்த அரச தலைமைகளின் வாக்குறுதிகள் யாவும் காற்றோடு பறந்து போனது இன்றும் அவர்கள் நினைவில் நிலைத்துள்ளது. அவ வரலாற்றுத்தவறை தற்போதைய அரசும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதுதான் அவர்களது விருப்பமாகவுள்ளது.
முதலில் எம்மக்கள் அரசின் இந்நடவடிக்கை மீது நம்பிக்கை கொள்ளக்கூடியவாறு முன் முயற்சிகளை ஏற்படுத்த முன்வரவேண்டும். மக்கள் இழந்த அனைத்திற்குமான இழப்பீடுகளை வழங்கியுதவ முன்னோடி முயற்சிகளையாவது செய்துகொள்ள வேண்டும். அரச படைகளினால் நிர்மூலமாக்கப்பட்ட அரச, தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்பனவற்றை மீள்புனரமைப்புச் செய்துவைத்து அவையாவும் தகுந்த முறையில் மீண்டும் இயங்குவதற்குரிய ஒழுங்குகளைச் செய்ய வேண்டும். அப்போது அத்துறைசார்ந்த தொழிலாளர்கள் அனைவரிற்கும் மீண்டும் தொழில்வாய்ப்புக் கிடைக்கும். அதன்மூலம் வாழ்வுநிலைச் சிக்கலைத் தீர்த்துக் கொள்ள ஏதுவானதாக இருக்கும் காரணிகளில் ஒன்றான பணப்புழக்கம் என்பது உண்டாகும்.


சாதாரண தொழிலாளி முதல் விவசாயிகள் வரை
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
தமிழர் வாழ்வியல}ல் விவசாயம் என்பது இன்றியமையாததொன்று. ஆனால், ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட எமது பிரதேசங்களிலும் சரி அவர்கள் வாழும் பகுதிகளிலும் சரி இன்று விவசாயத்தை மேற்கொள்ளக் கூடியதொரு ஏதுவான நிலை உண்டா? அன்றில் வாழ்கூடிய ஏதுநிலை உண்டா? இல்லையோ. ஆக்கிரமிப்புக்குட்பட்டு தற்போது விடுவிக்கப்பட்ட விளைநிலங்கள் உட்பட குடியிருப்புப் பிரதேசங்களில் அரச படையினரால் விதைக்கப்பட்ட இலட்சக்கணக்கான கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாத நிலையேயுள்ளது. அதை அகற்றி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மக்கள் மீளக் குடியேறவும், தமது தொழில களை மேற்கொள்ளவும் அந்நிலங்களில் உள்ள உயிராபத்தை விளைவிக்கக் கூடிய கண்ணிவெடிகளை அகற்றுவதற்குரிய நவீன கருவிகள் எதனையும் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலைமையில் தடைநீக்கப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்து என்ன செய்வது?
அது மாத்திரமின்றி விவசாயத்திற்கு அடிப்படையாக விளங்குகின்ற குளங்களும், அங்கிருந்து நீரைக் கடத்துகின்ற வாய்க்கால்களும், வடிகால்களும் சிதைவடைந்தும், தகுந்த பராமரிப்பின்றியும் இருக்கின்றது. இவற்றைப் புனரமைப்புச் செய்து மீள் ஒழுங்கமைப்பு செய்வதற்கு அத்துறை சார்ந்த திணைக்களங்களுக்கு நிதியொதுக்கீட்டை செய்து கொடுக்க வேண்டும். அத்திணைக்களத்திற்கென நவீன கருவிகளையும் அதற்கான பயிற்சிகளையும் இங்கு பணியாற்றுபவர்களுக்கு வழங்கி அது சிறந்த முறையில் எம்மக்களைச் சென்றடையக் கூடிய ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும். இவை கருத்திலெடுக்கப்படாது உழுவதற்கு வாகனங்களையும் பின்னர் தேவைப்படும் இரசாயனப் பொருட்களையும் உரவகைகளையும் அனுப்பி என்ன பயன் ஏற்படப் போகின்றது. இது 'வாலுமின்றி நு}லுமின்றி பட்டத்தைக் கையளித்து பறக்க விடலாம்வா' வென அழைப்பதற்கு சமமான தொரு நிகழ்வாகவே இருக்க முடியும்.
இது இல்லாதிருக்க தற்போது தடை நீக்கப்பட்ட இரசாயனப் பொருட்களையும், வாகனங்களையும், உரவகைகளையும் கொள்வனவு செய்து உரிய பயனேதும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில், இது அறுவடைக் காலமாகையால் இனி அடுத்தகட்டப் பயிர்ச்செய்கையின் போதே இவை மக்களுக்குத் தேவைப்படும். ஆகவே, எமது பகுதிகளிலேயே தற்போது கிடைக்கும் இவற்றைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்குரிய கட்டிட வசதிகளும் எங்கள் பகுதிகளில் இல்லை. அதைவிட உரவகைகளையும், இரசாயனப் பொருட்களையும் நீண்ட காலத்திற்குத் தேக்கிப் பாதுகாத்து வைத்திருக்கவும் முடியாது. எனவேதான், மனிதாபிமான முறையில் புதிய அரசு பொருளாதாரத்தடை நீக்கம் மேற்கொண்டது என வைத்துக் கொண்டால் அதற்கான முன்னோடி முயற்சிகளாக எமது மக்களின் அடிப்படை வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க முன்வரவேண்டும்.
அத்தோடு நாம் இங்கு இன்னொன்றையும் கருத்திலெடுக்க வேண்டும். மனிதர் வாழ்கின்ற ஓர் புூமியில் அவர்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவைகளாக அமைவன கல்வி, மருத்துவம், போக்குவரத்து வசதி வாய்ப்புக்களாகும். ஆனால், இவையே எம்மண்ணில் போரின்போது சிதைவடைந்த மிக முக்கிய துறைகளாக உள்ளன. கொழும்பிலோ அன்றி பிற சிங்களப் பகுதிகளிலோ மழை என்றால் குடைபிடிக்க முண்டியடிக்கும் வெளிநாடுகள் பலதும் போரில் சிதைவடைந்து போயுள்ள இத்துறைசார்ந்த இழப்புக்களுக்கான புனரமைப்பை எமது பகுதிகளிலும் மேற்கொள்ள நிதியுதவிகளைச் செய்ய முன்வர வேண்டும். அப்படி ஒதுக்குகின்ற பணம் முழுமையான முறையில் எமது பகுதிகளில் புனரமைப்பு பணிக்கும் நிவாரணப் பணிக்கும் செலவழிக்கப்பட வேண்டும்.
எமது பகுதிகளில் மீள் போக்குவரத்து துறையினை விஸ்தரிப்பதற்குரிய வாகனங்களையும், அவற்றுக்கான உதிரிப்பாகங்களையும் போதியளவு கொள்வனவு செய்யவும் எமது பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நவீனரக மருத்துவ சாதனங்களை அறிமுகப்படுத்தியும் வைக்கவேண்டும். போக்குவரத்துக்குரிய வீதிகளைச் சீர்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் முதலில் அத்தொழில்சார் நிறுவனங்கள் இயங்குவதற்கு அழிந்துபோன கட்டிடங்களை மீளக் கட்டியெழுப்ப போதியளவு சீமெந்துகளையும், இதர கட்டிடப் பொருட்களையும் அனுப்பி வைப்பதற்குரிய அனுமதியினை வழங்க வேண்டும். கோடிக்கணக்கான புனரமைப்பதற்கான சீமெந்து தேவைப்படும் போது அனுமதிக்கப்பட்டளவிலேயே சீமெந்து அனுப்பி வைக்கப்படும் என தளர்வுகளிலும் சிறு தடைகளை ஏற்படுத்தினால் அது ஆரோக்கியமாயிருக்காது. இது 'ஆனைப்பசிக்கு சோளப்பொரி'இட்டதொரு செயலாகவே கருதமுடியும். இது விரும்பத் தக்கதான செயற்பாடாகவும் இருக்க முடியாது.

மீனவ சமுதாயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள்-
கடந்த ஓரிரு தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் நடக்கின்றபோரின் போது பெரியளவில் பாதிக்கப்பட்டவர்களில் மீனவ சமூகமும் அடங்கும். அடிக்கடி நிகழும் இடப்பெயர்வுகளின் போது தொழில்சார் உபகரணங்களை விட்டு வந்தனர். இடம்பெயர்ந்த இடத்திலும் கடல்சார் தொழிலை மேற்கொள்ள இன்றுவரை நீக்கப்படாதிருக்கும் கடல்வலய தடைச் சட்டமும் கடற்படையினரின் அச்சுறுத்தலும் தடையாகவுள்ளது. இன்றும்கூட தொழிலுக்கு ஏற்ற இயந்திரம், வள்ளம் செய்யப்பயன்படும் கனியங்கள் என்பன தடை நீக்கப்படாத பொருட்களாயிருக்கின்றனவே. அத்தோடு தமிழர் பொருண்மிய மூலவளங்களில் ஒன்றான உப்பு உற்பத்தியை அதற்குத் தகுந்த இடங்களில் இன்றும் மேற்கொள்ள முடியாதுள்ளதே. நிலைமை இவ வாறிருக்க பொருளாதாரத்தடை நீக்கம் என்பதன் அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
அப்படித்தான் கடல்சார் தொழிலின் மூலம் தேடிக்கொண்ட போதியளவு உணவு வகைகளையும் தேவைக்கதிகமாக சேகரிக்கப்படும் உப்பு போன்ற பொருட்களையும் வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடிகிறதா? அப்படி ஓர் நிலை உருவாக்கப்படும் போதுதான் அத்துறைசார் தொழிலாளருக்கு பணப்புழக்கம் ஏற்படுமல்லவா? அவ ஏற்றுமதி நிலையினால் கிடைக்கப்பெறும் பணத்தைக் கொண்டு தேவையான தடைநீக்கப்பட்ட பொருட்களையும் கொள்வனவு செய்ய ஏதுநிலையுண்டாகும். இதனை அடிப்படையாக வைத்தே முதலில் கண்முன்னே தெரியும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டுவிட்டால் வாழ்வு நிலைக்கு சிக்காகவுள்ள மேலதிக சிக்கல்களைத் தீர்த்து வைக்க முடியுமென்பதை புதிய அரசுக்கு அறிவுறுத்த விரும்புகின்றோம்.
இன்றும் எமது பகுதியில் திரவப் பணத்திற்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. வெளியிடங்களில் இருந்து அனுப்பப்படும் காசோலைக்கான பணத்தினை எமது பகுதி வங்கிகளில் பெற முடியாமலுள்ளது. அப்பணங்களை வடபகுதிக்கு வெளியிலிருந்து பெற்றுவரச் சொல்லும் எமது மக்கள் அங்கேயே தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து வருவரல்லவா? எனவே மேலும் எமது பகுதிகளில் திரவப் பணத்திற்குத் தட்டுப்பாடு நிலவும். இதனால் மக்களின் வசதி கருதி தடை நீக்கப்பட்டு எமது பகுதிகளுக்குக் கொண்டு வரப்படும் பொருட்கள் யாவும் இங்கு தேக்கி வைக்க வேண்டிய நிலை உண்டாகும்.
நவீன உலகப் போக்கிற்கு இசைவாக நாமும் முன்னே நினைப்பதில் தவறு இல்லைத்தானே. அதற்கான தேடலில் எமது மாணவர் சமூகம் உள்ளடங்கலான இளைஞர் சமூகம் ஆர்வம் கொள்வதில் தப்பில்லை. ஆயினும், வானம் தெரியும் கூரையின் கீழும், கூரையே அற்ற இடிந்த கட்டடத் தொகுதிகளிலும், மரநிழலின் கீழ் 'யுனிசெப்' கையளித்த பாய்களிலும் கல்வி கற்கும் எமது மாணவ சமூகத்திற்கு அடிப்படை வசதிவாயப்புக்களை முதலில் அரசு ஏற்படுத்திக் கொடுக்க்டும்? நவீன கலாச்சாரத்திற்கு மிகவும் அத்தியாவசிய தேவையான மின்சார இணைப்பிற்கான முன்னோடி முயற்சிகளையும் செய்ய முன்வரட்டும். இவையனைத்தும் எம்மவர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதன் பின்னர் கணனிகளையும் அதற்கான உசாத்துணைப் பொருட்களையும் கொண்டுவர மக்கள் ஆர்வம் கொள்வர். அதன் பின்னான நடவடிக்கைகளிலும் புூரண தெளிவும் பயன்பாடும் இருக்க முடியும்.
எனவேதான் முன்னர் குறிப்பிட்டது போன்று பொருட்களுக்கான தடை தளர்த்துவதற்கு முன்பு எமது பிரதேசங்களில் அழிந்து போயுள்ள அனைத்திற்குமான புனரமைப்பும் மீள் சீரமைப்பும் நடைபெற வழி செய்து கொடுக்க தற்போதைய ஐ. தே. முன்னணி அரசு முயல வேண்டும். எம்மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறியதன் பின்னர் தடைதளர்வு பற்றியும், மேலதிகச் சிக்கல்கள் பற்றியும் ஆராயலாம். அன்றி முதலில் பேச்சு நடக்கட்டும் பின்னர் மீதியைப் பார்ப்போமெனும் போக்கில் அரசு நடந்துகொள்ளுமேயானால் 'மணற்காட்டில் பாத்திகட்டி தண்ணீர் பாய்ச்சியதொரு' நிகழ்வுக்கு ஒப்பானதொன்றாகவே பொருளாதாரத் தடைநீக்கம் அமையுமென்பதை மீளவும் ஒருமுறை நினைவுூட்டிக் கொள்ள விரும்புகிறோம்.
அ. அன்ரனி
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)