Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சீன ராணுவத்தில் சமையலறைப் புரட்சி!
#1
சீன ராணுவ வீரர்களின் தாக்குதல் திறனை அதிகரிக்க, சமையலறைப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வீரர்களுக்கு சத்துள்ள உணவு சூடாகவும் சுவையாகவும் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சீன ராணுவத்தில் 25 லட்சம் முழு நேர ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கான சமையல் கூடங்களில் நவீன சமையல் சாதனங்களும் பாத்திரங்களும் போதிய எண்ணிக்கையில் வாங்கப்பட்டுள்ளன. சமையலுக்குத் தேவைப்படும் காய்கறி, மளிகைச் சாமான்கள், ஆடு, மாடு, கோழி போன்றவை நல்ல தரத்தில் வாங்கப்படுகின்றன. சமையல் செய்வதற்கு நன்கு பயிற்சி பெற்ற, திறமையான சமையல்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றையும்விட அந்தந்த வேளைக்கு சூடாக உணவு கிடைக்கும் வகையில் அடுப்புகள், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

500 வீரர்களுக்கு மேல் உள்ள படைப்பிரிவு என்றால் அங்கு சமைக்க, பரிமாற இத்தனை பேர் இருக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.

காலையில் முட்டை, ஒரு குவளை பால் தரப்படுகிறது. மதிய வேளையில் சாப்பாட்டுடன் ஏதாவது ஒரு பழம் கட்டாயம் தரப்படுகிறது. இரவில் அரிசி போன்ற வேகவைத்த தின்பண்டத்துடன் அசைவமும் உண்டு.

ராணுவ வீரர்கள் இப்போது தங்களுடைய பாசறைகளுக்கு அருகிலேயே காய்கறித் தோட்டம் போட்டுள்ளனர். கோழி, பன்றி வளர்ப்பிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

தனித்தனி தட்டுகள்: 2003-ல் சீன ராணுவ வீரர்களில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அது நோய்த்தொற்றினால்தான் என்று பின்னர் கண்டறியப்பட்டது. எனவே இப்போது ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தட்டு என்று அவரவர் பொறுப்பிலேயே தரப்பட்டுவிட்டது.
ThanksBig Grininamani...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
சீன ராணுவத்தில் சமையலறைப் புரட்சி! - by SUNDHAL - 11-10-2005, 03:22 PM
[No subject] - by Birundan - 11-10-2005, 03:30 PM
[No subject] - by Danklas - 11-10-2005, 03:31 PM
[No subject] - by Thala - 11-10-2005, 06:07 PM
[No subject] - by அருவி - 11-10-2005, 06:33 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)