![]() |
|
சீன ராணுவத்தில் சமையலறைப் புரட்சி! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சீன ராணுவத்தில் சமையலறைப் புரட்சி! (/showthread.php?tid=2525) |
சீன ராணுவத்தில் சமையலறைப் புரட்சி! - SUNDHAL - 11-10-2005 சீன ராணுவ வீரர்களின் தாக்குதல் திறனை அதிகரிக்க, சமையலறைப் புரட்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வீரர்களுக்கு சத்துள்ள உணவு சூடாகவும் சுவையாகவும் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சீன ராணுவத்தில் 25 லட்சம் முழு நேர ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கான சமையல் கூடங்களில் நவீன சமையல் சாதனங்களும் பாத்திரங்களும் போதிய எண்ணிக்கையில் வாங்கப்பட்டுள்ளன. சமையலுக்குத் தேவைப்படும் காய்கறி, மளிகைச் சாமான்கள், ஆடு, மாடு, கோழி போன்றவை நல்ல தரத்தில் வாங்கப்படுகின்றன. சமையல் செய்வதற்கு நன்கு பயிற்சி பெற்ற, திறமையான சமையல்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எல்லாவற்றையும்விட அந்தந்த வேளைக்கு சூடாக உணவு கிடைக்கும் வகையில் அடுப்புகள், சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 500 வீரர்களுக்கு மேல் உள்ள படைப்பிரிவு என்றால் அங்கு சமைக்க, பரிமாற இத்தனை பேர் இருக்க வேண்டும் என்று கட்டாய உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. காலையில் முட்டை, ஒரு குவளை பால் தரப்படுகிறது. மதிய வேளையில் சாப்பாட்டுடன் ஏதாவது ஒரு பழம் கட்டாயம் தரப்படுகிறது. இரவில் அரிசி போன்ற வேகவைத்த தின்பண்டத்துடன் அசைவமும் உண்டு. ராணுவ வீரர்கள் இப்போது தங்களுடைய பாசறைகளுக்கு அருகிலேயே காய்கறித் தோட்டம் போட்டுள்ளனர். கோழி, பன்றி வளர்ப்பிலும் ஆர்வம் காட்டுகின்றனர். தனித்தனி தட்டுகள்: 2003-ல் சீன ராணுவ வீரர்களில் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அது நோய்த்தொற்றினால்தான் என்று பின்னர் கண்டறியப்பட்டது. எனவே இப்போது ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தட்டு என்று அவரவர் பொறுப்பிலேயே தரப்பட்டுவிட்டது. Thanks inamani...
- Birundan - 11-10-2005 நல்ல விஷயம் எல்லோருக்கும் ஒவ்வொரு தட்டு, அது சரி இதுக்கு முதல் எல்லாருக்கும் ஒரே தட்டா? தட்டு வர ரெம்ப நேரம் காத்திருக்கனும்போல இருக்கே? சீனா சட்டிக்கு பேர்போன ஊரில் தட்டுக்குத் தட்டுப்பாடா? - Danklas - 11-10-2005 ஓய் சின்னா, முகம், சாட்றீ, சின்னகுட்டி வெளிக்கிடுங்கப்பா,, என்னம் எத்தனை நாளைக்குத்தான் சிங்கிள் டீக்கு சொந்த வீட்டிலேயே புருசனா வேலை பார்ப்பியள் ஆ?? :roll: கட்டுங்க நடையை,, சீனாவுக்கு போவம்,, :wink: சீனா பாசை கதைக்கிறது வெகு சுலபம்,. நி ஹைவ் எண்டால் ஹாய் எண்டு அர்த்தம் அம்புட்டும் போதும் ஒரு இராணூவ வீரனாக,,, போகக்கை நாரதரையும், குறூக்ஸையும் கூட்டிக்கொண்டு போங்கப்பா... சிலது சீனப்பாசையில எப்படி சோறு, கோழிக்கறி கேக்கிறதெண்டு சொல்லித்தருவாங்க... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Thala - 11-10-2005 அது எல்லம் சரி இவ்வளவு நாளும் விட்டு இப்ப ஏன் சீனா ராணுவவீரர்களைப் பற்றி கவலைப்பட்டூது.........????. சாப்பாடு போட்டு வளக்கிறதப் பார்த்தா ஏதோ வேள்விக்கு ஆயத்தம் செய்யிறாப் போல கிடக்கு...... எங்கயாவது அமைதிப்படையாப் போகப்போயினமோ என்னவோ......
- அருவி - 11-10-2005 சிறிது காலத்திற்கு முன் சீனா தன் இராணுவத்தில் கணிசமான தொகையைக் குறைத்திருந்தது. தன் அளவிற்கு அதிகமாக இராணுவத்தைக் கட்டி வைத்திருந்தால் வரும் பிரச்சனை தான் இது. ஆட்குறைப்பைச் செய்யும் போதும் செலவுகள் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்ப செய்யத்தொடங்கின குறைப்பு இப்பதான் முடிவடைந்ததோ தெரியல, முடிந்ததன் பின் சத்தான சாப்பாடு கொடுக்க நினைத்திருக்கினம் போல. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (அல்லது இலங்கைக்குப் படை அனுப்பப்போகினமோ தெரியல. இலங்கை சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்ததம் செய்துள்ளது. இலங்கைக்கு அனுப்பினா சாப்பாடும் கிடைக்காமல் போகும் என்று வேள்விக்கு அனுப்ப முதல் சாப்பாடு போடீனம் போல. :wink: :wink: :roll: :roll: ) |